Monday, January 2, 2023

தமிழனுக்கு கார்பரேட் விடும் சவால்

 தமிழனுக்கு கார்பரேட் விடும் சவால்

 

கார்பரேட் நமது குழந்தைகளுக்கு ரசாயனங்கள் கலந்த உணவை கொடுத்து சக்கரை நோயாளிகள் ஆக்க நினைக்கிறான்!!

நாம் பாரம்பரிய உணவை குழந்தைகளுக்கு கொடுத்து வலிமையான தடகள விளையாட்டு வீரர்களாக மாற்றுவோம்!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும்..

இதில், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து, 100 மீ., 800, 5,000 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல், நீச்சல் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்படும்... இதில் மாநில அளவில் பங்கேற்று, வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 1 லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

 

சிறுவர்கள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:

 

*ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்.

*விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும்.

* விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்.

* உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது.

* சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும்.

* விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும்.

* மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படி ஒரு பிரச்னையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரபலிக்கும்.

 

      அந்நிய நாட்டு உணவை உண்ட குழந்தைகள் வாழவேண்டிய வயதில் மரணபடுக்கையில் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்....

நமது பாரம்பரிய உணவை உண்ட குழந்தைகள் உலக அரங்கில் தடகளத்தில் வெல்லும் அளவிற்கு உடல் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ்கின்றனர்!!!

 

       நமது குழந்தையின் சிறந்த எதிர்காலம் நமது பாரம்பரிய உணவில் செக்குஎண்ணெய், தேங்காய் எண்ணெய் சோப், பற்பொடி, சத்துமாவு, சுத்தமான நெய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாட்டுவெல்லம் சுக்கு ஏலக்காய் சேர்க்கபட்ட கடலைமிட்டாய் உங்கள் குழந்தைகளை தடகளத்தில் சிறப்பாக செயல்பட உடலுக்கு வலிமை தரும் பாரம்பரிய உணவுமுறையை நாங்கள் சொல்கிறோம் நன்றி  யதார்த்தம் குழந்தைகளின் காவலன்

No comments:

Post a Comment