நல்ல தாம்பத்ய உறவை வளர்க்கும் “துணை”
மனதை நெகிழ்விக்கும் தாம்பத்யக் கதை
ரேணு மற்றும் கார்த்திக் திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிந்து இருந்தது. இருவரும் பரஸ்பர உறவு இல்லாமல்
வாழ்க்கை வெகு சாதாரணமாய் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள் ரேணுவுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது —
அவளுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது.
அந்தச் செய்தி கேட்டவுடன் அவள் மனம் உடைந்தது. நாம் உயிருடன் இருப்போமா என்ற நினைப்பு அழுகை, பயம் —
எல்லாமே கலந்து கண்களில் கண்ணீர் பீறிட்டு வெளியேறிய சமயத்தில் கார்த்திக் அந்த கண்ணீர் சிந்தி விடக் கூடாது என்று அவள் கண்ணீரை தன் இரு கைகளிலும் பிடித்தான். நோ ரேணு நோ, கார்த்திக், ரேணு வின் கைகளை மெதுவாக பிடித்து இப்போது என்ன ?
“நீ உன் அழகை இழக்கவில்லை ரேணு… நீ என் உயிரின் ஒரு பகுதி. இதை நாம சேர்ந்து ஜெயிப்போம்.”
என்றான். கார்த்திக்கின் முழு அரவணைப்பில் நாட்கள் நகர்ந்தன.
அவள் முடி உதிர்ந்த நாளில் கூட கார்த்திக் அவளை அவளின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்பார்த்தான் ரசித்தான். ரேணு ,
கார்த்திகிடம் ஏங்க நான் முடி கொட்டி அசிங்கமா ஆயிட்டேன்ங்க .
இனி நான் உங்களுக்கு உபயோகம் ஆக மாட்டேன் ங்க வேறு கல்யாணம் பண்ணுங்க என்றாள். கார்த்திக் அவள் வாயை தன் வாயால் முத்தம் இட்டு இழுத்து கட்டியணைத்து “நீயே நான் ,
நானே நீ என்றான். பின்னர் மருத்துவ மனையில் கார்த்திக் ரேணுவிற்கு புத்தகம் வாசித்து காண்பித்தான். தினமும் ஒரு கதையை வாசித்தான். இப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருக்க .
ஒரு நாள் ரேணுவின் ஒரு மார்பகம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. ரேணு கார்த்திக்கை தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தன் ஒரு மார்பகம் எடுக்கப் பட்ட அவமானத்தில் கூனி குறுகினாள்.
ஏய் ரேணு என்னப் பாரு ஏன் தலைக் குனிந்து இருக்க. அதற்கு ரேணு ஏங்க நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொங்க என்றாள். அதற்கு கார்த்திக் ஏன் என்று கேட்க. என் தலைமுடி போய்விட்டது இப்போது என் ஒரு மார்பகம் போய்விட்டது. இனி உங்களை நான் எதை வைத்து சந்தோஷப்படுத்துவேன் என்றாள். அதற்கு கார்த்திக் அப்போ இந்த ஒரு உறுப்பு க்காகத் தான் நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று நெனச்சுகிட்டீயா என்றான் கார்த்திக். இப்போது அவன் குரலில் கொஞ்சம் கோபம் கசிந்தது. ரேணு அமைதி ஆனாள்.
அவள் மெதுவாக குணமடைந்தாள். ஒரு நாள் மருத்துவர்கள் “நீ வென்றுட்டே ரேணு” என்றார்கள். நீ வீட்டிற்கு போகலாம் என்றார் டாக்டர். கார்த்திக் ஸ, ரேணுவை டிஸ்சார்ஜ செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அந்த இரவு, ரேணு கண்களில் நன்றி மிகுந்த கண்ணீர் வந்து,
“நான் உயிரோட இருக்கிறேனேன்னா, அது உன்னால தான் கார்த்திக்,”
என்றாள்.
அவன் சிரித்து அவளது கண்ணீரை துடைத்தான் —
“துணைனு சொல்லிக்கிட்டே இருந்தா போதும். அந்த வார்த்தைதான் நம்ம வாழ்க்கை முழுக்க பாதுகாப்பு குடுக்கும்,”
என்றான். சரி கார்த்திக் நான் தூங்குறேன் என்றாள் ரேணு. இப்போது கார்த்திக் சரி இன்னும் என்னை எவ்வளவு நாட்கள் தான் பட்னி போடுவதாய் உத்தேசம் என்றான். ஏங்க என் மேல இன்னும் அந்த உணர்வு இருக்கிறதா ங்க என்று ரேணு சொல்லி முடிப்பதற்குள் அடி போடி என்று அவளின் லிப்பை அவனது லிப்பால் லாக் செய்தான். இனிமேல் பேசுவ என்பதைப் போல. அதே சமயம் வெளியே மழை பெய்ய ஆரம்பித்து இருந்தது. உள்ளே அன்பு எனும் மழை பெய்ய ஆரம்பித்தது.
என்ன இது என்ன இது என்ன இதுவோ....
அவ்வளவு தாங்க கதை முடிந்தது போங்க போங்க போய் சாப்பிட்டு தூங்குங்க நல்ல பிள்ளைகள் ல நீங்க எல்லாம்
உண்மையான தாம்பத்யம் என்பது அழகோ செல்வமோ அல்ல.
அது உடல் சோர்ந்தபோதும், அழகு குறைந்தாலும் மனம் கைவிடாத அன்பு.
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் —
“நான் உன்னோட இருக்கேன்” என்பதுதான் பெரிய உறவு.
No comments:
Post a Comment