Tuesday, November 30, 2021

நட்சத்திர ஆருடம்

 நட்சத்திர ஆருடம்



நுரையீரலில் நீர் கோர்த்தால் சிகிச்சை

 நுரையீரலில் நீர் கோர்த்தால் சிகிச்சை



பிஜு பட்நாயக்

 மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்

பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 - 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர்இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா.

பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும் இருந்திருக்கின்றார்.

பிஜு பட்நாயக் ஒரு விமானி.  

                   இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, ​​டகோட்டா என்ற போர் விமானத்தில் பறந்து ஹிட்லரின் படைகளைக் குண்டுவீசித் தாக்கினார்இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது.   சோவியத் யூனியனால் அவருக்கு  அவருக்கு மிக உயர்ந்த விருது மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது.

                                 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி  பாகிஸ்தானியர்கள் காஷ்மீரைத் தாக்கியபோது, ​​டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளைக்கு பல முறை விமானத்தில் பறந்து வீரர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றவர் பிஜு பட்நாயக்.

                இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது, அதாவது ஹாலந்து. டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவின் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்தனர்டச்சு வீரர்கள் இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடல் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் மற்றும் அவர்கள் எந்த இந்தோனேசிய குடிமகனையும் வெளியே விடவில்லை.

 

1945 இல் டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேஷியா விடுவிக்கப்பட்டது, மீண்டும் ஜூலை 1947 இல் பி.எம். சுதன் ஸ்ஜஹ்ரிர் டச்சுக் காரர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்அவர்கள் இந்தியாவின் உதவியை நாடினர்அப்போது இந்தோனேசிய பிரதமர் ஸ்ஜஹ்ரிரை இந்தியாவுக்கு மீட்டு வருமாறு பிஜு பட்நாயக்கிடம் நேரு கேட்டுக் கொண்டார்.  

 

                                   1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி, பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் உயிரைப் பொருட்படுத்தாமல் டகோட்டா விமானத்தை எடுத்துக்கொண்டு, டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பறந்து இந்தோனேசிய ​​ மண்ணில் தரையிறங்கி, இந்தோனேசியப் பிரதமரை  பாதுகாப்பாக சிங்கப்பூர் வழியாக. இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.   இந்தச் சம்பவம் இந்தோனேசியர்களுக்குள் அபாரமான ஆற்றலை வளர்த்து, டச்சு வீரர்களைத் தாக்கி, இந்தோனேஷியா முற்றிலும் சுதந்திர நாடாக மாறியது.

 

                பின்னர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் மகள் பிறந்ததும், பிஜு பட்நாயக்கையும் அவரது மனைவியையும் அழைத்து குழந்தைக்குப் பெயர் சூட்டும்படி வேண்டினார்அப்போது பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் இந்தோனேசியா அதிபரின் மகளுக்கு மேகவதி என்று பெயர் சூட்டினர்இந்தோனேசியா 1950 இல் பிஜு பட்நாயக்குக்கும் அவரது மனைவிக்கும் தங்கள் நாட்டின் கௌரவக் குடியுரிமை விருதான 'பூமி புத்ரா' வழங்கியது. பின்னர் அவருக்கு அவர்களின் 50 வது ஆண்டு சுதந்திரத்தின் போது இந்தோனேசியாவின் மிக உயர்ந்த கவுரவ விருதான 'பிண்டாங் ஜசா உத்மா' விருது வழங்கப்பட்டது.

              பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு, இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது, ரஷ்யாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டு அனைத்து கொடிகளும் இறக்கப்பட்டன.

 

நமது வரலாற்றுப் புத்தகங்கள் நமக்குச் சொல்லாத நமது தேசத்தின் ஒரு சிறந்த மனிதரைப் பற்றித் தெரிந்துகொண்டபோது அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்


பெட்ரோல் பங்க் பராமரிப்பு

 பெட்ரோல் பங்க் பராமரிப்பு

*இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும்*

 

*நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்*

 

*அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்*

 

*இந்த இலவசமாக  கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த  பங்க்  மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல்  உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்*

 

*பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India)  மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்*

 


புற்றுநோய் மருந்து

 புற்றுநோய்  மருந்து

                கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்..

       முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

 பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்

 பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர்

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார்

 அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

 பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.

 கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

 இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.

 தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன்.

 இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

 இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை...  சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்

 இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

 யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.

 

83448 88786: 

Address 

 VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581

 

Source: இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன்.