Indane Gas Booking
பார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது. இந்த நிலை மாறும்
Saturday, March 28, 2026
தஞ்சாவூர்-சென்னை கிளாம்பாக்கம் அரசு பேருந்துகளின் நேரம்
தஞ்சாவூர்-சென்னை கிளாம்பாக்கம் அரசு பேருந்துகளின் நேரம்
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நேரம் மற்றும் கட்டண விபரம்
தஞ்சாவூர் = சென்னை கிளாம்பாக்கம்
வழி: அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், வடலூர், பண்ருட்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர்,திண்டிவனம்
புறப்படும் நேரம் : காலை 04.40 ( TNSTC ) , 05.55 ( TNSTC ), 06.00( TNSTC ), 07.00 ( SETC UD ),
07.38 ( TNSTC ), 07.45 ( TNSTC ), 07.46 ( TNSTC ), 08.22 ( TNSTC ), 09.00 (
SETC AC), 09.35 ( SETC UD ), 10.40 ( SETC AC SLEEPER SEATER), 11.00 ( SETC NON
AC SLEEPER SEATER), 11.30 ( TNSTC ), 12.00 ( SETC UD ) 12.35 ( SETC NON AC
SLEEPER SEATER ), 12.40 ( TNSTC ),
மதியம் : 01.00 (SETC UD) , 01.30 ( SETC AC
), 01.50 ( TNSTC ), 02.30 ( SETC AC ),
இரவு : 08.35 ( SETC UD), 08.50 ( AC
SLEEPER SEATER ), 09.00( SETC NON AC SLEEPER SEATER), 09.30 ( SETC UD ) , 09.50
( TNSTC ), 10.30( SETC AC )
கட்டணம் : ரூ. 264
TNSTC KUM) ரூ. 420 (SETC AC SEATER ) , ரூ. 328( SETC UD), ரூ. 646 ( SETC AC SLEEPER ), ரூ. 502 ( NON AC SLEEPER)
தஞ்சாவூர் = சென்னை கிளாம்பாக்கம்
வழி: திருவையாறு, அரியலூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம்
புறப்படும் நேரம் : நண்பகல் 12.30 ( VOLVO MULTI AXLE AC SEMI SLEEPER )
கட்டணம் : ரூ. 546
தஞ்சாவூர் = சென்னை கிளாம்பாக்கம்
வழி: கும்பகோணம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம்
புறப்படும் நேரம் : நண்பகல் 12.00 ( AC SLEEPER SEATER), இரவு
09.15 ( AC SLEEPER SEATER), 10.15 ( AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ. 420
(SETC AC SEATER ) , ரூ. 646 ( SETC AC SLEEPER ),
தஞ்சாவூர் = சென்னை கிளாம்பாக்கம்
வழி: அரியலூர்,பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம்
புறப்படும் நேரம் : இரவு 08.05 ( AC UD ), 10.00 ( NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.
328( SETC UD), ரூ. 502 ( NON AC SLEEPER)
தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்..
தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் கும்பகோணம் கோட்ட பேருந்துகள் பகல் நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இரவு நேரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்...
( குறிப்பு: இந்த விபரங்கள் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணத்தில் சிறிது மாறுபடலாம் )
கப்பலின் வேகம் “knots” என ஏன் நிர்ணயிக்கப்பட்டது.
கப்பலின் வேகம் “knots” என ஏன் நிர்ணயிக்கப்பட்டது.
வரலாறு:
• கடலோடிகள் “லாக் லைன்” (Log
line) எனப்படும் ஒரு கருவியை பயன்படுத்தினர். இது சமமான இடைவெளியில் முடிச்சுகள் (knots) கட்டப்பட்ட ஒரு கயிறு.
• அந்த கயிறை கடலில் வீசுவார்கள். கப்பல் நகரும்போது, குறிப்பிட்ட நேரத்தில் (பொதுவாக 30 விநாடிகள்) கடலோடியின் கையில் எத்தனை முடிச்சுகள் கடந்து செல்கின்றன என்பதை எண்ணுவார்கள்.
• அந்த எண்ணிக்கையால் கப்பலின் வேகம் “knots” என நிர்ணயிக்கப்பட்டது.
ஏன் “Knots”?
• 1 Knot = ஒரு கடல் மைல் / மணி (Nautical mile per hour)
• கடல் மைல் (Nautical mile) என்பது பூமியின் சுற்றளவை அடிப்படையாகக் கொண்டது.
1 கடல் மைல் = அகலாங்கத்தில் (Latitude) 1 நிமிடம்
1 கடல் மைல் = 1.852 கிலோமீட்டர்
அதனால் Knots பயன்படுத்துவது கடல் மற்றும் விமான வழிச் செல்லுதலில் ஒரே மாதிரியான துல்லியமான அளவீட்டை வழங்குகிறது. இதனால் இன்று வரை கடல் மற்றும் விமான போக்குவரத்தில் வேகத்தை அளவிடும் நிலையான அலகாக “Knots” பயன்படுத்தப்படுகிறது.



