தலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்!
தஞ்சாவூர்
மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்
என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற
பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த திருத்தலத்தில் இவரை
வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள்
மற்றும் தீராத துன்பங்கள் தர
முயலும் கொடிய தரித்திரங்கள் விலகும்
என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வேறு பல
கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆலயம் தான் மிகப்
பிரசித்தி பெற்ற ஓன்றாகும். 13-ம்
நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன்
குலோத்துங்கனால் இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
அவருக்கு
பிறகு வந்த சேர,சோழ,
பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்
தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால்
புதுப்பிக்கப்பட்ட கடைசிக் கோயில் இதுவென
வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இக்கோயிலின் முன்பகுதியானது 120 அடி உயரமுள்ள ஓரு
ரதத்தினை ஓத்துள்ளது. ரதத்தின் சுவர்கள் மற்றும் கோயில்கள் சுவர்களில்
இராமாயணத்தில் வரும் காட்சிகள் ஒவியங்களாகத்
தீட்டப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள கோயிலின் அழகையும், கற்களில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகளையும், ஒவியங்களின் வனப்பையும் பக்தர்கள் கண்டுகளித்து பரவசமடைகின்றனர்.
ஸ்ரீ
சரபேஸ்வரரின்
தோற்றம்
இரணியன்
என்ற அசுரன் பரம்பொருளை நோக்கி
சாகாவரம் வேண்டி தவம் செய்து
ஈசனிடம் இருந்து தேவர், மனிதர்,
விலங்குகள் முதலியவற்றாலும் பகலிலோ அல்லது இரவிலோ,
வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித
ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக்கூடாது
என்ற அரிய வரத்தினை கேட்டான்.
எதிர்காலத்தில் நடப்பன எல்லாவற்றையும் அறிந்த
பரம்பொருள், இரணியனுக்கு அவன் வேண்டிய வரத்தினை
அளித்தார். இதனால், தன்னை எதிர்ப்பதற்கு
யாரும் இல்லை என்ற கர்வத்தில்
தானே கடவுள். இதனால் தன்னை
மட்டுமே அனைவரும் கடவுளாக வணங்கவேண்டும் எனக்கூறி
கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான்.
இரண்யகசிபுக்கும்
(இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான் பிரகலாதன்.
அதாவது அவனது மனைவி கர்ப்பம்
தரித்த நாள் முதல் நாரத
மாமுனி, தாயின் கர்ப்பத்தில் இருந்த
குழந்தை பிரகலாதனுக்கு போதித்த ஹரி ஸ்ரீமன்
நாராயணன் நாமத்தைக் கேட்டு பிறந்தான். எந்நேரமும்
நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான்.
இதனைக் கண்ட இரணியன் கடும்
கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன்
நாமம் சொல்லாத பிரகலாதனை, மகன்
என்றும் பாராமல் பல வழிகளில்
அழித்திட முயன்றான்.
பரந்தாமனின்
அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி
எங்கே உன் கடவுள்? எனக்
கேட்க, பிரகலாதனோ என் கடவுள், தூணிலும்
இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனக் கூறினான். கோபம்
கொண்ட இரணியன் அருகில் இருந்த
தூணை தன் கதை கொண்டு
தாக்க அதிலிருந்து நரசிம்ம உருக்கொண்டு வெளிப்பட்டார்
பரந்தாமன். இரணியனது வரத்தின்படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த
கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலோ
இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித
ஆயுதங்களும் இன்றி தன் நகத்தினால்,
வீட்டுக்கு உள்ளேயும் இல்லாது, வெளியேயும் இல்லாது வாசற்படியில் வைத்து அவனை வதம்
செய்தார்.
இரணியனின்
குருதியைக் குடித்தால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்
நரசிம்மர். இதனால் தேவர்கள், முனிவர்கள்,
ரிஷிகள் அனைவருக்கும் பயம் வந்தது. மனைவியாக
இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர்மேல் பயம் வந்தது. எங்கே
தன்னையும் கொன்று விடுவாரோ என
பயந்து தேவர்களுடன் எல்லாம் வல்ல ஈசனின்
திருவடிகளில் சமர்ப்பணமானார்கள். கருணைக் கடலான ஈசனுக்கு
கோபம் வந்தது. இதனால் எட்டுக்
கால்களும், நான்கு கைகளும், இரண்டு
இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள்,யாளி முகம்
கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர
பறவையாகவும், மீதி உருவம் அகோர
மிருகமாகவும் இருந்தது. மாமிச வெறியுடன் கூடிய
ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த நரசிம்மர் முன் தோன்றினார்.
மிக
பயங்கரமான எல்லா மிருகங்களும் இணைந்த
உருவம் திடீரென தன் முன்
தோன்றியவுடன் நரசிம்மர், தன்னை அழிக்க ஓரு
சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ ஒங்கி “ஹா” என
சத்தம் எழுப்பியவுடன் அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம்
போய் பயம் வந்தது. அந்தப்
பயத்தினால் சரபேஸ்வரரின் நாராயணனாகி, லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். இவ்வாறு
பரம்பொருள் ஈசன் பிரகலாதன் மற்றும்
தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற
திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
ஸ்ரீசரபேஸ்வரரை
வழிபட உகந்த நேரம் ராகு
காலமாகும். ராகு காலத்தில் சரபேஸ்வரரை
வழிபடுவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில்
வெற்றி பெறுவார்கள். எத்தகைய விதியையும் மாற்றும்
வல்லமை சரபேசுவரருக்கு உண்டு.
இந்த
கலியுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிதமான
அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும் தப்புவதற்கு சரணடைய வேண்டிய ஓரே
தெய்வம் ஸ்ரீசரபேஸ்வரர். இவரை வேதங்கள் அழிக்கும்
கடவுளான அக்கினி தத்துவத்துக்கு உரியவராகக்
குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய தன்பங்களை
தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்கும் தெய்வம் சரபேஸ்வரர்.
இயற்கையின்
சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை,
சூறாவளி, ஆழிப் பேரழிவு, தீவிபத்து,
விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள்
மற்றும் மனவியாதிகள் என்று தீராத துன்பம்
தர முயலும் கொடிய தரித்திரங்களும்
சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஒடிவிடும்.
இப்படி
விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி
சரபேஸ்வரருக்கு மட்டுமே உண்டு. எதிரிகள்
குலநாசம், பில்லி,சூனிய ஓழிப்பு,
மரண பயம் அகலுதல், நீடித்த
ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத
சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக
சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது. மேலும்
இவரை “நரசிம்ம கர்வ பஞ்சக
மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும்
பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை
எனவும், பழைய தஞ்சை மாவட்டத்தில்
இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள
கோயில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
அமைவிடம்
:-
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து திருபுவனம் செல்ல பஸ்வசதி உள்ளது.
ஆலய
தொடர்புக்கு
– (91) 435 – 2430736.
No comments:
Post a Comment