அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம்
பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை
உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம்
என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை
சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.
உடல் எடையை குறைக்கும்
உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டை நோய் குணமடைகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒரு வித நோயையும் வராமல் தடுக்கிறது.
எலும்புகளை பலப்படுத்தும்
அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்
வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சீமை அத்திப்பழம்
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.
சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.