Sunday, August 7, 2022

எறும்பு - நாம்

 எறும்பு - நாம்

 

உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு, டீ யை குடித்து விட்டு, எதேச்சையாய் கவனிக்கிறேன், அந்த வெல்ல உருண்டையின் மேல் அவ்வளவு எறும்புகள்...!!

இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கை தான் என்று எடுத்துக் கொண்டாலும்...

அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும், சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம். அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்த இடம்.

இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம், வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்தது., என்பது ஆச்சர்யமான ஒன்று..!

யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!

இங்கு தான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.

*எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை... உணவும் எறும்பை தேடியிருக்கிறது..!*

தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும்,

மற்றொன்று பொருளாக இருந்தாலும், இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்.

அந்த *புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.*

*நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது.*

என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!!

இதை படிக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்...

எறும்பு தேடியது விரைவாக கிடைத்து விடுகிறது, நாமும் தேடுகிறோம், ஆனால், நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...அல்லது காலதாமதமாகிறதே...?!

ஒரே ஒரு வித்தியாசம் தான்...

*எறும்பு - தனது தேவைக்கு மட்டுமே தேடுகிறது...*

*நாம் - தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்.*

நமக்குத் தேவையானது ஆல்ரெடி நம்மிடம் இருக்கிறது, அல்லது தேவைப்படும் நேரத்தில் அது கிடைத்து வருகிறது.

நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால், தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு, நம் கவனத்திற்கு வருவதில்லை...!

 

No comments:

Post a Comment