Saturday, November 10, 2018

முதல் முதலாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு


உங்கள் ரேக்டர் தெரிந்து கொள்ளுங்கள.


ஞாபகத்தில் இருக்கட்டும்


06.11.2018 வருட தீபாவளி வாழ்த்துக்கள்


நில அளவு தெரிந்து கொள்ளுங்கள்


நல்ல காரியத்திற்க்கு செல்லும் போது செய்யவேண்டியவை


பகவத்கீதையின் அருளுரை


பூரான் கடிக்கு உடனடி தீர்வு


ஒரு நல்ல செய்தி தெரிந்து கொள்ளுங்கள்


12 ராசிகளுக்கான பரிகார ஸ்தலங்கள்


2019 க்கான அரசு விடுமுறை நாட்கள்


27 நட்சத்திரத்திற்க்கு உரிய பைரவர் கோவில்கள்


தமிழ் மொழி எழுத்துக்கள்


மது நிறுவனங்களின் தொழிலதிர்கள்


உணவே மருந்து


எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு


ஊர்களும் உணவுகளும்



தென் மாநில பெண்களின் தாலி வகைகள்


கலர் கலரான வகை வகையான ரூபாய் நோட்டுக்கள்


Saturday, June 16, 2018

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

             இன்று தந்தையர் தினம்... ஒவ்வொரு தந்தையும் பாராட்ட வேண்டிய "மகள்" சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்





               ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. Error loading player: Network error அப்பா என்றாலே கண்டிப்பு என்ற பிம்பம் மாறி, சமீபகாலமாக அப்பாக்களின் அன்பு குறித்த புரிதல் மக்களிடையே உருவாகத் தொடங்கியிருக்கிறது. கருவில் பத்து மாதம் தன்னை சுமந்து பெற்ற தாயின் பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்ற விழிப்புணர்வு மகன்கள் மற்றும் மகள்களிடம் ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

உலக தந்தையர் தினம்... எனவே, தந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்த தினமும் மேலை நாட்டவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக இது இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாறு... கடந்த 1909ம் ஆண்டு சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் தான், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 

 காரணம்... தனது தாயாரின் மறைவுக்கு பின்னர், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கியதை நினைவு கூறும் வகையில், தந்தையர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என இவர் வலியுறுத்தினார்.


விடுமுறை... இவரது முயற்சிகளின் பலனாக 1910ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1966ம் ஆண்டு இந்த தினத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1972ம் ஆண்டு, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன், தந்தையர் தினத்திற்கு விடுமுறை அறிவித்தார்.

ஜூன் 3வது ஞாயிறு... தந்தையர் தினமானது நாட்டிற்கு நாடு வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் இன்றைய தினமே தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகள்... சமூகவலைதளங்களில் தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பலர் தங்களது புரொபைல் பிக்சர்களை மாற்றி, அப்பாக்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர். அதோடு, அப்பாக்களின் பாசத்தைப் பற்றிய கவிதைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.