நாட்பட்ட இறுமல்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
மூக்கு வடிதல்,
திரும்பத்திரும்ப தொண்டையை சரிசெய்தல், கபம் |
ஒவ்வாமை அல்லது எலும்பு
உட்புழைத் தொற்று |
மருத்துவரை அணுகவும். ஒவ்வாமை
மருந்து பரிந்துரைக்கப்படும். |
ACE தடுப்பான்கள் உட்கொள்ள
ஆரம்பித்தவுடன் இருமல் |
மருந்து பக்கவிளைவு. 5-10 %
நோயாளிகளுக்கு ACE தடுப்பான்கள் இருமல் உண்டாக்கும் |
மருத்துவர் வேறு மருந்து
பரிந்துரைப்பார். |
இழைப்பு அல்லது பலத்த ஓசையுடன்
இரவு நேர இருமல் |
ஆஸ்துமா |
மருத்துவரை அணுகவும். மூச்சுக்குழல்
தளர்த்தி பரிந்துரைக்கப்படும். |
வாரம் இருமுறைக்கு மேலாக
நெஞ்செரிச்சலுடன் கூடிய இருமல் |
இரைப்பை உணவுக்குழாய்
எதிர்வினை நோய் |
மருத்துவரை அணுகவும்.
வயிற்றில் அமிலம் உற்பத்தி ஆவதைத் தடுக்க அமில முறிவு மருந்து
பரிந்துரைக்கப்படும். |
களைப்பு, நெஞ்சு வலி, மூச்சடைப்புடன்
கூடிய இருமல் நேரஞ்செல்லச் செல்ல அதிகரித்தல். |
நுரையீரல் புற்று |
மருத்துவரை அணுகவும்.
கண்டறிதல் சோதனைகள் பரிந்துரைக்கப்படும். |
வறட்டு இருமலோடு மூச்சடைப்பு |
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு
நோய் |
மருத்துவரை அணுகவும்.
நுரையீரல் திறன் சோதனை மற்றும் நெஞ்சு எக்ஸ்-கதிர் பரிந்துரைக்கப்படும். |