மலத்தில் இரத்தம்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
வேறு அறிகுறிகள் அற்ற கறுப்பு
நிற மலம் |
நாவற்பழம், காரீயம், இரும்பு
மாத்திரைகள், தக்காளி, சிவப்பு முள்ளங்கி உட்கொள்ளுதல் |
நிறத்துக்குக் காரணம் என
எண்ணும் உணவை உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னும் பழைய நிலைக்குத் திரும்பாவிட்டால்
மருத்துவரை அணுகவும். |
மலம் கழிக்கும் போது அழுத்தம்
அல்லது வலியுடன் அரக்கு அல்லது பிரகாசமான சிவப்பு நிற மலம் |
ஆசன வாய் வெடிப்பு அல்லது மூல
நோய். |
மருந்துக் கடைகளில் கிடைக்கும்
மூல நோய்க் களிம்பு. பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும். அறுவை
மருத்துவம் தேவைப்படலாம். |
அடிவயிற்றில் அசௌகரியம், வாயு,
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வலி ஆகியவற்றுடன் அரக்கு அல்லது பிரகாசமான
சிவப்பு நிற மலம். |
பெருங்குடல் அழற்சி, கிரோன்
நோய், கட்டி அல்லது புற்று |
மருத்துவரை அணுகவும்.
எக்ஸ்-கதிர், கேளா ஒலி போன்ற சோதனைகள் தேவைப்படலாம். உணவுக்குழல் நிபுணரின்
ஆலோசனை தேவைப்படலாம். |
குடல், உணவுக்குழல்
எரிச்சலுடன் கறுப்பு தார் போன்ற மலம். |
மேல் உணவுக் குழல் குடல்
பாதையில் புண் |
மருத்துவரை அணுகவும்.
அகநோக்கலுக்கு அவர் பரிந்துரைக்கலாம். |