Sunday, June 18, 2017

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதி

                               தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதி முறைகளை வெளியிட்டது.
அது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது
                  தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு
அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறை விதி -2017
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், டவுன் பஞ்சாயத்தில், செயல் அதிகாரியும், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் இந்த நிலங்களை வரையறை செய்வதற்கு தகுதியான அதிகாரிகள். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை வரையறை செய்து கொள்ளலாம்.
                    இந்த நிலங்கள் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும். இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். அதன்படி, மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60 என்றும் கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.30 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டு மனைகளை மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணமும் செலுத்த வேண்டும். மேம்பாட்டு கட்டணமாக, மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.600, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.350, முதல் மற்றும் 2ம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.250, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 என்றும் செலுத்த வேண்டும். இதுதவிர வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மாநகராட்சி என்றால் குறைந்தது 4.8 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்க வேண்டும். நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் குறைந்தது 3.6 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்க வேண்டும்.
                     வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில், திறந்தவெளி பொது நிலத்தை விட வேண்டும். இந்த திறந்தவெளி பொது நிலம் விடாமல், வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால், அந்த ஒட்டுமொத்த வீட்டு மனைகளின் மதிப்பில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த வீட்டு மனைகளை வரையறை செய்வது குறித்து ஆய்வு செய்ய, ஒரு வீட்டு மனைக்கு ரூ.500 என்ற வீதம் கட்டணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். அதன் பின்னர் ஆய்வுகளை செய்ய வேண்டும்.
                    இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை இந்த புதிய விதிகளின் படி கட்டணம் வசூலித்து வரையறை செய்வதால், அந்த வீட்டு மனையில் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களையும் வரையறை செய்து விட்டதாக அர்த்தம் இல்லை. இந்த அங்கீகாரம் இல்லாத சட்டவிரோத கட்டிடங்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள உரிமை உள்ளது. இனி வரும் காலங்களில் வீட்டு மனைகளை அமைக்கும் போது மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெறவேண்டும். அதாவது, விவசாய நிலம், நீர்நிலைகள், அல்லது அந்த நீர் நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் வீட்டு மனைகளை உருவாக்க அனுமதி வழங்கக்கூடாது.
                  வீட்டு மனைகளை உருவாக்கும் நபர்கள், இது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த அதிகாரிகள் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அதன்பின்னர் உரிய விதி முறைகளை பின்பற்றி வீட்டு மனைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீடுகள் கட்டுவதற்கு மாற்றக்கூடாது. அரசு நிலம், கோவில் நிலம், வக்பு போர்டு நிலம்
ஆகியவற்றிலும் வீடு- கட்டிடம் கட்ட அனுமதி இல்லை. உரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது. 20-10–2016 முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரையறுத்து அங்கீகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால்ஏற்பட்டால் அதற்கு வேளாண் இணை இயக்குநரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

'தந்தையர் தினம்' எப்படி வந்தது ?


'தந்தையர் தினம்' எப்படி வந்தது ?





1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் சொனாரா ஸ்மார்ட் டோட். சொனாரா 16 வயதை தொடும் போது ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் மரணமடைந்தார். அன்று முதல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்து காப்பாற்றினார் வில்லியம் ஜாக்சன். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வு சொனாராவை பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில் 1909-ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தின கொண்டாட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அறிந்த சொனாரா, தன் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என வாதிட்டார். தன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து சர்வதேச தந்தையர் தினமானது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். அன்று சொனாரா எடுத்த முயற்சி, இன்று நம் கனவுகளுக்கு உருவம் கொடுத்த தந்தைகளை நினைவு கூற ஒரு சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது.

தந்தையர் தினம்: முதல் ஹீரோ அப்பாதான்



   

தந்தையர் தினம்:          

   ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது. தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த பரிசுப் பொருள் வாங்கித் தரலாம். தந்தையின் தியாகம் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால்.. தந்தைக்கு மரியாதை தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் எமது அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!!!

Friday, June 16, 2017

EASILY CLEAR YOUR LUNGS



easily clear your lungs


It is important for the people who are either active or passive smokers or who get more exposed to polluted air should take care of their respiratory system.
As people living in big cities which are polluted and smoke frequently are more prone to the various diseases related to the respiratory system.
The common respiratory diseases include bronchitis, asthma, and cough.
So, if you are afraid of getting affected with respiratory diseases then she is a recipe which act as a miracle to clear the lungs.
Many scientists have supported that this recipe is also useful to prevent cancer. So, check out the recipe which you can use regularly for the wellbeing of your lungs-


Things you need:
  • Ginger Root- 1 small piece
  • Turmeric- 2 tsp
  • Water- 1 Liter
  • Garlic- 400 g (peeled and chopped)
  • Sugar- 400 gm (brown sugar is preferable)

Process:

1.     Take a medium size of the container and pour 1 liter of water in it.
2.     Add 400 gm of sugar to it and let it boil for a while.
3.     Later add 1 small piece of ginger, garlic and 2 tsp of turmeric to it.
4.     Let the mixture boil properly and stir it regularly.
5.     Take off the heat and let the solution cool to room temperature.
6.     Store the drink in a glass bottle in the refrigerator.

How to use the Solution?

It is recommended to consume 2 tbsp of the solution every day on an empty stomach in the morning and repeat the dose of 2 tbsp at evening after the last meal.
Carry on this treatment to keep your lungs clear and healthy. The chances of lung diseases will drastically come down with regular use of this remedy.

Removed Knee And Joint Pains In 5 Days



At The Age Of 50, This Drink Removed  Knee And Joint Pains In 5 Days



Here is the best solution to improve the lubrication of joints and reduce joint pain. It consists of a lot of minerals and vitamins which make the joint stronger. The vitamin C, potassium, and magnesium help to reduce inflammation whereas silicon and bromelain energized the body.

Things you need

  • Organic Orange juice- 1 cup
  • Oatmeal- 1 cup
  • Diced pineapple- 2 cups
  • Almonds- 40 g
  • Honey- 40 g
  • Cinnamon- 7 g

Process:

  1. Take 1 cup of oatmeal and add 1 cup of hot water to it. Cook it on low flame and allow it to cool down.
  2. Add 1 cup of orange juice and pineapple juice to the oatmeal mixture.
  3. Add some almonds and cinnamon to it along with some honey and mix it well.
  4. Blend it properly using a blender and your delicious smoothie is ready.
  5. You can store it for a while in the refrigerator or add some ice to it.
  6. Consume this smoothie every day for your breakfast and the joint pain will vanish.
Pass on this remedy to old age people you were known. Everyone at the age of 40-50 years should start consuming this smoothie to keep the joints healthy and get relief from joint pain.