ரயில் பயணம் லக்கேஜ் திருடு ஸ்பெஷல் கைடு
ரயில் பயணமா? லக்கேஜ் திருடு போகாம இருக்க இந்த 7 "மாஸ்டர் பிளான்" தெரிஞ்சுக்கோங்க! (தனியாகப் பயணிப்பவர்களுக்கான ஸ்பெஷல் கைடு)
இந்திய ரயில்வேயில் தனியாகப் பயணம் செய்வது ஒரு கலை! ஆனா, நம்ம கவனக்குறைவால லக்கேஜ் காணாம போனா மொத்த பயணமும் சொதப்பலாயிடும். திருடர்கள்கிட்ட இருந்து உங்க சாமான்களைப் பாதுகாக்க இதோ சில ஸ்மார்ட் டிப்ஸ்:
1. பெர்த் செலக்சன் (Upper Berth is Best):
டிக்கெட் புக் பண்ணும்போது எப்போதும் 'Upper Berth' ஆப்ஷனை தேர்ந்தெடுங்க. 10-ல 9 முறை உங்களுக்கு அது கிடைச்சுடும். மேல படுத்தா திருடங்க கை வைக்கிறது கொஞ்சம் கஷ்டம்.
2. லக்கேஜ் சைஸ் முக்கியம்:
திருடங்க எப்பவும் லேப்டாப் பேக், ஹேண்ட் பேக் மாதிரி ஈஸியா தூக்கிட்டு ஓடுற விஷயத்தைத் தான் தேடுவாங்க. அதனால முடிஞ்ச வரை கனமான சூட்கேஸ் (Trolley Bags) கொண்டு போங்க. யாராலும் அதைத் தூக்கிட்டு ஓட முடியாது. கீழ் பெர்த்துக்கு அடியில வச்சு மறக்காம செயின் போட்டு பூட்டிடுங்க.
3. ரயில் எடுக்கும்போது உஷார்:
ரயில் மெதுவா நகர ஆரம்பிக்கும் போதோ அல்லது ஸ்டேஷனை விட்டு கிளம்பும் போதோ கழிப்பறைக்கு (Restroom) போகாதீங்க. ரயில் நல்ல வேகம் (40–50
kmph) எடுத்த பிறகு போங்க. ஏன்னா, திருடங்க வண்டியில இருந்து குதிச்சு தப்பிக்க வேகம் கம்மியா இருக்கப்போ தான் பிளான் பண்ணுவாங்க.
4. நட்பாக இருங்கள்.. ஆனா ரொம்ப இல்ல!
கூட இருப்பவர்களிடம் பேசிப் பழகுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருங்கள். யாருக்காவது உணவு அல்லது தண்ணீர் கொடுத்து ஒரு சிறிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் (அவர்கள் உங்கள் லக்கேஜை கவனித்துக்கொள்ள உதவலாம்). ஆனால், தெரியாதவர்கள் தரும் எதையும் சாப்பிடாதீர்கள்!
5. அந்த டேக்-ஐ கழட்டுங்கப்பா!
விமானத்துல போயிட்டு வந்த அடையாளமா நிறைய பேர் அந்த லக்கேஜ் டேக்-ஐ கழட்டாம வச்சிருப்பாங்க. அது திருடர்களுக்கு "இவங்ககிட்ட நிறைய காசு இருக்கு"னு காட்டுற ஒரு சிக்னல். தயவுசெஞ்சு அதை முதல்ல கழட்டிடுங்க!
6. ஷோ-ஆஃப் (Show-off) வேண்டாமே:
விலையுயர்ந்த கேஜெட்டுகள், பெரிய ஹெட்போன்கள், பிராண்டட் ஷூக்கள்னு சீன் காட்டாதீங்க. சாதாரண உடை, சாதாரண இயர்போன் போதும். சிம்பிளா இருந்தா நீங்க திருடங்க கண்ணுல பட மாட்டீங்க.
7. கவனத்தை சிதறவிடாதீர்கள்:
ரயில் பயணம் என்பது முழுமையாகத் தனிமையில் தொலைந்து போகும் இடம் அல்ல. புத்தகமோ, படமோ எது பார்த்தாலும் உங்கள் லக்கேஜ் மீது ஒரு கண் இருக்கட்டும். திருடர்கள் எப்போதும் ஒரு "சான்ஸ்"
கிடைக்குமானு தான் பார்ப்பாங்க. கடைசியா ஒரு சின்ன அட்வைஸ்:
ஸ்டேஷன்ல எதாவது வாங்க வெளியே போனாலும், கூட இருப்பவர்களிடம் சொல்லிட்டுப் போங்க. திரும்பி வந்ததும் செக் பண்ணிக்கோங்க.