Saturday, March 30, 2019

3. மகேந்திரப்பொருத்தம் (புத்திரவிருத்திமற்றும்ஸம்பத்)

3. மகேந்திரப்பொருத்தம்    (புத்திரவிருத்திமற்றும்ஸம்பத்)                 
  

   பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.