ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் திருமலை மேல் திருப்பதி முழு விவரங்கள்
மூலவர்:வெங்கடாசலபதி
உற்சவர்:மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்
தாயார்:பத்மாவதி
தல விருட்சம்:புளிய மரம்
தீர்த்தம்: சுவாமிபுஷ்கரிணி
ஆகமம்:வைகாஸனம்
மங்களாசாசனம்பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
வாழ்வில் நல்ல திருப்பத்தைத் தரும் திருத்தலம்,
இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும் .
சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது..
மூலிகைகள் அதிகம்இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது..
மகான்கள் நிறைந்த பூமி என்பதால், அருளாசி நிறைந்து காணப்படுகிறது
திருமலைக் கோயிலில் 1180 கல்வெட்டுகள் இருக்கின்றன. இதில் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கின்றன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் இருக்கின்றன.
கொங்கணவர் சித்தர் சமாதி அடைந்த தலம் .
இத் தலம் ஆதிவராஹ க்ஷேத்ரம்
கருட சேவை பிரம்மோச்சவத்தில் மட்டும் நடத்தப்பட்டது.
தற்போது பௌர்ணமி அன்று மாதாமாதம் மாலை நடத்தப்படுகிறது.
திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடம். கி.மு. 500-300 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழ் திருப்பதி, மேல் திருப்பதி என இரு பகுதிகளும் திருப்பதியின் இரு பாதிகளாகவே மக்களால் போற்றப்படுகிறது.
திருமலை ஏழுமலையான் கோபுர மண்டபத்தின் மேற்பகுதி முழுதும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
திருமலையில் திருவேங்கடவன் கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே
ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது
இது முழுதும் கல்லால் வேயப்பட்டு பொன்னால் போர்த்தப்பட்டதாகும்.
திருப்பதி சொல் விளக்கம்
திரு + பதி, திரு என்ற தமிழ்ச்சொல்லுக்கு செல்வம், புனிதம், மகிமை, மேன்மை போன்ற பொருள் பெறும்.
பதி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கணவன் என பொருள்.
திருப்படி என்ற சொல்லே திருப்பதியாக மருவியது என்றும் கூறுவர். திருமலையில் ஏழு சிகரங்கள் இருப்பதால் ஏழுமலை என்று தமிழிலும், ஏடு கொண்டலு என தெலுங்கிலும் பெயர்.
இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் இரண்டாவது தலம்.
இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், வெறுங்கைவேடன் என்பதே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும்.
திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.
அலிபிரி - திருப்பதிக்கு அருகில் உள்ளது. நெடுநாட்களாக பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருவது.
9 கிமீ நீளமுள்ள இந்த மலைப்பாதையில் ஐந்து கோபுரங்களுடன் மொத்தம் 3550 படிக்கட்டுகள் உள்ளன
ஸ்ரீவாரி மெட்டு - திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்திற்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து சமீப ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது.
வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது.
இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது.
இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது
இக்கோயிலின் நிர்வாகத்தினை திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்கிறது.
ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932ல் மதராஸ் அரசாங்கத்தில் திருமலை இருந்தது. அப்போது 1933ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டது
திருப்பதியில் இருக்கும் ஏழு மலைகளை உடைய திருமலையில் அமைந்திருக்கிறது வெங்கடாசலபதி கோயில்.
இந்த எழுமலைகளும் வைகுண்டத்தில் விஷ்ணு அமர்ந்திருக்கும் ஆதிசேஷன் என்ற நாகத்தின் ஏழு தலைகளை குறிக்கிறது. அதேபோல இந்த ஏழு மலைகளில் வெங்கடாத்திரி மலையில் திருப்பதி கோயில் அமைந்திருக்கிறது.
ஏழு மலைகள்: சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாச்சலம், விருஷபாசலம், நாராயணசலம், வெங்கடாசலம் என ஏழு மலைகளைக் கொண்டதால் சப்தகிரி என அழைக்கப்படுகிறது.
சங்கம் மருவிய இலக்கியம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இத்தலத்தை ‘நெடியோன் குன்றம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமையிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வார்கள். .
திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர்.
அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.
உலகிலேயே அதிக பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் கோயில் என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. தினமும் இங்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் பக்த்தர்கள் வரை தரிசனம் செய்ய வருகின்றனர். பிரம்மோர்ச்சவம் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஐந்து லட்சம் பக்தர்கள் வரை இங்கு வருகின்றனர்.
இங்கு வரும் பக்த்தர்கள் அனைவரும் பெரும் கொடையளிப்பது வாடிக்கை. அப்படி செய்ய காரணம் என்னவென்றால் வெங்கடாசலபதி கடவுள் தன்னுடைய திருமணத்திற்காக செல்வத்தின் அதிபதியான குபேரனிடம் 1,14,000
தங்க காசுகளை கடனாக பெற்றதாகவும் அதனை திருப்பி கொடுக்க வெங்கடாசலபதிக்கு உதவி செய்யும் பொருட்டே உண்டியலில் பெரும் கொடையளிக்கும் வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது .
தல வரலாறு
ஒரு முறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார்.
அப்போது, பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும், என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்.... இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.
முனிவரின் சோதனை :
பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்தக்கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு, சிவலோகம் சென்றார்.
சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.
அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு
சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டு மென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் எட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாதத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.
பத்மாவதி பிறப்பு :
பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள்.
லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயணவனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால், அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர்.
வேடனாக வந்த சீனிவாசன் :
பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருமணத்திற்கு தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது.
திருமணம் முடிந்து ஸ்ரீநிவாசன் ஆகாச ராஜனை, தனக்கு ஒரு கோயில் காட்டி தர சொல்ல, திருப்பதி கோயில் கட்டப்படுகிறது.
ஆகாச ராஜன் இறந்த பிறகு அவன் மகன் வாசுதனனுக்கும், ஆகாச ராஜனின் தம்பி தொண்டைமானுக்கும் யார் வாரிசு என்று சண்டை ஏற்படுகிறது, தொண்டைமான் இரவில் கோயிலுக்கு சென்று ஸ்ரீனிவாசனை வேண்டி கேட்டுக்கொள்ள, அவனுக்கு தன் சங்கு சக்கரம், இரண்டையும் துணையாக அனுப்பி அவனை வெற்றி பெற வைக்கிறார். அதனால் தான் திருப்தியில் சாமியின் சிலையில் சங்கு சக்கரம் இல்லை
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது.
பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து, இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.
முடி காணிக்கை
நீலி தேவி என்னும் கந்தர்வ இளவரசி வெங்கடாசலபதிக்கு தலையில் அடிபட்டு கொஞ்சம் முடி நீங்கி இருக்கவே அவர் அழகில் குறை படக்கூடாது என தன்னுடைய முடியை அறுத்து மாயாஜாலத்தின் மூலம் எழுமலையானுக்கு அவர் வழங்கினாராம். அதற்க்கு கைமாறாக தன்னை தரிசிக்க வரும் பக்த்தர்கள் அவர்களது முடியை உனக்கு காணிக்கையாக வழங்குவார்கள் என வரமளித்துள்ளார்.
ராஜ கோபுரம்:
இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி
மஹா துவாரம்' என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.
மூன்று பிரகாரம்:
கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை "சம்பங்கி
பிரதட்சிணம்' என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.
கிருஷ்ண தேவராய மண்டபம்:
கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.
ரங்க மண்டபம்:
சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.
திருமலை ராய மண்டபம்:
ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.
ஜனா மண்டபம்:
திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.
துவஜஸ்தம்ப மண்டபம்:
வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங் களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.
நடிமி படி காவிலி:
இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி' என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.
திருமாமணி மண்டபம்:
பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் 2 மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு,
"திருமாமணி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டது. "முக மண்டபம்' என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சன்னதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.
பங்காரு வகிலி:
திருமாமணி மண்டபத்தைக் கடந்து "பங்காரு
வகிலி' எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.
கருவறை:
வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை "ராமர் மேடை' என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்தி களின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர்.இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு "குலசேகர
படி' என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது, ""செடியாய
வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின் கோயில் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!'' என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.
பிரகார தெய்வங்கள்:
வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.
உண்டியல் மண்டபம்:
கோயிலுக்குள் செல்லும் பக்தர்களில் ஒருவர் விடாமல் உண்டியல் செலுத்த சென்று விடுவார்கள். தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள்,
""யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,''என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி, அவர் நம்மிடமிருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். "காவாளம்'
எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும்.
அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு, புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படும். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப் படும். பக்தர்களில் சிலர் உண்டியல் எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப் படுவர். அவர்கள் கையில் சில்லரைக் காசு கூட கொண்டு செல்லக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி, பெரும் தொகை, நகைகளுடன் உள்ளே சென்றுவிட்டால், அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகி விடும்.சில பக்தர்கள் தங்கள் நகைகளை உண்டியல் முன்னால் நின்று கழற்றிப் போடுவதாக நேர்ச்சை செய்துகொள்வர். இந்த நேர்ச்சையை "நின்றபடியே உருவிப்போடுதல்' என்பர். தெலுங்கில் இதை "நிலுவு தோபிடி' என்பார்கள். உண்டியல் மண்டபத்தை "பரகாமணி
மண்டபம்' என்பர்.
வரதராஜ சுவாமி சன்னதி:
திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
யோக நரசிம்மர் சன்னதி:
முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந் துள்ளது. இவரை கிரிஜாநரசிம்ம சுவாமி என்று அழைப்பர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப் பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற் களாக இருக்கின்றன.
கருடாழ்வார் சன்னதி:
வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரம்மோற்ஸவ கொடியேற்றும்போது அந்த கொடியில் கருடனின் உருவம் பொறிக்க பட்டிருக்கும். இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத் தால் நோய், நொடி எதுவும் வராது என்பது நம்பிக்கை. வெங்கடாசல பதிக்கு காலை பூஜை முடிந்ததும் பரிவார தேவதைகளுக்கு நைவேத்யம் எடுத்து செல்லப்படும். அதை ஒரு சிவிகையில் (பல்லக்கு) சுமந்துசெல்வார்கள்.
அந்த சிவிகை கருடாழ்வாரின் அம்சமாக கருதப்படுகிறது. கருவறைக்குள் நுழையும் வழியில் உள்ள ராமர் மேடையில் உற்சவ கருடாழ்வார் காட்சியளிக்கிறார்.
ராமானுஜர் சன்னதி:
சங்கீர்த்தன பண்டார அறையின் வடக்கே, ராமானுஜர் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியை, "பாஷ்யக்காரர் சன்னதி' என அழைக் கிறார்கள். ராமானுஜர் திருமலைக்கு வந்தபோது, பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம்புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண் டில் இவரது சன்னதி அமைக்கப் பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சங்கீர்த்தன பண்டார அறை:
ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் "தலப்பாகமரா'
எனப்படும் "சங்கீர்த்தன பண்டார' என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். "தலப்பாக'
கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார்,
பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக இதற்கு "சங்கீர்த்தன பாதுகாப்பு அறை' என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. கி.பி.1424ல் அன்னமாச்சாரியாரும்,
அவரது மகன், பெயரனும் திருமலைக்கு வந்தனர். அவர்கள் பெருமாளைப் பணிந்து பல பாடல்களை பாடியுள்ளனர். தென்னிந்திய இசைக் கலைக்கு இவர்களது பாடல்கள் மகுடம் சூட்டுவது போல் உள்ளன.
மடப்பள்ளி:
பகவானுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் முக்கிய சமையலறையை "பொட்டு'
என்று சொல்கிறார்கள். இதற்குள் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். அவளை "பொட்டு அம்மா' என்கிறார்கள். இதற்கு "சமையலறை பெண்மணி' என்பது பொருள். இவளை "மடப்பள்ளி நாச்சியார்' என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளமாலிகா என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம், பணியாரம், லட்டு, வடை, அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறையை "படிப்பொட்டு' என அழைக்கிறார்கள்.
கலியுக வைகுண்டம்
வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட கி .பி ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பிரதாயத்தில்ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.
வியாசராய தீர்த்தர்
16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வாசாரியாரான வியாசராய தீர்த்தர், விமானத்தின் வடகிழக்கு திசையில் இருந்த இறைவனின் சிறுபிரதிமை மீது தியானத்தில் மூழ்கி முக்தியடைந்தார். அன்றிலிருந்து அப்பிரதிமை விமான வேங்கடேசர் என பக்தர்களால் வணங்கப்பட்டுவருகிறது. விமானத்தின் வடகிழக்கு மூலையில் இன்றும் அடியவர்கள் காணும் வண்ணம் அப்பிரதிமைக்கு மட்டும் வெள்ளியினால் வேயப்பட்ட திருவாசியோடு காட்சியளிக்கிறார் விமான வேங்கடேசர்.
திருப்பதி லட்டு
திருப்பதி என்றாலே ஏழுமலையானுக்கு அடுத்தப்படியாக லட்டு, மொட்டை, உண்டியல்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு லட்டு பிரசாதம் மக்களை ஈர்த்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் லட்டு பிரத்தியேக முறையில் செய்யப்படுகிறது. அதுபோல வேறுயாரும் தயாரிக்காமல் இருக்க புவிசார் குறியீடு காப்புரிமை பெற்றதாகும். கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருள்களால் மிகவும் சுவையாக இங்கு லட்டு தயாரித்து பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. 1931 ம் ஆண்டு கல்யாணம் ஐயங்கார் என்பவரே லட்டை இங்கு அறிமுகம் செய்தார்.
கோவில் யாருக்கு சொந்தம்
யாதவ ராஜனின் சபையில், இந்த கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என்று நாலு பிரிவினர் வாதிட்டனர், சக்தி வழிபாடு செய்யும் சாக்த மத பிரிவினர், சிவனை வழிபாடு செய்யும் சைவ மத பிரிவினர், விஷ்ணுவை வழிபாடு செய்யும் வைணவ மத பிரிவினர், முருகனை வழிபாடு செய்யும் கௌமார மத பிரிவினர் ஆகியோரே இந்த நாலு குழுவினர்
சக்தி வழிபாடு செய்யும் சாக்த மத பிரிவினர்,
தேவி பாகவதத்தில், இந்த மலையில் உள்ள தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வரி என்றுதான் கூறுகிறது,அதனால் தான் வெள்ளிகிழமைகளில் சாமியின் சிலைக்கு தாமள சேவா என்ற பெயரில் மஞ்சள் பூசப்படுகிறது,ஸ்த்ரி சுக்தம் என்ற பெண் சம்பந்தப்பட்ட மந்திரம் ஓதப்படுகிறது,இந்த கோயிலின், தெய்வம் பாலாஜி ஏறனு அழைக்கப்படுகிறது, பாலா என்ற வடமொழி சொல் பெண்குழந்தையை தான் குறிப்பிடுகிறது,கோயில் விமானத்தில்கூட விஷ்ணுவின் கருடனுக்கு பதில் காளியின் சிங்க உருவமே இருக்கிறது
அதனால் இது ஒரு சக்தி அல்லது காளி கோயிலே என்று வாதிட்டனர்.
சிவனை வழிபாடு செய்யும் சைவ மத பிரிவினர்,
சங்கராச்சாரியாரின் ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் ஸ்ரீசைலம் மலையின் மல்லிகார்ஜுன சாமி பற்றி சொல்லப்படுகிறதுதிருப்பதி மலையின் பெயரே ஸ்ரீசைலம் தான் சிலையில் நாகபூஷணம் (பாம்பு ஆபரணங்கள்) உள்ளது, சிவனே நாகப்பாம்பை ஆபரணங்களாக அணிபவன் சிலையில் நெற்றியில் பிறை நிலா உள்ளது, சிவனே பிறை நிலவை ஆபரணமாக அணிபவன் இந்த கோவிலில் இன்றும் வில்வ இல்லை கொண்டு பூஜை செய்யப்படுகிறது, வில்வம் சிவனுக்குரியது இந்த சிலையில் ஜடாமுடியுடன் இருக்கிறது, ஜடாமுடி சிவனுக்குரியது
ஆகவே இந்த கோயில் ஒரு சிவன் கோயிலே என்று வாதிட்டனர்.
முருகனை வழிபாடு செய்யும் ஸ்கந்த மத பிரிவினர்
மலை கோயில் என்றாலே அது முருகனின் கோயில் தான்.அங்கு இருக்கும் குளத்தின் பெயரே சாமி புஷ்கரணிசாமி என்ற சொல்லே குமாரசாமி, கந்தசாமி, சுப்ரமணிய சாமி என்று ஸ்கந்தனை குறிக்கும் சொல்தான் சுப்ரமணியன் தன் தந்தையின் கட்டளைபடி இந்த மலையில் உள்ள புஷ்கரணியில் குளித்து இங்கு தவம் செய்ய வந்தான் அதனால் தான் ஆயுதம் இல்லாமல் இருக்கிறான்
ஆகவே இந்த கோயில் ஒரு சுப்ரமணியன் கோயிலே என்று வாதிட்டனர்.
விஷ்ணுவை வழிபாடு செய்யும் வைணவ மத பிரிவினர், இந்த பிரிவினருக்கு ராமானுஜர் தான் தலைவர்.
அங்கிருக்கும் குளத்தின் பெயரே சாமி புஷ்கரணி, சாமியின் தீர்த்தம், அதாவது, வைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம், இந்த புஷ்கரணியில் இருக்கும் தெய்வம், லட்சுமி,தொண்டைமானுக்கு போரில் உதவ கொடுத்ததாலே, சிலையில் சங்கு சக்கரம் இல்லைபாகவதத்தில் கூட விஷ்ணு ஜடாமுடியுடன் தான் சித்தரிக்கபடுகிறார்.விஷ்ணுவின் படுக்கையே நாகம் தான் அதனால் நாகபூஷணம் அணிந்து இருப்பது விஷ்ணு