Friday, August 18, 2023

விமானத்தின் கதவு மூடப்படும் தகவல்

 விமானத்தின் கதவு மூடப்படும் தகவல்

 

முன்னரே விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுதறகு

போர்டிங் கேட் வரை வந்தும், விமானத்தின் கதவு மூடப்பட்டு விட்டதால் விமானத்தில் பயணிக்க முடியாமல் வீடு திரும்பிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். "ஒரு கதவை திறக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதனை திறந்து என்னை அனுமதித்திருக்கலாமே" என்ற கேள்வி நிச்சயமாக பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மையில் இது வெறும் கதவை திறந்து மூடுவதற்கான ஒரு விஷயம் அல்ல. இதில் ஏராளமான தொழில்நுட்ப காரணங்கள் அடங்கியுள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு இந்த பதிவில் பதில் காணலாம்.

விமானத்தில் ஏறுவது என்பது ரயில் அல்லது பேருந்தில் ஏறுவது போல அல்ல. விமான விதிகளின்படி, புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விடும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

எடை :

விமானத்தின் எடையானது சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விமானத்தின் கேப்டன் மற்றும் கோ-பைலட் விமானத்திற்குள் நுழையும் பொழுது, அன்று ஆன் போர்டு செய்ய போகும் எதிர்பார்க்கப்படும் எடை அவர்களிடம் தெரிவிக்கப்படும். எரிபொருள் எடை+ கார்கோ எடை+பயணிகளின் எடை என்று கணக்கிடப்படும். பயணிக்க போகும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் இந்த சமயத்தில் வழங்கப்படாது.

எடை குறித்த இந்த விபரங்களை பைலட் ஃபிலைட் மேனேஜ்மென்ட் கம்ப்யூட்டரில் பதிவு செய்வார். பிற கணக்கீடுகளுக்கு மத்தியில், இந்த குறிப்பிட்ட எடையுடன் கூடிய விமானம் எந்த வேகத்தில் புறப்பட வேண்டும் மற்றும் தரையிறங்க வேண்டும் போன்ற விவரங்களை கம்ப்யூட்டர் வழங்கும்.

இதன் பிறகு எத்தனை டன் எரிபொருள் உள்ளது மற்றும் எத்தனை லிட்டர் இன்ஜின் ஆயில் உள்ளது போன்ற மிக துல்லியமான கணக்குகள் டெக்னிக்கல் லாகில் இருந்து கொடுக்கப்படும்.

அடுத்த சோதனை:

விமானத்தில் ஏற்ற வேண்டிய கடைசி கார்கோவை லோடு செய்த பிறகு மற்றும் கடைசி பயணி விமானத்திற்குள் நுழைந்த பிறகு கமாண்டரிடம் லோடு மற்றும் ட்ரிம் ஷீட் எனப்படும் ஒரு கொத்து தாள்கள் வழங்கப்படும். அவற்றில் பின்வரும் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில், விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் இறுதி எண்ணிக்கை ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் தனித்தனியான எண்ணிக்கை மற்றும் விமானத்தின் ஒவ்வொரு சோனிலும் சேர்க்கப்பட்டுள்ள எடை ஆகியவை கணக்கிடப்படும். விமானத்தின் எல்லா நிலையிலும் புவி ஈர்ப்பு மையமானது பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் அமையும் படி எடையானது லோடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரம்.

விமானத்தின் கதவு மூடப்படும் : தக

பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து, தங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளனரா என்பதை விமான பணியாளர்கள் உறுதி செய்வார்கள். விமானத்தின் கதவுகள் அனைத்தும் சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை விமான பணியாளர்கள் சரி பார்ப்பார்கள் (கதவு ஆட்டோமேட்டிக் மோடில் அமைக்கப்பட்டிருக்கும்) இப்பொழுது விமானம் புஷ்பேக் செய்ய தயாராக இருக்கும்.

இறுதி சோதனை:

விமானத்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அனைவரும் தங்களது இருக்கையில் புஷ்பேக் செய்துள்ளனரா என்பதை ATC -யிடம் பைலட் உறுதி செய்வார். அனைத்தும் சரியாக இருப்பதை ATC பைலட்டிடம் கூறுவார். இப்பொழுது யாரேனும் ஒரு பயணியை உள்ளே அனுமதிப்பதற்கு கூட இந்த ஒட்டுமொத்த செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டும். விமானத்தின் பார்க்கிங் பிரேக்குகள் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் சேருமிடத்தை சென்றடையும் நேரம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்படும்.