Monday, February 27, 2023

ரயில்வே ஸ்டேஷன் பெயருக்கு பின்னால் சில வார்த்தைகள்

 ரயில்வே ஸ்டேஷன் பெயருக்கு பின்னால் சில வார்த்தைகள்

ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் உள்ளே நுழையும் இடங்களில் பிளாட்பாரங்களில் பெரிய மஞ்சள் பலகை இருப்பதை பார்த்திருப்போம் அதில் அந்த ஊரின் பெயர் இருக்கும். சில ஊர்களில் பெயருக்கு பின்னால் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்ட் உள்ளிட்ட சில வார்த்தைகள் இருக்கும்...

சென்ட்ரல்

இந்தியாவில் வெகு சில ரயில் நிலையங்களில் பெயருக்கு பின்னால் மட்டுமே சென்ட்ரல் என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களாக உள்ளன. பிரிட்ரிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய முக்கியமான ரயில் நிலையங்களுக்கு சென்டரல் என பெயரிட்டனர். அந்த பெயரே இப்பொழுதும் தொடர்கிறது. மும்பை சென்ட்ரல், கான்பூர் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்டரல் ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது உள்ளன.

டெர்மினல்

டெர்மினல் என்பது இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையகளில் ரயில்கள் வர மட்டுமே முடியும். வந்த பின்பு ரயில்கள் அதை தாண்டி செல்ல முடியாது. இது தான் இறுதியான ஸ்டேஷனாக இருக்கும் இப்படியான இறுதியான ஸ்டேஷன்களுக்கு டெர்மினல் என பெயர் வைத்துள்ளனர். உதாரணமாக டில்லியில் ஆனந்த் விகார் டெர்மினல், மும்பையில் பந்த்ரா டெர்மினல் கன்னியாகுமரி டெர்மினல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.

ஜங்சன்

இது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் ஏராளமான ரயில் நிலையங்களில் பார்க்கும் வார்த்தை, ஆங்கிலத்தில் ஜங்ஷன் எனவும், தமிழில் சந்திப்பு எனவும் எழுதியிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ரயில் நிலையில் 2க்கும் மேற்பட்ட ரயில் பாதைகளை இணைக்கும் இடமாக இருக்கிறது. என அர்த்தம், உதாரணமாக மதுரை சந்திப்பை எடுத்துக்கொள்வோம். அங்கு நெல்லை- திருவனந்தபுரம் ரயில் பாதை, நெல்லை -தென்காசி ரயில் பாதை, நெல்லை-திருச்செந்தூர் ரயில் பாதை ஆகிய வழிகளை இணைக்கிறது. இப்படியாக 2க்கு மேற்பட்ட வழிகளை இணைக்கும் ரயில் நிலையங்களை சந்திப்பு என குறிப்பிடுவார்கள்.

கன்டோன்மென்ட்

இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் கன்டோன்மென்ட் என ஒரு ரயில் நிலையம் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Cantt என குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ஊரில் ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதி இருக்கிறது என அர்த்தம். பெங்களூரு கண்டோன்மென்ட், ஆக்ரா கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்கள் எல்லாம் இருக்கிறது.

Wednesday, February 22, 2023

மன நோய்க்கு தீர்வு

 மன நோய்க்கு தீர்வு


யாரையும் இழிவுப்படுத்த வேண்டாம்... விட்டு விடுங்கள்...

குடும்பம் இல்லாதவர்களை கேவலமாகவும் இழிவாகவும் பார்க்காதீர்கள்.. ஏனென்றால் உங்களைப் படைத்தவன் உங்களைத் தனிமரமாக்கிப் பார்க்க ரொம்ப நேரம் ஆகாது.

அவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்கும் அவர்களை நிம்மதியாக விட்டு விடுங்கள்.

ஒரு தம்பதி 50 வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

ஒரு பெண் பலகாலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

திருமணம் முடிந்து 5 ஆண்டுகள்

ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்

கொள்ளவில்லையா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

அவன் 30 வயதைக் கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்

அலைந்துக் கொண்டிருக்கிறானா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்...

அவள் பேரப்பிள்ளைகளை கண்டப் பிறகும், தன் கணவனோடு

கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்.

அவன் கல்விக்காக வெகு தொலைவில் சென்று தனியே தங்கியிருந்து படிக்கிறானா?

பரவாயில்லை விட்டு விடுங்கள்.

அவரவர் அவர் விரும்பியவாறு

வாழ்ந்துக் கொள்ளட்டும்... அவர்களுக்கு

வெளியில் சொல்ல முடியாத உங்களால் கற்பனை பண்ண முடியாத அளவு சோகங்களும், துயரங்களும் இருக்கும்.

அவர்களைக் கண்டால், கொஞ்சம்

புன்னகையுடன் உரையாடுங்கள்.

முடியாவிட்டால், மௌனமாக

கடந்து விடுங்கள்...

அது போதும்...

உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..

அவர்களது வாழ்க்கை

அவர்களுக்கானது..

புறம் பேசி அலைவதை விட, இத்தகைய

மன நிலை அமையப் பெற்றால் நாம் நிச்சயமாக உயர்தவர்கள் தானே