எருக்கம் பால் குறித்து முக்கிய தகவல்
எருக்கம் பால் குறித்து முக்கிய தகவல். நேரமிருந்தால் படிங்க.
மருத்துவத்தில் ஆர்வமாக இருந்த சில மாதங்களுக்கு முன்பாக பல் கறைகளை போக்கும் பற்பொடி தயாரிக்க எருக்கம் பூ எடுத்துக்கொண்டு இருந்தோம்.
அப்போது எதிர்பாராத விதமாக கண்ணில் எருக்கம் பால் பட்டது. எல்லோருக்கும் தெரிந்த படி கண்ணில் பார்வை பாதிப்பு ஏற்பட்டதும் ஓமலூர் அர்விந்த் கண் மருத்துவமனை சென்றேன்.
அது மருத்துவமனை இல்லை. ஆள் பிடித்து அனுப்பும் சேவைக் கட்டிடம். பரிசோதனை செய்தார்கள். ஒரு சொட்டு மருந்தை கொடுத்து நாளை சேலம் மருத்துவமனை போங்க. அங்கேதான் இதை சரி செய்ய முடியும் என்று அனுப்பிட்டாங்க.
கண் இல்லையா சின்ன பயத்தில் பக்கத்தில் உள்ள ஓமலூர் அர்விந்த் மருத்துவமனை போயிட்டேன். அப்றோம் நம்ம வைத்தியத்தை செய்தேன். அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கை ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்திருந்தால் அவரிடம் தாய்ப்பால் தேவை என்று கூறியதும் கொடுத்தார். ஊற்றினேன் கண் மறுநாளே பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது.
சில மாதங்களாக Ai தொழில்நுட்ப பணிகள். அமெரிக்க, ஐக்கிய நாடுகள் சார்ந்த சேவையில் இணைந்த பயணம் இது. இரவெல்லாம் வேலை இருக்கும். கட்டாயம் இல்லை. எனக்கு தூங்க பிடிக்காமல் வேலை தொடரும்.
கடந்த ஒரு மாதமாக கண் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. சிறு எழுத்துக்கள் தெரியவில்லை. அதில் ஒரு பெரிய ஆச்சரியம் இல்லை. 40 வயதாகிறது, இனி உடலுக்கு ஏற்ப , உணவுக்கு ஏற்ப வாழ்க்கை மாறும் என்று நினைத்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
மொபைலில் செட்டிங் போய் font size பெரிதாக மாற்றினேன். அதிலிருந்து செல்போனை திறந்தாலே கண்ணாடி விளம்பரங்கள். அவர்கள் தெளிவாக வேலை செய்கிறார்கள்.
என் அம்மா அப்பாட்ட நடப்பதை சொன்னேன். சிவன், வாலை , இதில் ஆண் இடத்தில் முருகன், பிள்ளையார் , கருப்பன் என்று யாரை வேண்டுமானாலும் போட்டுக்கலாம். வாலை தாய் இடத்தில் பெண் தெய்வம் எதுவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
இதை இங்கு சொல்ல 100% விருப்பம் இல்லை. ஏதோ சொல்ல விரும்பி டைப் பன்றேன்.
என் வாழ்க்கையில் ஆலோசனை என்று எவரிடமும் கேட்டதில்லை. நானாக தேவைப்பட்டு கேட்டது என் அப்பன் சிவனிடமும், ஆத்தா வாலையிடமும் மட்டுமே.
அதுகுறித்த அதிசயங்கள் காலத்தில் உடனிருந்தவர்களால் தெரிவிக்கப்படும். இப்போது விசயத்தை பார்க்கலாம்.
அம்மா , கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எனக்கு வேலையை பாதிக்கிறது. மருந்து வேண்டும் என்றேன்.
" எருக்கம் பால் " என்றது. என்னடா இது பெரிய சோதனையா இருக்கு என்று நினைத்தவாறு இரண்டு நாட்கள் கடத்தினேன். எந்நேரமும் " என்ன நம்பிக்கை இல்லையா? பயமா? அவ்ளோ தானா உன் நம்பிக்கை? இப்படி மனதை அறுத்துக் கொண்டு இருந்தது.
வழக்கமாக பிரம்ம முகூர்த்த நேரம் வேலையாகவோ அல்லது சும்மாவே எழுந்து சுத்திட்டு இருப்பேன். அன்று எருக்கம் பால் பயன்படுத்த முடிவு செய்துவிட்டேன்.
வேண்டுதலொடு என்னை தொலைத்து வேலை நடந்தது.
தலையில் குறிப்பிட்ட இடத்தில் பாலினை எடுத்து வைத்தேன். காயம்பட்ட இடத்தில் டிஜ்ஜர் போட்டால், உப்பு வைத்தால் எப்படி எரியுமோ அப்படி எரிச்சல் இருந்தது.
10 நிமிடங்கள் கழித்து குளித்தேன். அந்த பால் பட்டு முடியெல்லாம் பிசுபிசுப்பால் ஒட்டிக்கொண்டது. நமது மாவேளில் ஷாம்பு விற்றாலும் நான் பயன்படுத்துவது மாசத்துக்கு ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமே.
இந்த பாலை தேய்த்து எடுக்க மூன்று முறை போட்டு குளிக்க வேண்டியதாச்சு. ஒருவழியாக சரிபன்னிட்டேன்.
அடுத்த 10 நிமிடங்கள். கண் பளிச்சென்று தெரிந்தது. இதை எப்படி எங்கே யாருட்ட சொல்லி இறைநிலை உணர்த்துவது? அதுக்கு ஒரு அவசியமும் இல்லை. சரியாகிட்டதா வேலையை பாரென்று மொபைல் செட்டிங் போய் பழையபடி
Normal size க்கு மாற்றினேன்.
இதை செய்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இதைவிட பல அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள். அதை நடைமுறைப்படுத்தும் மனதை எடுத்தும் விட்டார்கள்.
No comments:
Post a Comment