சிறுநீரக கற்களை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்
தண்ணீர்
சிறுநீரக
கற்களுக்கு நிவாரணம் தரும் சிறந்த வழிகளில் ஒன்று, போதுமான நீர்ச்சத்தினை உடலுக்கு வழங்குவதேயாகும். நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுநீரக
கற்களை சிறுநீரின் வழியாக வெளியேற்ற உதவுகிறது.
தண்ணீரை
அருந்துவதால் கற்களை வெளியேற்றும் செயல்முறை விரைவடைகிறது. சிறுநீரக கற்களை வெளியேற்ற தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிக அளவு தண்ணீரை பருகுவதால் வெளியேற்றப்படும்
சிறுநீரின் அளவும் அதிகரிக்கிறது; இது கல் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
மாதுளைச்சாறு
ஒட்டுமொத்த
சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வீட்டு நிவாரணி - மாதுளை ஜூஸ் ஆகும். இப்பழத்தில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்து, சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.
சிறுநீரின்
அமிலத்தன்மையின் அளவைக் குறைக்கும் மாதுளைச்சாறு, எதிர்காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
துளசி இலைகள்
பேசில் எனப்படும் துளசி இலைகளை சாப்பிடுவது, சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி, தினமும் இரண்டு முதல் மூன்று துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களால் ஏற்படும் அசௌகரியம் அல்லது வலி குறையும்.
ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாறுடன்,1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் உட்கொண்டு வருவது சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும்.
கிட்னி பீன்ஸ்
கிட்னி பீன்ஸ் (ஃபேசோலஸ் வல்காரிஸ்) என்பது பொதுவாகக் கிடைக்கும் ஒரு பருப்பு வகையாகும். இது சிறுநீரகத்தின் வடிவிலும், சிவப்பு நிரமாகவும் இருப்பதால், கிட்னி பீன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை இந்தியாவில் பொதுவாக ராஜ்மா என்று அழைக்கப்படுகிறது.
கிட்னி பீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், காய்கறிகளைப் போலவே ஆரோக்கியமானதாகும். பருப்பு வகைகளில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் உள்ள இந்த ராஜ்மா நீரிழிவு
நோயாளர்களுக்கும் சிறந்தது. இந்த பீன்ஸில் உள்ள வைட்டமின் B சிறுநீரக கற்களை கரைக்கவும், வெளியேற்றவும் உதவுகிறது.
பிரியாணி இலை
சிறுநீரைப்
பிரிக்கும் ஒரு டையூரிடிக் ஆக செயல்படும் பிரியாணி (பே லிஃப்ஸ்) இலைகள், ஒட்டுமொத்த
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உதவுகிறது. ஆய்வுகளின்படி, பிரியாணி இலைகள் உடலில் உள்ள யூரியேஸ் அளவைக் குறைப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. யூரியேஸ் என்பது ஒரு என்ஸைமாகும், இது அளவுக்கு மிஞ்சி சுரந்தால் பல்வேறு இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்தும்.
இருந்தபோதும், சிறுநீரக கல் பிரச்சினைக்கு நிவாரணம் தருவதில் பிரியாணி
இலையின் செயல்திறனை நிரூபிக்க கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
வோக்கோசு (பார்ஸ்லி)
தாதுக்கள்
மற்றும் சோடியம் படிமங்களால் உருவாகும் சிறுநீரக கற்கள் உங்கள் முதுகு மற்றும் வயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. பார்ஸ்லி அல்லது வோக்கோசுவிற்கு சிறந்த டையூரிடிக் தன்மையுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது; சிறுநீர் கழிப்பதை அதிகரிப்பதன் மூலம் கல் உருவாவதைத் தடுக்கிறது.
பார்ஸ்லி
தேநீரை குடிப்பதால் சிறுநீர் உற்பத்தி அதிகரித்து, நச்சுகள் வெளியேறுவதால் உங்கள் சிறுநீரகங்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன, இது சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவுகிறது.
பார்ஸ்லி தேநீர் செய்முறை:
- புதிய
பார்ஸ்லி இலைகளை ஒரு கோப்பை அல்லது தேநீர் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.`
- பார்ஸ்லி
இலைகள் மீது ஒரு கப் கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும்.
- வெந்நீர்
மற்றும் பார்ஸ்லியை 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- தேநீரில்
உள்ள இலைகளை வடிகட்டி, சூடாக பரிமாறவும்.
டேன்டேலியன் வேர்கள்
சீமைக் காட்டு முள்ளங்கி எனப்படும் டேன்டேலியன் செரிமானத்திற்கு உதவுகிறது, சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது .
டேன்டேலியன்களில் A, B, C மற்றும்
D போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன; மற்றும் இரும்புச்சத்து, துத்தநாகம் (ஜிங்க்) மற்றும்
பொட்டாசியம் போன்ற மினரல்களும் உள்ளன. இருந்தபோதும், டேன்டேலியனை சிறிதளவு மட்டுமே உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
சிலருக்கு டேன்டேலியன் ஒவ்வாமை இருக்கலாம். எனவே, அதை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.
ஆப்பிள் சிடர் வினிகர்
ஆப்பிள்
சிடர் வினிகர் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரபல வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சிறுநீரக கற்களை மென்மையாக்கவும், உடைக்கவும், கரைக்கவும் உதவுகிறது.
ஆப்பிள்
சிடர் வினிகர், பெரிதாக இருக்கும் கற்களின் அளவைக் குறைக்கிறது மற்றும் அவற்றை உங்கள் சிறுநீரின் வழியாக எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
வீட் கிராஸ் அல்லது கோதுமைப் புல்
வீட் கிராஸில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை கற்களை உருவாக்கும் தாதுக்கள் மற்றும் உப்புகளை வெளியேற்ற உதவுகின்றன. இதற்கு டையூரிடிக் தன்மை உள்ளதால், அதிக சிறுநீரை கழிக்கச் செய்து, சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது.
கோதுமைப் புல் சாற்றினை தினமும் பருகுவது, சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிப்பதில் நல்ல பலனைத் தரும்.
செலரி (சிவரி கீரை)
பல காலமாக சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மருந்துகளில் ஒன்றுதான் இந்த செலரி. இதில் ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளதால், அவை உங்கள் சிறுநீரகத்தில் உருவாகும் கால்சியம் படிகங்களை உடைக்க உதவுகின்றன.
தினமும்
செலரி ஜூஸ் குடிப்பது சிறுநீரக கற்களை குறைப்பத்தில்
மிகுந்த பலன்களைத் தருமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மற்ற மருந்துகளுடன் சேரும்போது இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, எந்தவொரு வீட்டு வைத்திய மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பும், தவறாமல் உங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை
சாறு சிறுநீரக கற்களிலிருந்து நிவாரணம் பெறுவதில் நன்மை பயக்கும். சிட்ரிக் அமிலத்தில் உள்ள சிட்ரேட் என்கிற உப்பு, கால்சியத்தை பிணைத்து, கல் உருவாவதால் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது.
தினமும்
1/2 கப் எலுமிச்சை சாறு குடிப்பதால் சிறுநீரில் சிட்ரேட் அளவு அதிகரிக்கிறது, இதன் காரணமாக சிறுநீரக கல் உருவாகும் அபாயமும் குறைகிறது.
தேங்காய் எண்ணெய்
நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு நன்மைகள் தேங்காய் எண்ணெயில் உள்ளன. இது கூந்தல், தோல் மற்றும் நீரிழிவு நோய்க்கு ஆகச்சிறந்தது. சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகள், சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட சிறுநீரக பிரச்சினைகளை எதிர்த்துப் போராட தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
விர்ஜின்
தேங்காய் எண்ணெய் எனப்படுவது தேங்காய் பால் அல்லது உலர்த்தப்படாத தேங்காயிலிருந்து பெறப்படுகிறது. இதில் அதிகளவில் லாரிக் அமிலம் மற்றும் நிறைவுற்ற (சாச்சுரேட்டட்) கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
சிறுநீரக
கற்கள் உருவாகாமல் தடுக்கவும், அவற்றை குணப்படுத்தவும் இந்த ஆரோக்கியமான சாச்சுரேட்டட் அமிலங்கள் உதவுகின்றன.
ஹார்ஸ்டெயில் (குதிரைவாலி) தேநீர்
ஒரு டையூரிடிக் ஆகப் பயன்படுத்தப்பட்டு வரும் குதிரைவாலி –சிறுநீர்
வெளியேறுவதை அதிகரிக்கிறது மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் குறைக்கிறது.
குதிரைவாலியில் உள்ள இரசாயனங்களில்
ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும், ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் நிறைந்துள்ளன. இது திரவத்தைத் தக்கவைக்க உதவி செய்து, சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குதிரைவாலியை உட்கொண்டவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் அளவு அதிகரித்துள்ளது, இதனால் சிறுநீரக கோளாறுகளால் ஏற்படும் சிரமங்களை எளிதாக்குவதில் அது நல்ல பலன்களைத் தந்துள்ளது.
நெட்டில் (சிறுகாஞ்சொறி) இலைகள்
நெட்டில் எனப்படும் சிறுகாஞ்சொறி ஒரு இயற்கையான மூலிகையாகும்; இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தருகிறது. ஒவ்வாமை, சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் பல்வேறு பாதிப்புகளை இது குணப்படுத்துகிறது.
நெட்டில்
அல்லது சிறுகாஞ்சொறி இலை தேநீருக்கு டையூரிடிக் தன்மையும், சுத்திகரிப்புத் தன்மையும் உள்ளது. இது கிரியேட்டினின் மற்றும் யூரிக் அமிலத்தை நடுநிலையாக்கி, பித்தப்பை கற்களைக் கரைத்து, சிறுநீர் கழிப்பதை அதிகரித்து, சிறுநீரகங்களின் தொற்று மற்றும் இன்ஃப்ளமேஷனை கட்டுப்படுத்தி
– இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவுகிறது.
வீட்டிலேயே நெட்டில் (சிறுகாஞ்சொறி)தேநீரை தயாரிப்பது எப்படி?
- ஒரு
பாத்திரத்தில் நெட்டில் (சிறுகாஞ்சொறி) இலைகள் சிலவற்றை போடவும்.
- அதில்
4 கப் தண்ணீர் சேர்க்கவும்
- தண்ணீரை
நன்கு கொதிக்க வைத்து, பின்னர் 15 நிமிடங்கள் குறைவான சூட்டில் வைக்கவும்.
- தேவைக்கேற்ப
சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
எப்போது ஒரு மருத்துவரை அணுக வேண்டும்?
பின்வரும்
அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:
- கடுமையான
முதுகுவலி அல்லது வயிற்று வலி
- அடிக்கடி
வாந்தி அல்லது குமட்டல் ஏற்படுதல்
- காய்ச்சல்
அல்லது குளிர் நடுக்கம்
- இரத்தம்
கலந்த சிறுநீர் வெளியேறுதல்
- சிறுநீர்
பாதையில் நோய்த்தொற்று ஏற்படுதல்
- சிறுநீர்
கழிப்பதில் சிரமம் ஏற்படுதல்
முடிவுரை
சிறுநீரக
கல்லை நாமே சிறுநீரின் வழியாக வெளியேற்றுவது கடினமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் தண்ணீரை தாராளமாகக் குடிப்பது சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில்
நல்ல பலன்களைத் தரும்.
எந்தவொரு
வீட்டு வைத்தியம், மூலிகைகள் அல்லது சப்ளிமென்ட்களை உட்கொள்வதற்கு முன்பு, கட்டாயம் உங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
சிறுநீரக
பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், மற்றும் உணவுப்பழக்கம் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
No comments:
Post a Comment