Tuesday, November 19, 2024

கல்யாணம் பண்ணாமல் வாழ முடியாதா????

 கல்யாணம் பண்ணாமல் வாழ முடியாதா????




நிச்சயமாக முடியும்அதுல சந்தேகம் வேறயா? என்னுடன் வேலை பார்க்கும் ஒரு இளம் பேராசிரியைக்கும் எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த உரையாடல் இது. அவள் பெயர் சுமா என்று வைத்துக்கொள்வோம்.

சுமா : Ma'am, ஒரு கேள்வி

நான் : கேளு மா

சுமா : இந்த கல்யாணம் எல்லாம் பண்ணி தான் ஆகணுமா?

நான் : பண்ணுபண்ணாதஅது உன்னோட இஷ்டம்

சுமா : Ma'am… நான் சுயமா சம்பாதிக்கிறேன். நெனச்ச நேரம் அப்பா, அம்மா கூட போய் இருக்க முடியுது. நெனச்ச நேரம் ஹோட்டல், ஷாப்பிங், பார்க், சினிமான்னு friendsஓட சுத்துறேன். ஜாலியா இருக்கிறேன். எனக்கு இப்போ ஒரு கொறச்சலும் இல்ல. லைப் செமமையா போயிட்டு இருக்கு

நான் : ரொம்ப சந்தோஷம் சுமா

சுமா : இதுல நா இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ன்னு வைங்கஇதெல்லாம் முடியுமா? கல்யாணம் முடிஞ்ச உடனே என்னைய pack பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்பிருவாங்க. அப்புறம் அவன் (அதாங்கபுருஷன் ) பேச்சை மட்டும் தான் நான் கேக்கணும். என்னோட freedom போயிரும். மாமியார், நாத்தனார் தொல்லையை எல்லாம் வேற சமாளிக்கணும்இதெல்லாம் தேவையா?

நான் : ம்ம்ம்வாஸ்தவம் தான்

சுமா : அப்போ சொல்லுங்க ma'am

நான் : அதான் நான் சொல்லிட்டேனேஉன்னோட இஷ்டம்ன்னு

சுமா : சரி ma'am.. நான் உங்ககிட்ட ஒன்னு கேக்குறேன்நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி சந்தோஷமா இருந்தீங்களா இல்ல கல்யாணத்துக்கு அப்புறமா சந்தோஷமா இருக்கிறீங்களா?

நான் : கல்யாணத்துக்கு முன்னாடி பொறுப்புகள் இல்லாம பிரீயா இருந்தேன். இப்போ அது முடியாது. கணவர் குழந்தைகளை பாத்துக்கணும், நெனச்ச நேரம் அம்மா வீட்டுக்கு போக முடியாது.

சுமா : அதான் என்னோட பாயிண்ட்! So இந்த கல்யாணம் ஒரு தேவை இல்லாத தொல்லை

நான் : சுமாநான் ஒண்ணு சொல்றேன். நான் என் அப்பா அம்மாவுக்கு கடைக்குட்டி. ரொம்ப செல்லம். பொறுப்புகள்னா என்னன்னு தெரியாம வளந்தவ. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட லைப்ல நெறைய மாற்றங்கள்பண கஷ்டம்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். குழந்தை வளர்ப்பு எவ்வளவு பெரிய தொல்லைன்னு புரிஞ்சுது.. சமையல் எல்லாம் கத்துக்குறதுக்குள்ளஅப்பப்பாஆனா என்னோட திருமண வாழ்க்கை எனக்கு என்ன எல்லாம் குடுத்திருக்குதுன்னாசாயங்காலம் களைத்துப் போய் வீட்டுக்கு செல்லும் போது என் வரவுக்கக்காக காத்துக்கிடக்கும் குழந்தைகள், ஏதாவது பிரச்சனை என்று புலம்பினால் 'நான் இருக்கிறேன் இல்லபாத்துக்கலாம் ' என்று யானை பலம் தரும் கணவர்ஒரு சுகவீனம் என்றால் அக்கறை காட்டும் புகுந்த வீட்டார்

சுமா : ma'am… இந்த அன்பு, அக்கறை எல்லாம் அப்பா அம்மா கிட்ட இருந்தும் கிடைக்கும்.

நான் : ஆமாகண்டிப்பா கிடைக்கும். ஆனால் எத்தனை நாளைக்கு? அப்பா அம்மாவால் காலம் பூரா உன்னோட வர முடியாது. ஒரு காலத்துக்கு பிறகு நமக்குன்னு ஒரு துணை இல்லையே ன்னு ஏங்குற ஒரு பருவம் வரும். அப்போது திருமண வயசு எல்லாம் தாண்டி போயிருக்கும். திருமணத்தின் பிரதான நோக்கம் companionship - நமக்கென்று ஒருவன் /ஒருவள் இருக்கிறான்/ள் என்ற உணர்வு. என்னதான் திருமணத்துக்கு பிறகு தம்பதிகள் அடித்துக் கொண்டாலும் இந்த உணர்வு மட்டும் கடைசி வரை மாறாது. நாம் பெற்ற பிள்ளைகள் கூட ஒரு காலத்துக்குப் பிறகு படிப்பு, வேலை, திருமணம் என்று தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் வாழ்வின் இறுதி வரை நம்முடன் கை கோர்த்து வருவது நம் வாழ்க்கைத் துணை மட்டுமே. உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் சுமா!

பின்குறிப்பு :

இன்றைய இளைஞர்கள் பலர் நம்ம சுமா வைப் போலத் தான்இந்த கல்யாணம், கூத்தெல்லாம் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய மெசேஜ் இது தாங்கமனிதனுக்கு இந்த companionship மிக அவசியம். நன்மையோ தீமையோ, வாழ்வோ தாழ்வோ, சுகமோ சுகவீனமோஎனக்கு நீஉனக்கு நான் என்று வாழ்வது கணவன் மனைவி மட்டுமே

 

No comments:

Post a Comment