Followers

Thursday, November 21, 2024

கணவன், மனைவிக்குள் சண்டை

 கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை



கணவர்/ வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் தெரியுமா ?
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து...
என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம்.
அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார்.
மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும்.
கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள்.
கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு....
ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க.
என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.
நீங்க மட்டும் என்னவாம்,
கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள்.
அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார்.
அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும்.
பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.
நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன்.
ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா.
இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.
என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள்.
அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.
சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.
வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள்.
மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள்.
கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள்.
அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான்.
ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது.
சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என ...
பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை.
கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம்.
பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும்.
அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பேசியே பிரச்சினையை சரி செய்யப் பாருங்க...!
என்ன உங்க வீட்ல விஷேசம் விஷேங்களா?

அப்பா

 அப்பா



அப்பாவை அதிகம்விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் - கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் …!

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள்தான்தங்கமீன்”.

வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய் ,மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள்தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை காட்டிலும் அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன்

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர்

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

பாசம் மிக்கவர்

வீட்டில்சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன்

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

நண்பன்

காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ

தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

எப்பொழுதும் மாறாதவர்கள்

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

உன்னத உறவு

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில்அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர்தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்...

எங்க அப்பா எனக்கு அப்படிதான் “…உங்க அப்பா உங்களுக்கு எப்படினு கமெண்ட்ல சொல்லுங்க .