Wednesday, October 4, 2017

தங்கம்



                                   24 காரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம். அப்படியானால் 24, 22, 18, 14, 10 மற்றும் 9 காரட் தங்கங்களில் எந்த உலோகங்கள் எல்லாம் கலக்கப்படுகின்றன. வெள்ளி, காப்பர், ஜின்க் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளைத் தங்கத்தில் பல்லேடியம் சேர்க்கப்படுகின்றது. எனவே நாம் 22, 18, 14, 10 மற்றும் காரட் தங்கங்களில் எவ்வளவு பிற உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன என்று இங்குப் பார்ப்போம். 22 காரட் 22 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் மற்றும் ஜின்க் என மூன்று உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 91.70 சதவீதமும், வெள்ளி 5 சதவீதமும், காப்பர் 2 சதவீதமும், ஜின்க் 1.30 சதவீதமும் 22 காரட் தங்கத்தில் இருக்கின்றன. 18 காரட் 18 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன, ஜின்க் சேர்க்கப்படுவதில்லை. தங்கம் 75 சதவீதமும், வெள்ளி 15 சதவீதமும், காப்பர் 10 சதவீதமும் 18 காரட் தங்கத்தில் இருக்கின்றன. 14 காரட் 14 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 58.30 சதவீதமும், வெள்ளி 30 சதவீதமும், காப்பர் 11.70 சதவீதமும் 14 காரட் தங்கத்தில் இருக்கின்றன. 10 காரட் மற்றும் 9 காரட் 10 காரட் மற்றும் 9 காரட் தங்கத்தில் 18 மற்றும் 14 காரட் போன்று ஜின்க் பயன்படுத்தப்படுவதில்லை. 9 காரட் தங்கத்தில் வெள்ளி 42.5 சதவீதமும், காப்பர் 20 சதவீதமும் கலக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிதளவு மட்டும் 10 காரட் தங்கத்தில் வித்தியாசம் இருக்கும்.