Followers

Friday, October 30, 2026

கரும்பாறை முத்தையா கோயில்

மலை மலையா சுடச்சுட சோறு, அண்டா அண்டாவா கறிக்குழம்பு - கறுப்பு நிற கிடா மட்டுமே அனுமதி


·         காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த வினோத திருவிழாவில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு வயிறு முட்ட கறி விருந்து சாப்பிடலாம்.

·         ஆனால் ஆண்களுக்கு மட்டும் தான். இந்த திருவிழாவில் கட்டாயம் பெண்களுக்கு அனுமதி இல்லை.

·         ஆண்டுதோறும் நடைபெறும் வினோத திருவிழா மதுரை மாவட்டம் அனுப்பப்பட்டி அருகே சொரிக்காம்பட்டியில் அறுவடைக் காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

·         செக்காணூரணி அருகே சொரிக்காம்பட்டி – பெருமாள் கோயில்பட்டி கண்மாய்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கரும்பாறை முத்தையா கோயிலில் தான் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும்.



·         400-500 வருடங்களாக நடைபெறும் கிடா வெட்டு விருந்து இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக் காலமான தை அல்லது மாசி மாதங்களில் கிடா வெட்டி அனைத்து சமூக மக்களுக்கும் விருந்து வைப்பதைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

·         இந்த பாரம்பரியம் கிட்டதட்ட 400-500 வருடங்களாக வழக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். இந்த கிடா விருந்தில் சமைக்கப்படும் அனைத்தும் கருப்பு கிடாக்கள் மட்டுமே.

·         காணிக்கையாக கறுப்பு நிற கிடாக்கள் மட்டுமே அளிப்பார்கள். அந்தக் கிடாக்கள் அப்பகுதியில் தானாக வளர்ந்து வரும். தோட்டங்களில் உள்ள பயிர்களை இந்தக் கிடாக்கள் உண்ண வரும்போது முத்தையா சாமியே வந்து உண்ணுவதாக நினைத்து விரட்டுவது கிடையாது என்கின்றனர்.

·         மலை மலையா சோறு, அண்டா அண்டாவா கறிக் குழம்பு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கி நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்படும்.


·         மூட்டை மூட்டையாக வந்த அரிசியை சமைத்து குவியலாக தயார் செய்வார்கள். கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து., பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

·         அதனைத் தொடர்ந்து, அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து கறியில் உள்ள எலும்புகளை தனியே பிரித்து எடுத்து விடுவார்கள்.

·         யார் வேணாலும் எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அங்கே வந்து இருக்கும் அனைவர்க்கும் இலை போட்டு சுடச்சுட சோறு போட்டு, கறி குவியல் வைத்து, குழம்பு ஊற்றி கறி விருந்து வைக்கப்படும்.

·         உணவருந்திய பின் இலையை எடுக்கக் கூடாது என்பதால் அப்படியே விட்டுச்சென்றனர். ஒரு வாரம் கழித்து, இலைகள் காய்ந்த பின்னர்தான் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதிக்குப் பெண்கள் வருவார்களாம்.

காரைக்குடி தேன்குழல்

ஊர் ஸ்பெஷல் - காரைக்குடி தேன்குழல்



·         காரைக்குடி நாட்டரசன்கோட்டையில், செட்டிநாட்டுப் பலகாரம் என்றாலே தனி மவுசுதான்.

·         இதற்கென்றே தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

·         செட்டிநாடு, கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல; பலகார வகைகளுக்கும்தான்.

·         செட்டிநாட்டு வீடுகளில் எந்த விசேஷமானாலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பாரம்பரிய எண்ணெய்ப் பலகாரம் தேன்குழல்.

·         பச்சரிசி மற்றும் உளுந்தம்பருப்பு மாவை பதமாக வறுத்து, காரத்திற்கு ஏற்ப சீரகம், எள் அல்லது மிளகாய்த்தூள் சேர்த்து பிசைந்து, அச்சு மூலம் சுருள் சுருளாகப் பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும்.

·         மொறுமொறுப்பாகவும், நாவில் கரையும் மென்மையாகவும் இருக்கும்.

·         பொரித்த காரமில்லாத தேன்குழலை, சர்க்கரை பாகில் ஊறவைத்து செய்யப்படும் இனிப்பு வகை இனிப்பு தேன்குழல்.

·         இங்கு தயாரிக்கக்கூடிய பலகாரங்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

·         காரைக்குடி ஸ்பெஷலான இந்த பலகாரம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

மண ஓலை

·         மண ஓலை என்பது பனை ஓலைக்குள் (சில பகுதிகளில் தென்னை ஓலை) இனிப்பு பூரணத்தை வைத்து, நீளவாக்கில் சுருட்டி ஆவியில் வேகவைக்கப்படும் ஒரு வகை கொழுக்கட்டை.

·         பாரம்பரியமிக்க இந்த பலகாரம் செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

·         இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்கும்.

·         உடல்நலத்துக்குக் கெடுதல் தராது.

·         செட்டிநாட்டுப் பலகாரங்கள், சென்னை, கோவை, மதுரை என தமிழகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் பயணமாகிக்கொண்டிருக்கின்றன.