Monday, November 9, 2020

கமல்ஹாசன்

 கமல்ஹாசன் சாதனை குறிப்புகள்

1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா
2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960
3
சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்
4
எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி
5
ஜெயலலிதாவுடன் முதல் படம்
  உன்னை சுற்றி உலகம்
6
முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாககண்ணும் கரளும்
7
முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே
8
முதல் வங்க மொழிப் படம் கபிதா
9
முதல் கன்னடப் படம் கோகிலா
10
முதல் தெலுங்குப் படம் பொன்னி
11
கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி
12
முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாகபார்த்தால் பசி தீரும்
13
முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்
14
மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்
15
நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்
16
பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்
17
பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே
18
வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்
19
மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்
   பயன்படுத்தப்பட்டது.
20
மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.
21
இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.
22
ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.
23
சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.
24
கமலின் 100வது படம் ராஜ பார்வை
25
கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை
26
ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.
27
ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்
28
அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.
29
பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.
30
சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.
31
இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.
32
முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.
33
முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
34
ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.
35
மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35       மலையாளப் படம் நடித்துள்ளார்.
36
கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
37
பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
38
இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.
39
கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் ந்து  ரமிக்க  வைத்தப்  படம் ஹேராம்.

40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன்சாருஹாசன், சுஹாசினி
41
ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங்
பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
42
ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச்
மகாராஜா பயன்படுத்தியது.
43
ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும்,
கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்
44
பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.
45
கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
46
கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
47
ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
48
நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
49
ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
50
ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
51
ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்
52
இயக்கியப் படங்கள் இரண்டு
53
ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
54
சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16
வயதினிலே,இந்தியன்,
55
தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருதுமுறை பெற்றவர்.
56
தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர்எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி,
ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
57
சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.
58
ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.
59
நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.
60
தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர்,
விருது தொகை பத்தாயிரம்.
61
தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.
62
ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற
மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
63
ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
64
ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன்
ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.
65
அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.
66
அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.
67
சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.
68
அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
69
பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள்
சரணம் ஐயப்பா, மானே மானே, உல்லாசம்.
70
முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.
71
ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.
72
ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர்இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
73
ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.
74
ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த
முதல் தமிழ் படம் இதுதான்.
75
டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.
76
அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.
77
விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.
78
ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.
79
ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.
80
முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.
81
திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி,
விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.
82
கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.
83
இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.
84
பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)
85
மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதிநம்மவர்.
86
ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம்இந்திருடு சந்திருடு.
87
சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.
88
பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.
89
பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
90
ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
91
ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.
92
தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.
93
படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.
94
கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.
95
கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா,
வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
96
கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.
97
கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.
98
ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும்
ஒரே நடிகர் கமல்.
99
இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.
100
கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார்பாரதிதாசன், கண்ணதாசன்.
101
பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்
102
கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம்
விலையாகி உள்ளது.
103
சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய
தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.
104 62
நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.

இன்னும் பல சாதனைகளை இன்றளவும் செய்து வருகிறார்