நேதாஜி பற்றி ஒரு பார்வை
நேதாஜி இந்தியர்களின் ஆயுத கையாளுமையை உலகறிய செய்தவர் இந்தியாவுக்கென முதல் ராணுவத்தை கட்டமைத்தவர் .
காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர் தனது மரணத்தையே உலகத்துக்கு மர்மமாக்கியவர் .
1897 ஆம் வருடம் ஜனவரி
23 ஆம் தேதி ஜானகி நாத் போஸ் ,
பிராபாவதி தேவி (
இவர் ' தத் '
என்னும் பிரபு வழி பாரம்பரியத்திலிருந்து வந்தவர் )
தம்பதியருக்கு 9 வது மகனாக பிறந்தார் (
மொத்தம் 14 குழந்தைகள் )
. கல்கத்தா மாநில கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை சொன்னதால் பேராசிரியர் ஓடென் என்பவரை தாக்கினார் போஸ் .
அதற்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார் சுதந்திர வேட்கைக்கான முதல் படி அது .
லண்டனில் ஐ .
சி . எஸ் .
தேர்வு எழுத சென்று திரும்பிய போஸ்
" லண்டனில் எனக்கு கிடைத்த ஒரே சந்தோசம் என்ன தெரியுமா ?
வெள்ளைக்கார சேவகன் எனது ஷூக்களுக்கு பாலிஸ் போட்டுக் கொடுத்தான் .
அது ஒரு அற்ப மகிழ்ச்சியை கொடுத்தது .
மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு ,
கட்டுப்பாடு ஆகியவை எனக்கு பாடமாக அமைந்தன
" என்றுக் கூறினார் .
தேர்வில் வெற்றிப்பெற்று லண்டனில் பணியாற்றிய போதுதான் '
ஜாலியன் வாலாபாக் படுகொலை '
அரங்கேறியது . அது அவருடைய விடுதலை வேட்கையை தூண்டியதால்
1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார். சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் வழி காட்டுதலில் போஸ் காங்கிரசில் சேர்ந்தார் .
அவரையே தனது குருவாக பாவித்தார் .
" நீ எனக்கு இரத்தத்தைக் கொடு ;
நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன் !
" என்று அவர் உரத்து கூறிய பின்பு தான் இளைஞர்கள் பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற முன்வந்தனர் .
1938 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது
" நான் தீவிரவாதி தான் ;
எல்லாம் கிடைக்க வேண்டும் ,
அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனதுக் கொள்கை
" என்று முழக்கம் இட்டார் .
காங்கிரஸ் தலைவரானதும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்தி நிகேதனுக்கு அழைத்து பாராட்டுவிழா நடத்தி போஸுக்கு நேதாஜி என்ற பட்டத்தை வழங்கினார் (
நேதாஜி என்றால்
' மரியாதைக்குரிய தலைவர் '
என்று அர்த்தம்
).
1939 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் .
அவரது போர்க்குணம் பிடிக்காத காந்தி நேதாஜிக்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தையும் ,
நேருவையும் போட்டியிட சொன்னார் .
ஆனால் அவர்கள் மறுக்கவே ,
பட்டாபி சீதா ராமைய்யாவை நிறுத்தினார் .
ஆனால் அப்போட்டியில் நேதாஜி வெற்றிப்பெற்றார் .
பட்டாபி சீதா ராமைய்யாவின் தோல்வி தமக்கு பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார் .
காந்தியை சமாதானப் படுத்த வேண்டி நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார் .
பிரிட்டிஷாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி
1941 ஆம் ஆண்டு ஜனவரி
17 அன்று தப்பித்து பெஷாவர் வழியே காபூல் மற்றும் கைபர் கணவாய் வழியே நடைப்பயணமாகவே ஆப்கானிஸ்தானை அடைந்தார் .
இப்படி 71 நாட்கள் நடந்து இறுதியில் பெர்லின் சென்றடைந்தார் .
இதை வரலாற்று ஆசிரியர்கள்
"GREAT ESCAPE " என்று வியந்து பாராட்டுகிறார்கள்...
1934 ஆம் ஆண்டு ஆஸ்திரிய பெண்மணி எமிலி ஷெங்கலை காதலித்து மணம் புரிந்தார் .
அதற்கு சாட்சியாக பிறந்தவர் தான் அனிதா .
" இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஸ் சந்திரபோஸ் பேசுகிறேன்
" இப்படித் தான் நேதாஜியின் முதல் வானொலி உரை துவங்கியது .
1941 ஆம் ஆண்டு ஆசாத் ஹிந்த் வானொலியில் உரையாற்றும் போது தான் முதன்முதலாக காந்தியை '
தேசப்பிதா ' என்று இந்தியாவிற்கு அறிமுகம் செய்தார் .
நேதாஜி காந்தியை தேசப்பிதா என்று அழைத்ததுப் போலவே காந்தியும் நேதாஜியை '
தேச பக்தர்களின் பக்தர் '
என்று அழைத்தார்.
மோகன் சிங் என்பவரால்
1942 ஆம் வருடம் சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது .
அது ஜப்பானிய படைகளால் சிதைக்கப்பட்டது .
மீண்டும் 1943 ஆம் ஆண்டு நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் கட்டமைக்கப்பட்டது .
" ஜெய் ஹிந்த்
" அதாவது " வெல்க பாரதம்
" என்ற சொல்லை தாரக மந்திரமாக்கினார் நேதாஜி .
அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் என்னும் தமிழர் .
நேதாஜியின் பட்டாலியனின் கீழ்
600 - க்கும் மேல் தமிழர்கள் இருந்தார்கள் .
நேதாஜி "அடுத்தப் பிறவியில் ஒரு தமிழனாக பிறக்கவேண்டும்
" என்று ஆசைப்படுகிறேன் என்று நெகிழ்ந்தார் .
பெண்களை ராணுவத்தில் பங்கேற்க வைத்தார் .
அவர்களை சத்திவாய்ந்த துர்க்கைக்கு நிகராக பாவித்தார் .
1943 ஆம் ஆண்டு நேதாஜியின் படை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றியது .அந்த தீவுகளுக்கு ஷாஹீத் (தியாகம்)
, ஸ்வராஜ் (சுயராஜ்ஜியம்) என்று பெயர் மாற்றினார் .
அத்தீவுகளுக்கு கர்னல் லோகநாதன் என்ற ஒரு தமிழரை தான் ஆளுநராக நியமித்தார் .
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
16 ஆம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல தன் தோழர் ஹபீப் உடன் விமானத்தில் ஏறினார் .
ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் விபத்து ஏற்பட்டு இறந்தார் என்று சொல்லப்படுகிறது ,
ஆனால் தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று கூறுகிறது .
இது வரை
12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமே
!!! .
இவர் 1945 ஆகஸ்ட்
18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும் ,
அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன .
அவர் ரஷ்யாவிற்கு சென்று
1970 களில் இறந்து விட்டதாகவும் ,
அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து
1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன .
1945 ஆம் வருடம் ஆகஸ்ட்
14 முதல் செப்டம்பர்
20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது .
இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன் ,
நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது .
ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை
.
No comments:
Post a Comment