Thursday, June 30, 2022

புட்லூர் அங்காளம்மன் கோயில் தல வரலாறு

 புட்லூர் அங்காளம்மன் கோயில் தல வரலாறு



                        திருவள்ளூர் மாவட்டத்தில் ராமாபுரத்தில் தெய்வமாக அருள்பலிக்கும் புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலின் தல வரலாற்றைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போது கோவில் இருக்கும் பகுதிக்கு அருகே பொன்மேனி என்ற ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார்.

              அவர் வறுமையின் பிடியில் மிகவும் ஏழ் மையாக வாழ்ந்து வந்தார் தன் வறுமையைப் போக்கிக் கொள்வதற்கு ,தன் வறுமையை சமாளித்துக் கொள்வதற்கு மகிசுரன் என்பவனிடம் தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார்.

      ஆனால் வறுமையின் கோரப் தாண்டவத்தால் அவரால் அந்த நிலத்தை திருப்ப முடியவில்லை.

        நிலம் அடமானம் வைத்து பல வருடங்கள்  ஆனது ஒரு நாள் கடனை கொடுத்த மகிசுரன் தனது கடனை உடனே திருப்பி தருமாறு பொன்மேனி யிடம் கேட்டான்.

 

ஐயா தற்போது என்னிடம் உங்களுக்கு கொடுப்பதற்கு பணம்  இல்லை இன்னும் சிறிது நாட்கள் கழித்து நான் உங்களுடைய கடனை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சினான் பொன்மேனி.

     ஆனால்  மகிசு ரனோ தனக்கு இப்பவே பணம் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான் .

         மீண்டும் மீண்டும் பொன்மேனி தன்னால் தற்போது பணம் தர இயலாது என்று கூறினான் இதனால் கோபமடைந்தான் மகிசுரன் ,

    அந்த ஊரில் ஒரு பூங்காவனம் என்ற பகுதி இருந்தது ,

            அந்த பூங்கவனத்தில்  இன்று இரவுக்குள் நிலத்தை உழுது ,விதைத்து நீர் பாய்ச்சுமாறு  மகிசுரன் பொன்மேனிக்கு கட்டளையிட்டான்

   ஆனால் இவை அனைத்தையுமே ஒரே நாளில் முடிக்க முடியாது என்பது  தெரிந்தும் அவன் அவ்வாறு கூறினான் .

ஆனால் பெண்மேனி  மறுப்பு தெரிவிக்காமல் பூங்கா  வனத்திற்குச் சென்றார் .

          அன்று அது சிவராத்திரியாகும் ,வருட வருடம் சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு செல்வார் பொன்மேனி , ஆனால் இந்த வருடம் மகிசுரன் உடன் அகப்பட்டுக் கொண்டதால் இந்த வருடம் போக முடியாமல் போனது.

இவ்வாறு அவன் வருத்தப்பட்டு கொண்டே உழவு உழுவதற்கு தயாரானான் அப்போது அங்கு ஒரு வயதான பெரியவரும் வயதான ஒரு மூதாட்டியும் இவரிடம் வந்து தனக்கு தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார்கள்.

அந்த முதியவர்கள்  தண்ணீர் கேட்கிறார்களே என்று அருகில் இருந்த ஏரிக்குச் சென்று பொன்மேனி  தண்ணீரை எடுத்து வந்தான் ஆனால் அங்கு அந்த பெரியவரும் இல்லை மூதாட்டியும் இல்லை அருகில் ஒரு திடீர் என்று ஒரு மண்புற்று மட்டுமே உருவாக்கியிருந்தது.

ஆனால் இரவு நேரத்தில் அவனுக்கு அந்த புற்று இருக்கும் இடம் தெரியவில்லை .

ஒரு வயதான பெரியவரும் ஒரு வயதான பெண்மணியும்  வந்தார்கள், தண்ணீர் கேட்டார்கள் தற்போது அவர்கள் எங்கு சென்று விட்டார்கள் என்று தெரியவில்லையே  அவன் நினைத்து மீண்டும் தன்னுடைய வேலையை தொடங்க ஆரம்பித்தான்

    நிலத்தை உழுது வதற்காக கருமரியை  வணங்கிவட்டு நிலத்தை உள்ள தொடங்கினார் ,அவர் உழுது  கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

   என்ன என்று அவன் பார்த்த போது அங்கு ஓரிடத்தில் ரத்தம் பீரிட்டு வந்துகொண்டிருந்தது அதை பார்த்த  பொன்மேனி க்கு கண்கள் இருண்டு மயக்கம் வந்தது அங்கேயே பூங்காவனத்தில் மயங்கி கீழே விழுந்தான்.

அப்போது ஒரு பெண்ணின் அசரீரி ஒலித்தது, பக்தனே சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும் வயதான மூதாட்டி பராசக்தி யாக நானும்   உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேம்  நீ தண்ணீர் எடுக்க சென்ற பிறகு சிவபெருமான் இங்கிருந்து சென்றுவிட்டார் ஆனால் நான் மட்டுமே உன் நிலத்தில் புற்றாக மாறிவிட்டேன் இந்த புற்றில் கலப்பை  பட்டதால் , நான் காயப்பட்டு அதிலிருந்து ரத்தம் வந்தது ,   நீ புற்றை காயப்படுத்தியதன்  மூலமாக இந்த உலகத்திற்கு நீ  என்னை காண்பித்து விட்டாய் என்று கூறியது அசரீரியாக இருந்த பராசக்தி .

    மீண்டும் பொன்மேனி தன்னுடைய சுய உணர்வுக்கு வந்த பிறகு, தன்னிடம் அசரீரியாக பேசியது பார்வதி தேவியின் குரல் என்பதை புரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தான் மறுநாள்  இந்த செய்தி காட்டுத்தீயாக ஊர் முழுவதும் பரவியது.

    அந்த புற்று இருந்த இடத்தில் அங்காளம்மனை சயன நிலையில் பிரதிஷ்டை செய்வது என்று ஊர்மக்கள் முடிவெடுத்தனர் அப்படியே அங்கு அங்காளம்மன் பிரதிஷ்டை செய்தனர் பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் இதனை பூங்காவனத்தம்மன் எனும் சிறப்புப் பெயரும் புட்லூர் அங்காள பரமேஸ்வரிக்கு வந்தது.

   இது தாங்க  இந்த கோவில் உருவானது பற்றி சொல்லப்படும் முதல் வரலாறு அடுத்த வரலாறு  என்னனா 

  ஒருமுறை சிவனும் பார்வதியும் மேல்மலையனூர்  செல்வதற்காக தற்போது கோயில் இருக்கும் வழியாக சென்று கொண்டிருந்தனர் அப்போது பார்வதிதேவி யார் கர்ப்பமாக இருந்தார் நீண்டதூரம் நடந்ததால்  அவர்கள் களைப்படைந்தனர் 

கர்ப்பிணியாக இருந்த அங்காளபரமேஸ்வரி அங்கிருந்து வேப்பமரத்தில் அமர்ந்தார் சிவபெருமானிடம் னக்கு தாகமாக உள்ளது கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்று கூற சிவபெருமானும் தண்ணீர் எடுப்பதற்காக அருகிலிருந்த ஒரு நதிக்குச் சென்றார் அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    தண்ணீர் எடுத்து மீண்டும் அந்த நதியை கடந்து அவரால்  பார்வதி தேவியர் உள்ள இடத்திற்கு வர இயலவில்லை. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது சிவன் வருவார் என்று தண்ணீருக்காக காத்துக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார் ஆனால் சிவன் வர தாமதமாகி கொண்டே இருந்தது மேலும் பராசக்தியை  சுற்றி மண் குவிந்து பு ற்று வளரத் தொடங்கியது.

  சிவபெருமான் வருவதற்கும் ,புற்று  வளர்ந்து பார்வதிதேவியை   புற்றுமண் முழுவதுமாக மூடுவதும் சரியாக இருந்தது அங்கு வந்து பார்த்தது சிவபெருமான் பார்வதி தேவியார் புற்றுக்குள் அமர்ந்து விட்டதை பார்த்து அங்கேயே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்துவிட்டார் .

இங்கு பார்வதிதேவிஅங்காள பரமேஸ்வரி யாகவும் கவலை  தேய்ந்த முகத்துடன் நின்ற சிவபெருமானை தாண்டவராயராகவும் மக்கள் வழிபடுகின்றனர் 

இப்படி உருவானதுதான் அந்து புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் என்று இரண்டாவது வரலாறு கூறுகிறது.

இங்கு அங்காளபரமேஸ்வரி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாக மல்லாந்து படுத்து இருப்பது போலவும் வாய் திறந்த நிலையிலும் இயற்கையாகவே தோன்றியுள்ளார்.

புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள கர்ப்பகிரகத்திற்கு நேரெதிரில் ங்களை பரமேஸ்வரி மல்லாந்த வாக்கில் பூங்காவனத்தம்மன்  என்றா பெயரில் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலை வைத்து மல்லாந்து இருக்கிறார்.

இதுதானா திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் ராமாபுரத்தில் தெய்வமாக அருள் பாலிக்கும் புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உடைய தலவரலாறு ஆகும்.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூரில் உள்ளது பூங்காவனத்தம்மன் கோயில். நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.