Thursday, January 5, 2023

ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ்

 ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ்

நாம் அனைவரும்  வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும் அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கைSGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை 1. கவரிங் லெட்டர் 2. பேங்க் புக் ஜெராக்ஸ் 3. ஆதார் அட்டை நகல் 4. பான் கார்டு நகல் 5. ஆன்லைன் பே ஸ்லிப் இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள்  உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள் தாமதிக்க வேண்டாம்!!

சர்க்கரைவள்ளி கிழங்கு

 சர்க்கரைவள்ளி கிழங்கு

*ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?*

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!

அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

வைத்தியனுக்கு தருவதை

வணிகனுக்கு தருவோம்!

Monday, January 2, 2023

தமிழனுக்கு கார்பரேட் விடும் சவால்

 தமிழனுக்கு கார்பரேட் விடும் சவால்

 

கார்பரேட் நமது குழந்தைகளுக்கு ரசாயனங்கள் கலந்த உணவை கொடுத்து சக்கரை நோயாளிகள் ஆக்க நினைக்கிறான்!!

நாம் பாரம்பரிய உணவை குழந்தைகளுக்கு கொடுத்து வலிமையான தடகள விளையாட்டு வீரர்களாக மாற்றுவோம்!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும்..

இதில், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து, 100 மீ., 800, 5,000 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல், நீச்சல் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்படும்... இதில் மாநில அளவில் பங்கேற்று, வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 1 லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

 

சிறுவர்கள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:

 

*ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்.

*விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும்.

* விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்.

* உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது.

* சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும்.

* விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும்.

* மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படி ஒரு பிரச்னையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரபலிக்கும்.

 

      அந்நிய நாட்டு உணவை உண்ட குழந்தைகள் வாழவேண்டிய வயதில் மரணபடுக்கையில் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்....

நமது பாரம்பரிய உணவை உண்ட குழந்தைகள் உலக அரங்கில் தடகளத்தில் வெல்லும் அளவிற்கு உடல் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ்கின்றனர்!!!

 

       நமது குழந்தையின் சிறந்த எதிர்காலம் நமது பாரம்பரிய உணவில் செக்குஎண்ணெய், தேங்காய் எண்ணெய் சோப், பற்பொடி, சத்துமாவு, சுத்தமான நெய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாட்டுவெல்லம் சுக்கு ஏலக்காய் சேர்க்கபட்ட கடலைமிட்டாய் உங்கள் குழந்தைகளை தடகளத்தில் சிறப்பாக செயல்பட உடலுக்கு வலிமை தரும் பாரம்பரிய உணவுமுறையை நாங்கள் சொல்கிறோம் நன்றி  யதார்த்தம் குழந்தைகளின் காவலன்