'தந்தையர் தினம்' எப்படி வந்தது ?
1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும்
எல்லன் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் சொனாரா
ஸ்மார்ட் டோட். சொனாரா 16 வயதை தொடும் போது ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன்
மரணமடைந்தார். அன்று முதல்
மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்து காப்பாற்றினார் வில்லியம் ஜாக்சன். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வு சொனாராவை பெரிதும்
கவர்ந்தது.
இந்நிலையில் 1909-ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தின கொண்டாட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அறிந்த
சொனாரா, தன் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என வாதிட்டார். தன் தந்தையின் பிறந்தநாள்
தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும்
வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து சர்வதேச தந்தையர்
தினமானது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.
அன்று சொனாரா எடுத்த முயற்சி,
இன்று நம் கனவுகளுக்கு உருவம் கொடுத்த தந்தைகளை
நினைவு கூற ஒரு சூழலை ஏற்படுத்தித்
தந்துள்ளது.