Sunday, March 23, 2025

கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு

கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு

கணவன் மனைவி உறவில் வரும் சண்டைக்கு தீர்வு
மவுனம் மட்டும் தான்..
கணவன் சத்தம் உயரும் போது மனைவி மவுனமாகவும்
மனைவி சத்தம் உயரும் போது
கணவன் மவுனமாகவும்
இருந்துவிட்டால் சண்டை சத்தம் இல்லாமல் போய்விடும்...
இரண்டு பேருமே சத்தம் போட்டுக் கொண்டு இருந்தால் சண்டை பெரிதாகும் சத்தம் வீட்டுக்கு வெளியே போகும் மூன்றாவது நபர் உள்ள வருவார்கள் ....
சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல உங்களுடைய சண்டையை பெரிதாக்கி அவர்கள் குளிர் காய்வார்கள்...
யாரோ ஒருவர் மௌனம் காத்து விட்டால் மூன்றாவது நபர் வருபதற்க்கு இடமில்லை..
மூன்றாம் நபர் உள்ளே வந்து
எத்தனையோ குடும்பம் சீரழிந்து போயிருக்கு ... நீங்களும் அறிவீர்கள்...
குடும்பம் என்பது ஒரு ரயில் போன்று
கணவனும் மனைவியும் தான் தண்டவாளம் ..
குழந்தைகள் என்னும் ரயில் விபத்து இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் தண்டவாளம் சரியாக இருக்க வேண்டும்.,. தண்டவாளம் சரியாக அமைந்து விட்டால் ரயில்கள் சுமூகமாக பயணிக்கும்....
தண்டவாளத்தில் விரிசல் காரணமாக எத்தனையோ ரயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது..
அந்த மாதிரி விபத்துக்கு நீங்க காரணமாக இருக்காதீர்கள்
கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தால்
குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள்..

உங்கள் வாழ்வில் நிரந்தர ஊன்றுகோல் என்றும் உங்கள் "மனைவி" மட்டும்தான்.
நீங்கள் பாசத்தை அள்ளி வீசி வளர்த்த உங்கள் பிள்ளைச் செல்வங்கள் பெருத்து ஆளாகி திருமணம் முடித்ததும் உங்களை விட்டும் தூரமாகிவிடலாம். ஊர்விட்டுச் செல்லலாம், நாடு துறந்தும் போகலாம்.
நீங்கள் ஒரு காலம் ஆனந்தமாக உறவாடிய அன்பான சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பம் என்று பிஸியாகி விடுவார்கள்.
இறுதி காலத்தில் கைபிடிக்க சகோதரனும் வரமாட்டான், கண்ணீர் விட சகோதரியும் வர மாட்டாள். எல்லோரும் அவரவர் வாழ்வென்று பிரிந்து செல்வார்கள்.
உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் என யாருமே என்றும் கூடவே இருக்க வரமாட்டார்கள்.
இந்த உலகம் அவர்களை உங்களிடமிருந்த பலவந்தமாக பிரித்தெடுத்துக்கொள்ளும்.
வாழ்வென்னும் ரயில் பயணத்தில் உங்களோடு இடைநடுவில் கடைபிடித்து ஏறிக்கொண்ட உங்கள் பாச மனைவிதான் உங்களோடு கூடவே இருக்கப் போகிறாள்.
நீங்கள் என்றும் சாய்ந்திருக்க அவள் புயம் மாத்திரமே உங்களுக்காக காத்திருக்கும்.
நீங்கள்
நோய்வாய்ப்படும் போது...
முதுமை அடையும் போது...
துக்க துயரங்களில் பங்கெடுக்க...
ஆத்திர அவசரம் என்று வரும் போது...
என்றும் உங்களை தாங்கும் ஊன்றுகோல்
ஆதலால் உங்கள் உறவுக்கு உரமூட்டுங்கள்.
நீங்கள் பரஸ்பரம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அனாதரவாக மரணிக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்.

No comments:

Post a Comment