Sunday, July 19, 2020

மூட்டு வலியை காணாமல் போகச் செய்திடும் மருந்து


மூட்டு வலியை காணாமல் போகச் செய்திடும் மருந்து



மூட்டுவலியை காணாமல் போகச் செய்யும் ஒரு மருந்தை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். மூட்டு வலிகளுக்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வைத்தியங்களையும் காணலாம்.

தேவையானவை :
கல் உப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 கப்

தயாரிக்கும் முறை :

          தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து அதில் கல் உப்பைப் போட்டு ஒரு மரக் கரண்டியால் நன்றாக கலக்குங்கள். உப்பும் எண்ணெயும் நன்றாக சேர வேண்டும். பின்னர் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இறுக்கமாக மூடி வைத்திடுங்கள். 8 நாட்களுக்கு அதிகம் வெளிச்சமில்லாத இடத்தில் வைத்திடுங்கள்.
பயன்படுத்தும் முறை : இந்த எண்ணெயை 8 நாட்களுக்கு பின் தேவையான அளவு எடுத்து லேசாக சூடு பண்ணி, மூட்டுப் பகுதியில் தேயுங்கள். லேசாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் தர வேண்டும்.

நன்மைகள் :

இந்த எண்ணெய் மூட்டைச் சுற்றியிருக்கும் தசை மற்றும் இணைப்புகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மூட்டில் இருக்கும் இறுக்கத்தை குறைகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. ஓரிரு நாட்களில் மூட்டு வலி குறைந்துவிடும்.

கல் உப்பின் நன்மைகள்

              பொதுவாகவே கல் உப்பு, வீக்கங்களை குறைக்க பயன்படுகிறது. அந்த காலங்களில் சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கு கல் உப்பையே பயன்படுத்துவார்கள். இது வலி மற்றும் வீக்கத்தை குறைந்துவிடும். திசுக்களின் பாதிப்பை சரி செய்கிறது.

நல்லெண்ணெயின் நன்மைகள் :

           வாரம் ஒரு நாள் நல்லெண்ணெயால் மசாஜ் செய்து குளித்து வந்தால் எலும்புகள் பலம் பெறும் என காலங்காலமாக சொல்லிவருகின்றனர். இவை மூட்டுகளின் இணைப்புச் சவ்வுகளில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறட்சி ஏற்படாமலும் காக்கிறது. இதிலுள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மூட்டுத் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது.


No comments:

Post a Comment