. கம்ப்யூட்டர்
டிப்ஸ்...-3
Rocketboom
போன்ற தளங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பாக வரும் வீடியோவை யூடியுப் தற்போது முதல் ஒளிபரப்பு செய்கிறது.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும் External USB/Fire Wire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும் வீடியோவையும் யூடியுப்- மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான சோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில் ‘யூடியுப் லைவ்’ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும் External USB/Fire Wire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும் வீடியோவையும் யூடியுப்- மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான சோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில் ‘யூடியுப் லைவ்’ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
மன அழுத்த நோயிற்கு மருந்தாகும் இன்டர்நெட்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.
டீன்ஏஜ் மன அழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
‘இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்’ என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார்.
மன அழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களைப் பார்த்து வர செய்தார். இணைய தளங்களில் மனஅழுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கலந்துரையாடல், சிகிச்சை ஆலோசனைகள் பெற்ற டீன்ஏஜ் வயதினர், பாரம்பரிய சிகிச்சை பெற்றவர்களைவிட வேகமாக குணமானது தெரிய வந்தது.
டாக்டரிடம் நேரில் மன அழுத்த பாதிப்புகளை விளக்குவதை விட ஒன்லைன் ஆலோசனை தளங்களில் பதிவு செய்வது துல்லியமாக இருப்பதால், நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளால் மன அழுத்தம் வேகமாக குறைகிறது.
டாக்டர்களில் நேரில் ஆலோசனை பெறச் செல்லும் இளைஞர்கள் பல விஷயங்களை தெரிவிக்க மறந்து விடுகின்றனர். இதனால் சிகிச்சை சரியாக அமையாமல் பிரச்சினை நீடிக்கிறது என்கிறார் டாக்டர் சுவனா சேத்தி.
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
நம்மில் பலபேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம். இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும்.
பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் ஏதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது.
நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும். இதன் மூலம் திறக்கப்பட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும்.
முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் Account – Account Setting என்பதை தேர்வு செய்யவும்.
பிறகு Account Security என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாகத் தோன்றும் திரையில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வேறு இடத்தில் திறக்கப்பட்டிருந்தால் காட்டும்.
பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கப்பட்டிருந்தாலும் சரி மற்ற ளிலீviணீலீ அதாவது மொபைல் போனில் உள்ள அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால் அதுவும் Logout ஆகிவிடும்.
பொது கம்ப்யூட்டரில் கவனமாக இருங்கள்
கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற்கொள்கிaர்களா?
அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.
1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.
2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளொப்பி அல்லது சீடியில் கொப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீ சைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.
3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் இரகசிய தகவல்கள் போக வாய்ப்புண்டு.
4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.
5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள்.
இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்துவிடும்.
எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்
JavaScript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
இந்த வழிமுறை எவருக்கும் எளிமையாக இருக்கும் நான் கீழே கொடுக்கும் ஜாவா நிரலை
காப்பி எடுத்து நீங்கள் காப்பி எடுக்க விரும்பும் தளத்தை திறந்த பின்னர்
அதிலிருக்கும் அட்ரஸை அழித்து விட்டு அதற்கு பதிலாக இந்த ஜாவா நிரலை ஒட்டி
ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் இனி அந்த தளத்தில் வேண்டிய எந்த தகவலையும்
நீங்கள் காப்பி எடுக்க முடியும்(மேலும் ஒரு சின்ன ட்டிரிக் அந்த தளத்தில்
தகவல்களை அழிக்கவும் முடியும் ஆனால் இது உங்கள் கணினியில் மட்டுமே இந்த
மாற்றம் நிகழும் இதனால் அந்த தளத்தை எந்த வித்த்திலும் பாதிக்காது)
JavaScript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
கம்ப்யூட்டர் மெதுவாகுதல்
நீங்கள் இன்டர்நெட் இணைப்பில் செல்லும்போது, உங்களுடைய கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படத் தொடங்குகிறது. டாஸ்க் மேனேஜர் மூலம் செக் செய்தால், அது செயல்பாட்டினை 100% எனக் காட்டுகிறது என வைத்துக்கொள்வோம்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களுக்கு எதிரான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு, அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதனை உறுதி செய்திடுங்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனமும், மலிசியஸ் சாப்ட்வேர் ரிமூவர் ஒன்றினை ஒவ்வொரு மாதமும் உங்கள் கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் மூலமாக அனுப்புகிறது. இதுவும் பதியப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால், இவற்றை இயக்கி, முழுமையாக உங்கள் கம்ப்யூட்டரைச் சோதனை செய்திடவும். இவை வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மற்ற புரோகிராம்களை நீக்கிவிடும்.
அடுத்து விண்டோஸ் ஹெல்ப் சிஸ்டத்தில் helpsvc.exe என்ற பைல் ஒன்று உள்ளது. இந்த உதவிடும் பைல் சில வேளைகளில் உபத்திரவம் கொடுக்கும் பைலாக மாறும். இதுதான் பிரச்னையைத் தருகிறதா என்று அறிய, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் கிளிக் செய்து, Task ManagerI த் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Processes என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அங்குள்ள தலைப்புகளில் ‘CPU’ என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அப்போது இயங்கும் புரோகிராம்கள், எடுத்துக் கொள்ளும் ப்ராசசர் நேரம் காட்டப்படும். நேரத்தின் அடிப்படையில் இது பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் முதலாவதாக helpsvc.exe இருந்தால், உங்களுக்குப் பிரச்னைக்குக் காரணம் இதுதான் என அறியலாம். இதன் இயக்கத்தினை நிறுத்த, இதனைத் தேர்ந்தெடுத்து, அதன் மீது லெப்ட் கிளிக் செய்து மூடிவிடவும். இனி பிரச்னை வராது.
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய http://support.microsoft.c om/kb/839017/enus என்ற முகவரியில் உள்ள இணையதளத்தை அணுகவும்.
நோட்பேட் வேர்ட் பேட்
இரண்டும் வெவ்வேறு எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம்கள்.
நோட்பேட் என்பது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இணைக்கப்பட்டு தரப்படும் ஒரு எளிய டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம் ஆகும். இதில் TXT என முடியும் டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்திடலாம். இதன் ஐகான் மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் சில வரிகள் எழுதப்பட்டவையாகக் காட்சி அளிக்கும். நோட்பேடில் அனைத்து வகையான எழுத்துருக்களையும் கையாள முடியாது.
அதே போல பார்மட்டிங் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மிக எளிதான சில நோட்ஸ் வரிகளை எழுதி வைக்க முடியும்.
நோட்பேடிலிருந்து சற்று மேம்படுத்தப்பட்ட வேர்ட் ப்ராசசராக வேர்ட் பேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேர்ட் ப்ராசசர் அளவிற்கு, டெக்ஸ்ட் இதிலும் அமைக்க முடியாது. இந்த இரண்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.
ஓப்பன் ஆபீஸ் டாட் ஓ.ஆர்.ஜி. (Open Office.org) என்ற இலவச வேர்ட் ப்ராசசிங் புரோகிராம் இலவசமாக நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல அப்ளிகேஷன் புரோகிராம் ஆகும். வேர்ட் புரோகிராமில் மேலே சொன்னவை கிடைக்காத போது, அனைத்து வசதிகளையும் பெற, இதனைப் பயன்படுத்தலாம்.
வாட்டர் மார்க்
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது சுலபமாக வாட்டர் மார்க் உருவாக்க முடிகிறது. ஆனால்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் ஒன்றினை ஏற்படுத்தி, அதனை அச்சில் கொண்டு வருவதற்கான வசதி இல்லை.
ஆனால் சுற்று வழி ஒன்றில் கொண்டு வரலாம். சிலர் Format | Sheet | Background என்று சென்று வாட்டர்மார்க் கொண்டு வருகின்றனர். ஆனால் இது உங்கள் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் பின்புறம் கிராபிக் ஒன்றை ஏற்படுத்தும். இது பிரிண்ட் பிரிவியூவில் தெரியாது. அச்சிலும் வராது. இதற்கு ஒரே வழி வேர்ட் தொகுப்பில் உள்ள வேர்ட் ஆர்ட் வழியாக வாட்டர்மார்க் ஒன்றை உருவாக்கலாம். இதன் கலரை Semi Transparent என அமைத்து, லைட் கிரே பில் கொடுத்து அந்த கிராபிக்ஸை, தேவைப்படும் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் எடுத்து ஒட்டலாம். ஆனால் இது சிறிது நேரம் எடுக்கும் செயல்.
சில பிரிண்டர்கள் இது போல வாட்டர்மார்க்கினை ஏற்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. எச்.பி. 5550 லேசர் ஜெட் பிரிண்டரில் இந்த வசதி உள்ளது. பிரிண்ட் டயலாக் பாக்ஸில், ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து அதில் கிடைக்கும் டேப்களில் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டிருப்பதைக் காணலாம்.
இன்னொரு வழி, உங்களுக்குப் பழக்கமான இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் வாட்டர்மார்க் ஒன்றைத் தயார் செய்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஹெடரில் ஒட்டி அமைக்கலாம்.
நேரடியாக வேண்டும் என்றால், இதற்கென கிடைக்கும் சில சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். http://www.fineprint.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் சாப்ட்வேர் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் எக்ஸெல் ஒர்க்ஷீட்டிற்கான வாட்டர் மார்க் உருவாக்கப் பயன்படுகிறது.
எர்ரர் (Error)
விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் சில வேளைகளில் எர்ரர் (Error) குறியீடாக 0x80070020 என்று வந்தால் அதன் பொருள் உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அப்டேட் பைல்களைத் தேடுகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால், அதற்கான குறிப்பிட்ட பைல் ஒன்றை, அதனால் பெற முடியவில்லை என்று இந்த குறியீடு குறிக்கிறது.
இது பரவலாக ஏற்படும் பிரச்னை தான். இதற்குக் காரணம் பைல் மைக்ரோசாப்ட் தளத்தில் இல்லை என்பதல்ல. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், இந்த அப்டேட் பைலைத் தடுக்கிறது. இதற்கான தீர்வு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், அப்டேட் செய்திடுகையில், ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தச் சொல்கிறது.
இதனால், நம் கம்ப்யூட்டர், வைரஸ்களினால் தாக்கப்படும் நிகழ்வு ஏற்படலாம். ஆனால், விண்டோஸ் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் இன்றி இருப்பதுவும் ஆபத்துதானே. இருப்பினும் முழுமையான முன்னெச்சரிக்கை வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் இயக்கத்தை முடக்கி, இணையத்திலிருந்து பைல்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அனைத்திற்குமாக ஒரு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. கூடவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் வைரஸ் நுழைந்து, இயக்கம் முடங்கிப் போனால், ரெஸ்டோர் பாய்ண்ட் மற்றும் பேக் அப் பைலைப் பயன்படுத்தி இயக்கத்தினை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.
இது குறித்து மேலதிகத் தகவல்கள் வேண்டுவோர் http://support.microsoft.com/kb/883825 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும்.
முக புஸ்தகத்தில்
(Facebook) அரட்டை அடிக்க…
முக புஸ்தகத்தில நீங்கள் மற்றவரிடம் அரட்டை அடிக்க விரும்பினால் chat window வை உபயோகிப்பீர்கள். அதில் தட்டச்சு மட்டும் செய்யாமல், அரட்டை அடிக்கும் போது உபயோகிக்கபடும் சில சிறப்பான தட்டச்சு அம்சங்களும் உள்ளன. இதை நான் ஒரு இணையத்தளத்தில் பார்தேன். இதனை உங்களுக்காக இங்கே தருகிறேன். பயன்படுத்திப்பார்த்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்...
உங்கள் வார்தையை தடிப்பாக ( Bold ) தட்டச்சு செய்ய. தடிப்பாக காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( * ) சிம்போலை தட்டச்சு செய்யவும்,
உதரணத்துக்கு:
*I love U* என்று தட்டச்சு செய்தால் I love U என்று தடிப்பாக வரும்
உங்கள் வார்தைக்கு கீழ் அடிக்கோடு இடு ( underline ) தட்டச்சு செய்ய.
அடிக்கோடு இடு காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( _ ) அடிக் கோடு சிம்போலை தட்டச்சி செய்யவும்,
உதரணத்துக்கு:
_I love U_ என்று தட்டச்சு செய்தால் I love U என்று அடிக் கோடும் வரும்
உங்கள் வார்தையை தடிப்பாகவும், அடிக்கோடும் சேர்ந்து தட்டச்சு செய்ய. வார்த்தைக்கு முன்னும் (*_ ) சிம்போலை சேர்த்து மற்றும் வார்த்தைக்கு பின்பு (*_ ) சிம்பலை சேர்த்து தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:
*_I love U_* என்று தட்டச்சு செய்தால் I love U என்று வரும்
மிகுதியை இங்கு இணைத்துள்ள படங்கள் மூலம் பயன்படுத்தி அரட்டை அடித்து மகிழுங்கள்.
விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்
உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் புரோகிராம்கள் பதியப்படும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றன. அல்லது ரெஸ்டோர் புரோகிராம் போல, முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு செல்கின்றன.
இந்த டிஸ்க்கைத் தயாரிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில்(Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது உங்களுக்கு ஒரு விஸார்ட் கிடைக்கும். இனி, காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை இணைக்கவும். அடுத்து மானிட்டர் திரையில் காட்டப்படும் செய்திகளுக்கேற்ப நடந்து கொள்ளவும். முழு வேலையும் முடிந்த பின்னர், இந்த சிடியைப் பாதுகாப்பாக வைக்கவும். எப்போதாவது ஆப்பரேட்டிங் சிஸ்டம் தகராறு செய்து, சிஸ்டம் முடங்கிப் போனால், இந்த சிடியை, சிடி ட்ரேயில் நுழைத்து, இயக்கவும். இவ்வாறு இயக்க உங்கள் பயாஸ் (BIOS)) செட் அப்பில், சிடி வழியாக பூட் செய்வதனையும் சேர்க்க வேண்டும்.
* Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும் போது கிளிக் செய்து பெறலாம்.
* Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்). இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்து பவருக்கான விருப்பங்கள், செயல்பாடு களுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.
* Virus : (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் ட்ரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டி விடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.
ஆர்.ஏ.ஆர் (RAR)
ஆர்.ஏ.ஆர் (RAR)) என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடிவதில்லை?
RAR துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு, விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை. இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர். சாப்ட்வேர் வேண்டும். இதனை http://www.rarlab.com/ என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும், தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம். அல்லது 7Zip என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை http://downloads. sourceforge.net/ sevenzip/7z457-x64.msi என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு, ( http://www.wobzip.org/) சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி, விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
RAR துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு, விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை. இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர். சாப்ட்வேர் வேண்டும். இதனை http://www.rarlab.com/ என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும், தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம். அல்லது 7Zip என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை http://downloads. sourceforge.net/ sevenzip/7z457-x64.msi என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு, ( http://www.wobzip.org/) சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி, விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பயர்வால்
உங்களின் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், சில வேளைகளில், இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் உங்களின் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி, சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது. இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது?
Start அழுத்திப் பின் Run பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டாஸ் திரை கிடைக்கும். இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். அங்கு nslookup என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு, உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும். பின் இந்த தளம் சென்று, நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம்.
கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா! இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம். nslookup என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு, உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும். இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும். விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், “Command” (மேற்கோள் குறிகள் இல்லாமல்)என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால், டாஸ் பக்கம் கிடைக்கும்.
Start அழுத்திப் பின் Run பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டாஸ் திரை கிடைக்கும். இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். அங்கு nslookup என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு, உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும். பின் இந்த தளம் சென்று, நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம்.
கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா! இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம். nslookup என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு, உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும். இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும். விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், “Command” (மேற்கோள் குறிகள் இல்லாமல்)என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால், டாஸ் பக்கம் கிடைக்கும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8
விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, பிரவுஸிங் செய்கையில், இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது. வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவினை நிரந்தரமாக மாற்ற என்ன வழி?
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, இணையப் பக்கங்களை ஸூம் செய்து, பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது. இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும், அவ்வப்போது அமைக்கும் வழி. இதனுடனாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறந்து இயக்கவும். Tools கிளிக் செய்து அதில் Internet Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Appearance என்ற டேப்பின் கீழ் Fonts என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன், இணையப் பக்கங்கள் காட்டப்படும். ஸூம் செய்திடும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால், பக்க எழுத்துக்கள் பெரிதாகும். கீழாக உருட்டினால், சிறிதாகும்.
உங்களின் பேவரைட் தளப்பட்டியலில் எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில், அகரவரிசைப்படுத்த
முதலாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம். இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பேவரைட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், அந்த மெனு விரிந்து கொடுக்கும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது லிங்க்கில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் விரியும் மெனுவில் பல செயல்பாடுகளுக்கான பிரிவுகள் கிடைக்கும். இவற்றில் Sort by Name என்பதில் கிளிக் செய்திடுங்கள். உங்களுடைய Favourites தளங்கள் அனைத்தும் அகரவரிசைப்படுத்தப்படும்.
உங்களுடைய பிரவுசர் மொஸில்லா பயர்பாக்ஸ் என்றால், அதனை இயக்கி, View என்பதில் இடது கிளிக் செய்திடவும். அதன் பின் Sidebar, Bookmarks எனச் செல்லவும். Sidebar ஐக் கிளிக் செய்தால் Bookmarks மெனு கிடைக்கும். அதில் ரைட் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு மெனு கிடைக்கும். இதில் Sort by Name என ஒரு பிரிவு இருக்கும். இதில் லெப்ட் கிளிக் செய்திடவும். Bookmarks மெனுவினை விரித்து, அதன் இடது பக்கத்தில் உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரினைப் பயன் படுத்துகிறீர்களா! இங்கு சற்று வித்தியாசமான முறையில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பிரவுசரை இயக்கிக் கொள்ளவும். வலது மூலையில் குழாய் ரிப்பேர் செய்திடும் சாதனப் படம் ஒன்று காட்டப்படும். அதனை லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர், Bookmark Manager என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு புதிய டேப் திறக்கப்படும். இந்த டேப்பின் இடது பக்கம் சைட் பார் ஒன்று கிடைக்கும். இதில் உள்ள Bookmark Manager –ல் ரைட் கிளிக் செய்தால், Reorder Items என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால், புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.
phishing என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன?
கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக உங்களுக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்று வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர்களை நாங்கள் இலவசமாகச் சோதனை செய்து எடுத்துத் தருகிறோம். அதுவும் இலவசம் என்று பிரபலமான மைக்ரோசாப்ட் அல்லது நார்டன் ஆண்டி வைரஸ் தளத்திலிருந்து செய்தி போன்று வரும். குறிக்கப்பட்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியும் அதே நிறுவனங்கள் முகவரிகளாகத் தெரியும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் அதில் கிளிக் செய்திடுகையில் நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள். அங்கு சென்றவுடன் உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அடிமைப்படுத்துவார்கள். உங்கள் மானிட்டரை கருப்பாக்கி மகிழ்வார்கள். இதற்குப் பல வழிகளைக் கையாளுவார்கள். இதற்குத்தான் phishing என்று பெயர். Fishing என்றால் மீன் பிடித்தல்; தூண்டில் போட்டு மீனைச் சிக்க வைப்போம். இங்கு கம்ப்யூட்டரில் உங்களுக்கு ஆசை காட்டி, உங்கள் கம்ப்யூட்டரைப் பிடிப்பதற்கு பெயர் phishing.
பயர்பாக்ஸில் ஸ்பெல்பவுண்ட்
ஸ்பெல் பவுண்ட்(Spellbound). இது ஒரு ஆட் ஆன் புரோகிராம். இதன் சிறப்பு என்னவெனில், இது பீல்டுகள், படிவங்களின் கட்டங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளையும் திருத்துகிறது. வேறு தகவல்களைத் தரும் கட்டங்களில் ஏற்படும் பிழைகளையும் சரி செய்திடுகிறது. இந்த ஸ்பெல் பவுண்ட் புரோகிராமினை பயர்பாக்ஸ் பிரவுசருக்காக டவுண்லோட் செய்திட, இணைய இணைப்பில், பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து, Tools>Add ons எனச் செல்லவும். பின்னர் மேலாக உள்ள “Get Addons” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “Browse All Addons” என்பதில் கிளிக் செய்திடவும். இது தானாக, மொஸில்லாவின் ஆட் ஆன் புரோகிராம்கள் உள்ள இணைய தளத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். இங்கு உள்ள சர்ச் கட்டத்தில் Spellbound என டைப் செய்திடவும். பின்னர் அருகே உள்ள பச்சை அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். அடுத்து Add to Firefox என்ற பட்டனில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் திரையில் கிடைக்கும் செயல்பாடுகளுக்கு உங்கள் பதிலை அளித்துச் செல்லவும். இந்த புரோகிராம் பதியப்பட்டு, இனி நீங்கள் டைப் செய்திடும் சொற்கள், அவை எந்த இடத்தில் இருந்தாலும், எழுத்துப் பிழை இருந்தால் சரி செய்யப்படும். இந்த பிழைகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனையும், நீங்கள் இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் மூலம் செட் செய்திடலாம்.