உணவுமுறையில் மாற்றம்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
பசிகுறைவுடன் களைப்பு,
முடியிழப்பு அல்லது குளிர் தாங்க இயலாமை |
மிகைத் தைராயிடு செயல்பாடு
(தைராயிடு செயல்குறைபாடு) |
மருத்துவரை அணுகவும்.
கண்டறியும் சோதனைகள் பரிந்துரைக்கப்படும். |
பசி கூடுதலோடு தூக்கமின்மை,
அதிக தாகம், அதிக வியர்வை, முடியிழப்பு |
மிகைத் தைராயிடு செயல்பாடு
(கிரேவின் நோய்) அல்லது பிற இயக்கநீர் சமநிலை இழப்பு |
மருத்துவரை அணுகவும்.
கண்டறியும் சோதனைகள் பரிந்துரைக்கப்படும். |
பசி குறைவுடன் மலங்கழிக்கும்
முறையில் மாற்றம், களைப்பு, குமட்டல், வாந்தி |
புற்றுநோய் |
மருத்துவரை அணுகவும். கண்டறியும்
சோதனைகள் பரிந்துரைக்கப்படும். |
புதிய மருந்தை உட்கொண்டவுடன்
பசி அதிகரிப்பு |
கோர்ட்டிகோஸ்டிராய்டுகள்,
எதிர்மனவழுத்த மருந்து, சில ஒவ்வாமை மருந்துகள் போன்றவற்றின் பக்க விளைவு |
மருத்துவரைக்
கலந்தாலோசிக்கவும்; அவர் மாற்று மருந்து பரிந்துரைப்பார். |
புதிய மருந்தை உட்கொண்டவுடன்
பசி குறைதல் |
புற்று நோய் மருந்து, சில
நுண்ணுயிர்க் கொல்லிகள், நர்க்கோட்டின் கலந்த வலி நிவாரணிகள் போன்றவற்றின் பக்க
விளைவுகள் |
மருத்துவரைக்
கலந்தாலோசிக்கவும்; அவர் மாற்று மருந்து பரிந்துரைப்பார். சிலசமயம் பக்க
விளைவுகள் மருந்து உட்கொண்டு சில நாட்கள்/வாரங்களிலோ மறைந்துவிடும். |