Sunday, August 28, 2022

கேரள கோவில்கள்

 கேரள கோவில்கள்

கேரள கோவில்களில் தரிசனம் செய்ய பலர் விரும்புவதின் காரணங்கள, அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை

சைவம், வைணவம்அதிலும் வடகலை, தென்கலை இல்லை..

ஏன் திருநீறே இல்லை மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !!

சந்தனம் மட்டுமே பிரசாதம்..

ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!)

தெருவுக்கு ஒரு புதிய கோவில் , அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் இல்லை..!

கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை

எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம், “ இலவசதரிசனம் கிடையாது…!

தந்திரிகள் , கருவறை பூஜையில் உள்ளோர், இயற்கை உபாதையை கழிக்கவேண்டியிருந்தால்.. மீண்டும் மீண்டும் குளித்தபின்பே கருவறைக்குள் செல்கிறார்கள்( குருவாயூரில் கண்டது )

புஷ்பாஞ்சலி( ்அர்ச்சணை) அவ்வப்போது பெயர், நட்சத்திரம் சொல்லி சக குடும்பானாம்..என்று சப்தமாக சொல்லி , நிமிடத்திற்கு ஒரு ஆரத்தி காண்பித்து தட்டுக்காசு வாங்குவதில்லை

மந்திரங்களை மனதுக்குள் உச்சரித்து, முத்திரைகளுடன் புஷ்பாஞ்சலி மொத்தமாக நடக்கும்

கோவில் பிரசாதம் என்று மெதுவடை, புளியோதரை, அதிரசம் என்று கோவிலுக்குள் மினி ஹோட்டல் கிடையாது

கோவில் பிரகாரத்திற்குள், ஏன் வளாகத்திற்குள்ளேயே யாரும் உணவருந்துவதில்லை ..

கோவில் வளாகத்திற்குள் அன்னதானக்கூடங்கள் இல்லை

நரேந்திர மோதி வந்தாலும் வேட்டி, மேல் வஸ்திரத்துடன் மட்டுமே அனுமதி…( பத்மநாபசுவாமி ஆலயம்)

இந்திரா காந்தியே வந்தாலும் இந்து அல்லாதவர்க்கு அனுமதி இல்லை குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணன் கோவில

கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும், கிருஸ்துவர்கள் அதிகம் இருக்கும் மாநிலமான கேரளத்தில் தெய்வ பக்தி அதிகமாகவே உள்ளது..

அங்கே கோவிலை இடிப்பவர்கள் இல்லை.. கடவுளை இல்லை என்று சொல்பவர்களும் இல்லை!!

கோவிலின் பாரம்பரியத்தை கெடுக்கவும் இல்லை!! கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!!

இதற்கு அங்கு உள்ள எந்த அரசியல்வாதியும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை!!

பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற கட்டுபாட்டை பெண்களே மதிக்கிறார்கள்..

எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்..!! சிறப்பு தரிஸணம் கட்டணம் ஏதும் கிடையாது.. ஏன்?பொதுவாகவே கட்டணமே கிடையாது!!

அர்ச்சகர்களை தொட்டு பேசமுடியாது!!

அவர்கள் இரண்டு வேளையும் குளித்துவிட்டுதான் கருவறைக்குள் செல்வார்கள்..

பூஜை முடியும் வரை யாருக்காகவும், எதுக்காகவும் பூஜையை பாதியில் நிறுத்துவதில்லை!!

அரைத்த சந்தனம்தான் சாற்றுவார்கள்..

அந்த பிரஸாதத்தை அவர்களிடம் பெற வேண்டுமானால் தக்ஷிணை கொடுத்தால் மட்டுமே தருவார்கள்.

(ஏன் என்றால் சந்தனம் அரைப்பது அவ்வளவு சிரமம்! அதனாலேயே பணம் வாங்குகிறார்கள் இதில் தவறில்லை)

ஆனால் இவ்வளவு பணம்தான் தரனும் என்கிற கட்டுபாடு இல்லை!!!

பக்தர்கள் யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு கோவிலை சுற்றி எங்குமே விளக்கு ஏற்ற முடியாது.. கோவிலில் எரியும் பொதுவான விளக்கிலேயே கொண்டுவந்த எண்ணையை விட்டுவிடவேண்டும்..

அதிகாலை நிர்மால்ய தரிஸணம் உண்டு!! பூஜைநேரத்திற்கு பூஜை செய்துவிடுவார்கள்.. யாருக்காகவும் பூஜை நிற்காது..

பூஜைக்கு கட்டணம் செலுத்தியவர்கள் கோவில் நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.. இல்லையேல் அவர்களுக்கக காத்திருந்து பூஜை செய்ய மாட்டார்கள்!!

கோவில் பிரஸாதத்தை விற்பது இல்லை!! கோவிலின் பிரதான கோபுரத்துக்கு வெளியேதான் கடைகளுக்கு அனுமதி!!

வெளியிலிருந்து கொண்டுவரும் பூக்களையோ,மாலைகளைகளையோ, பிரஸாதங்களையோ, கருவறைக்குள் அனுமதிப்பல்லை!!

அர்ச்சர்கள் கோவிலை விட்டு வேறு எங்கும், யார் வீட்டுக்கும் பூஜைக்கு கோவில் நேரத்தில் செல்வதில்லை!!

கோவில் சாற்றும்வரை சன்னதியிலேயே அர்ச்சர்கள் இருப்பார்கள்!!

கோவிலை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள்!!..

மொத்தத்தில் கோவில் பணத்திற்காக அல்ல. கேரளத்து பாரம்பர்யத்திற்காக!!

கயாஸ் தியரி?

 கயாஸ் தியரி?

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்எப்படி?

இதென்ன கயாஸ் தியரி?

அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க.

மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த்தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க அரிதாகக் குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகு தான்,பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது.

தமிழகத்துக்கான மொத்த நீர்த்தேவையில் 70% நீரைத் தருவது தென்மேற்குப் பருவக் காற்று கொண்டு வந்து சேர்க்கும் மழை மேகங்கள் தாம். அந்த மேகங்களைத் தடுத்து நிறுத்தி, குளிர்வித்து மழையாகப் பெற்று, அதைத் தன்னுள் சேமித்து ஊற்றாக மாறி ஆறாக நமக்கு அனுப்பி வைப்பது மேற்குமலைத்தொடர் மலையும்,காடும்.

பிரபஞ்சவெடிப்பில் உருவான மலைத்தொடர்கள் உடல் எனில் அதிலுள்ள காடுகள் அதன் உயிர். நித்தமும் ஒவ்வொரு நொடியும் அவை தன்னைப் புதிதாக உருவாக்கி உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன.

அது எப்படி?

முதன்முறை உருவான காடுகள் தேனீக்களாலும், பறவைகளாலும் பரந்து உருவாகியிருக்கும். சரியா?

அப்படி உருவான காடுகள் அடர்ந்து வளர்ந்த பிறகு, சூரியஒளி உட்புக வழியில்லாமல், புதிய செடிகள் முளைத்திருக்காது தானே! எனில், முதன்முறை உருவான காடு மீண்டும் உருவாக எத்தனை நூறாண்டுகள் தேவைப்படும்? இதற்குத் தான் மான், பன்றி, முயல் போன்ற தாவரப் பட்சிணிகளை இயற்கை உருவாக்கிக் கொண்டது.

இவைகள் மரங்களின் ஊடாகப் புகுந்து சிறு செடி, கொடி, கிழங்களைப் பிய்த்துத் தின்ன, அதனால் உருவாகும் இடைவெளியில் சூரியஒளி புகுந்து தக்க ஈரப்பதத்தை உருவாக்கி, பூஞ்சைக்காளான், சிறுசெடி, கொடிகளுக்கு உயிர் அளிக்க அந்த அடர்ந்த வனம் மீண்டுமொரு முறை உயிர்ப்பிக்கப்படுகிறது.

.

சரி! இப்போது காட்டுக்கு புலியின் தேவை எங்கிருந்து வந்தது? சைவ பட்சிணிகளின் வரம் / சாபம் எந்நேரமும் தின்று கொண்டேயிருப்பது.. எப்போதும் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருப்பது. அப்படி அளவுக்கு அதிகமான மான், பன்றி, முயல்கள் உருவானால் சிறுசெடியைக் கூட தப்ப விடாமல் மேய்ந்து விடுமே!

.

இவற்றைக் கட்டுப்படுத்தத் தான் காடு தனது காப்பாளனாக புலியை உருவாக்கிக் கொண்டது. கிரிக்கெட்டில் தோனி போல காட்டில் புலி! அப்படியொரு ஜென்டில்மேன் அது. பசித்தால் தான் வேட்டையாடும். பசித்தாலும் சூள் கொண்ட மானைக் கொல்லாது. சில நேரங்களில் இளம் மான் குட்டிகளோடு விளையாடுமளவு பெருந்தன்மையானது.

காட்டிலுள்ள சிறுத்தை, நரி போன்ற இதர மாமிசப்பட்சிணிகளைக்கூட சிறுவிலங்கு வேட்டைக்காக உடன் வசிக்க பெருந்தன்மையாகப் புலி அனுமதித்திருக்கிறது. ஆனால், மனிதனோ வெறும் அரைபாட்டில் பிராந்திக்காக புலியையும் கொல்வான்! மானையும் கொல்வான். எனவே தான் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் ஆகிறான்.

ஒரு புலி உயிர் வாழ ஆயிரம் சதுரகிலோமீட்டர் காடு தேவை. அத்தனைப் பெரிய பரப்பளவை பராமரித்து ஆண்டு ஆட்சி செய்கிறது ஒற்றைப் புலி! ஒரு காட்டின் ஆரோக்கியம் அதில் எத்தனைப் புலிகள் வசிக்கின்றன எனும் எண்ணிக்கையில் தான் கணக்கிடப்படும். எனவே தான் ஒரு புலி இறந்தாலும் நாம் பதற

வேண்டியிருக்கிறது..

ஆக, புலிகள் இல்லையெனில் மேற்குமலைக்காடுகள் இல்லை! காவிரி இருந்திருக்காது. கரிகாலன் கல்லணை கட்டியிருக்க முடியாது. ராஜராஜன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருக்க முடியாது.ராஜேந்திரன் கடல்கடந்து வென்றிருக்க முடியாது. இயல்,இசை,நாடகம் இல்லை. எனவே தான், சோழர் கொடியில் புலி வீற்றிருந்தது.

எனவே தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்த தஞ்சை நெற்களஞ்சியத்தின் தொல்குடி மக்கள் தமது கடவுளாக புலிகளை வணங்கினர். கோவில்களில் முதல் சிற்பம் புலி. திருவிழாக்களில் முதல் ஆட்டம் புலியாட்டம். காட்டுக்கே போகாமல், புலியையே காணாமல் புலியின் அருமையை அறிந்திருந்தனர்.

புலிகள் இல்லாவிடின் காவிரி, தென்பெண்ணை, வைகை நமக்கு இல்லை. இவைகள் இல்லாமல் தமிழகம் வெறும் பாலைவனம். ஓடங்களில் சென்றிருக்க முடியாது. ஒட்டகங்களில் தான் பயணித்திருக்கணும்.

நண்பர்களே! மனித வாழ்வின் ஆதாரம் நீர். அந்த உயிர்நீரை அளிப்பது காடுகள். அந்தக் காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள். காடுகளுக்குச் செல்லும் போது ஜாலியாக பியர்பாட்டிலை உடைத்து வீசும் போது, அவை நமக்களித்த உணவை, மொழியை, பண்பாட்டை இழிவு செய்கிறோம் என்பதை உணருங்கள்.

நன்றி:

து.வெங்கடேஷ்

மாவட்ட வன அலுவலர்

கோயம்புத்தூர்