Tuesday, May 31, 2022

குண்டர் சட்டம் என்றால் என்ன?

 குண்டர் சட்டம் என்றால் என்ன?

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1982 ஆம் ஆண்டு வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டம். இச்சட்டம் குண்டர்கள் தடுப்புச் சட்டம்[1] என பொதுவாக தமிழகத்தில் அழைக்கப்படுகின்றது. 2004 இல் திருட்டு வீடியோ, சி.டி குற்றமும் , 2006இல் மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் இதன் கீழ் சேர்க்கப்பட்டன .

சட்டத்தின் உட் பிரிவுகள்

ஒருவர் குற்றம் புரிவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தைச் சேர்ந்தது குண்டர் சட்டம்

·  கைதாளர்களுக்கு ஒரு வருடம் கட்டாய சிறை , பிணை கிடையாது.

·  எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை.

·  கைதாளர் முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட ஒரு நிர்வாகக் விசாரணைக் குழு ஆகும். கைதாளர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது.கைதாளரே நேரிலோ அல்லது அவர் நண்பரோ உறவினரோ தான் முறையிட முடியும்.

 

அமாவாசை விரதம் இருப்பது எப்படி?

 அமாவாசை விரதம்  இருப்பது எப்படி?

 

அமாவாசை விரதம்இருக்கும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

            சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவதுஅமாவாசைதினமாகும். அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெற முடியும்.

 

          முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும் விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.

 

             அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும்.  முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

 

             மந்திர தீட்சை பெற்றவர்கள் அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

 

           நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும். அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். அமாவாசை தினத்தில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்.