Saturday, April 18, 2020

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்


           கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான். ஆனால் நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகிவிடுகிறது. இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தீர்வு காணவும் முழு வீச்சில் இறங்குவதுண்டு. ஒரு சில மாதங்களாக மருத்துவத்துறையை படு வேகமாக செயல்பட வைத்தி ருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டு தான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன. அவ்வளவு கொடியதா கொரோனா வைரஸ். இதை படித்தால் புரியும்.

கொரோனா வைரஸ் (corona virus) கண்டுப்பிடிப்பு
சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இது நடந்தது டிசம்பர் 31 ஆம் தேதி நடந்தது.

இதை தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் இதை உறுதி செய்து மக்களுக்கு விழிப்பு ணர்வை தீவிரமாக செய்ய தொடங்கியது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்கமால் மருத்துவரை அணுகவும் வலியுறுத்தியது. தற்போது சீனாவின் வுகான் மாநிலத் திலிருந்து 13 மாகாணாங்களிலுள்ள மக்களுக்கு தொற்று பரவ தொடங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் (corona virus)

இந்த தொற்றுக்கு 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே கொரனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7 வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும் n என்பது புதிய என்றும், CoV என்பது கொரனாவையும் குறிக்கிறது.

2002 ல் சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுன்க்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.
இந்த கொரோனா வைரஸ் தொற்றில் ஒன்றான MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேமல் ப்ளூ என்றும் அழைத்தார்கள். ஏனெனில் இது குதிரையிலிருந்து மனிதனுக்கு பரவியது. இக்காய்ச்சலின் போது 800 மக்கள் வரை இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானார்கள்.
இந்த வைரஸ் தடுப்புக்குஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தாலும் இன்றுவரை இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளி டமிருந்து மனிதனுக்கு பரவும் போது மருத்துவத்துறையும் உலக மக்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகிறார்கள்.

கொரோனா வைரஸ் வருவதற்கு காரணங்கள்

சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுகான் மாநிலம். இங்கு 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசித்து வரு கிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதி என்று கண்டறிந்தார்கள்.
சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் ( ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது. இப்படி தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்னமாதிரியான அறிகுறிகள் இருக் கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவைபடிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த அறிகுறியால் மருத்துவமனைக்கு வந்தவர்களில் இதுவரை 9 பேர் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் மற்றும் மூன்று மடங்கு எண்ணிக்கையில் இத்தொற்றால் மக்கள் பாதிப்படைந்திருக் கிறார்கள். காய்ச்சல் என்று மருத்துவமனையை நாடிய மக்களின் எண்ணிக்கையை தெரிவித்தி ருக்கிறது சீன அரசு. ஆனால் சாதாரண காய்ச்சல் என்று போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்த வைரஸ்தொற்றுக்கு உள்ளானவர்களும் பலர் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்களையும் கணக்கில் எடுத்தால் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் பட்டியல் மேலும் நீளும் என்றும் சொல்கிறார்கள்

தொற்று பரவும்

விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய கொரனா வைரஸ் எப்போது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதோ அப்போதே மனிதனிடமிருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும் அபாயம் உண்டு. இதை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அதே போன்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) மனிதனுக்கு மனிதன் இந்த கொரனா வைரஸ் தொற்று பரவுகிறது என்று உறுதி செய்துள்ளது.
இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

கொரோனா வைரஸ் மருந்து

உலக சுகாதார நிறுவனம் உலகில் எங்கு வைரஸ் தொற்று இருந்தாலும் அது குறித்த விழிப்புணர் வையும், தடுப்பு மருந்துகளையும் பரிந்துரை செய்கிறது. இந்த கொரானா வைரஸ் தொற்று பொருத்தவரை உலக சுகாதார அமைப்பு சீனாவில் 300 பேருக்கும், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியாவில் ஒருவருக்கும் இத்தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த மூவரும் சமீபத்தில் சீனாவில் இருந்து வந்தவர்கள். ஆனால் இது குறித்து இலண்டன் MRC- Centre For Global Infectious Disease Analysis at Imperial College London இந்த தொற்று 1700 பேரைக் கடந்து சென்றிருப்பதாக தெரிவித்துள்ளது. இதே போன்று University of Hongkong கொரனா வைரஸ் க்கு 1300க்கும் மேற்பட்டவர்களை தொற்றி இருக்கும் என்றும் கூறுகிறது.

இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை.சீனாவில் தானே இந்த கொரனா வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.

குறிப்பு
பொதுமக்கள் அதிகம் பேர் கூடும் இடங்களில் செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாமல் செல்வதாக இருந்தாலும் முகமூடி அணிந்துகொள்ளுங்கள். இந்த அறிகுறி உங்களுக்கு தென்பட்டால் மருத்து வரை தயங்காமல் அணுகுங்கள். கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுங்கள். கைகளை முகத்துக்கு அருகில் கொண்டு சென்று சுவாசிப்பதையும் தவிர்த்துவிடுங்கள்.