Friday, March 20, 2026

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஏன் வாழ்த்துகிறார்கள்? உலகிலுள்ள வாழ்க்கை பேறுகள் இந்துக்களால் 16 வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மணமக்கள் அவ்வளவு சுகமும் பெற வேண்டும் என்பதே இந்துக்கள் 16 பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் விழுது விட்டு விழுது விட்டு தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்.

ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படி தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பெயர்கள் அனைத்தையும் மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள். கணவனின் பெயரை மனைவி சொன்னால் கூட மரியாதையும் குறையும் மங்களமும் குறையும் என்று நம்பினார்கள்.

யாராவது ஒருவர் தும்மினால் பக்கத்தில் இருக்கிறவர் வாழ்க என்பார்கள். தும்மினேனாக வழுத்தினாள் என்றான் வள்ளுவன். தும்மும் போது சிலர் நூறு வயது என்பார்கள். பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும் போது சோறு இல்லை என்றால், இல்லை என்று சொல்லமாட்டார்கள். நிறைய இருக்கிறது நாளைக்கு வா என்பார்கள்.

தீபத்தை அணைக்கச் சொல்லும் போது அணையுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். வளர்த்து விடு என்பார்கள். வீட்டில் ஒருவர் இறந்து விட்டதை குறிக்கும் போது சிவலோகப் பதவி அடைந்தார்; பரலோக பிராப்தி அடைந்தார் என்பார்கள். பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதி ஆனாள் என்பார்கள். அதாவது பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது அதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை சாந்தி முகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம் ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது என்பது அதன் பொருள். இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்களமே நிறைந்திருக்கும். நான் சொல்லுவது சராசரி இந்துக்களை ஆத்திரக்காரர்கள் அமங்கலமாக பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்தது அல்ல.

நன்றாக வாழ்கிற பெண்ணை வாழ்வரசி என்பார்கள். பெரும்பாலான இந்து சமூகங்களில் கணவனை இழந்தவன் வெள்ளைச் சேலை அணிய வேண்டும் என்று விதி வகுத்து வைத்திருப்பது ஏன்? இவள் கணவனை இழந்தவள் என்று தனித்து காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும் தூய்மையானவள் என்று குறிப்பதற்காகவும் ஆக மங்கள மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே!

அமங்கலங்கள் குறிக்கப்படும் போதெல்லாம் அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன. இந்த துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன இவற்றை நீ ஏற்றுக்கொள் எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடி பரிந்துரைப்பதன் நோக்கம்.

நன்றி: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்

ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது

ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது


ஜெனரல் கோச் ஏன் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் ரயில்வே இந்த பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதன் உண்மை என்ன என்பதை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்

இந்தியன் ரயில்வே நெட்வொர்க் (Indian railway), உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இதை, தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஏனென்றால், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணத்தை மட்டுமே சொகுசாக உணர்கிறார்கள். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை ரயில்வே நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

ரயிலில் ஜெனரல் கோச் (General Coaches), ஸ்லீப்பர்,3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் உள்ளது. பெரும்பாலும் பணக்காரர்கள் ஏசி பெட்டிகளிலும், நடுத்தர மக்கள் ஜெனரல் ஸ்லீப்பர் கோச்சிலும், ஏழைகள் ஜெனரல் பெட்டியிலும் பயணிப்பார்கள். நமது நிதிநிலைமையை பொறுத்து நம்முடைய கோச் தேர்வு இருக்கும். நம்மில் பலர் ரயில் பயணத்தின் போது கவனித்திருப்போம், ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். சில சமயங்களில் குறுகிய பயணத்தில் நாம் ரயிலின் கடையில் ஓடிப்போய் எரிய அனுபவம் இருந்திருக்கும்.