குழப்பமும் ஞாபக மறதியும்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
திடீர்க்குழப்பமும்
நினைவாற்றல் இழப்பும் |
தலைக்காயம், மூளையதிர்ச்சி |
நோயாளியை மருத்துவமனை கொண்டு
செல்லவும் |
முதுமை காலத்தில் நினைவாற்றல்
இழப்பு அல்லது மனக்குழப்பம் படிப்படியாக/திடீரென ஆரம்பிக்கும்; அன்றாடக
வாழ்க்கையை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. |
வயதோடு சம்பந்தப்பட்ட இயல்பான
நினைவாற்றல் இழப்பு |
மனதை சுறுசுறுப்பாக வைத்து
குறுக்கெழுத்து, புதிர் போன்றவற்றில் ஈடுபடவும் |
முதுமை காலத்தில், நினைவாற்றல்
இழப்பு அல்லது குழப்பம் படிப்படியாக/ திடீரென ஆரம்பித்து அன்றாடக வாழ்க்கையைப்
பெரிதும் பாதிக்கும். |
முதுமை மறதி |
நோயாளியை மருத்துவ மனைக்கு
அழைத்துச் செல்லவும். |
திடீர் மனக்குழப்பத்தோடு
பார்வை மங்கல், பேச்சுக் குழறல், உடலின் ஒரு பகுதியில் திடீரென உணர்ச்சியின்மை |
பக்க வாதம், இரத்த ஊட்டக்
குறைவு |
மருத்துவமனை செல்லவும். உடனடி,
தகுந்த சிகிச்சை உயிரைக் காப்பாற்றும் |
குமட்டல், வயிற்றுப்போக்கு,
வெப்பம் அல்லது சூரிய ஒளி படுதலுக்குப் பின் படிப்படியாக மனக்குழப்பம்
உண்டாகுதல் |
நீர்ச்சத்து இழப்பு |
அதிகமான நீரை உண்டு
மறுநீர்ச்சத்தைப் பெறவும். |
புதிய மருந்தை எடுத்தவுடன்
நினைவிழப்பு அல்லது மனக்குழப்பம் |
பென்சோடயாசெப்பைன்கள் அல்லது
பார்பிச்சுரேட்டுகள் (benzodiazepines or barbiturates) போன்ற மருந்துகளின் பக்க
விளைவுகள் |
மருத்துவரிடம் அறிகுறிகளைக்
கூறவும். வேறு மருந்து பரிந்துரைக்கப்படும். |