தந்தையர் தினம்:
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ
தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு
மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்
ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே
குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை
கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின்
சிறப்பு. உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள்
வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள்
உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது. தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த
பரிசுப் பொருள் வாங்கித் தரலாம். தந்தையின் தியாகம் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால்.. தந்தைக்கு மரியாதை தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை
உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ
அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் எமது அன்பார்ந்த
தந்தையர் தின வாழ்த்துகள்!!!
No comments:
Post a Comment