Thursday, December 24, 2020

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

 

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

 


          இந்த 2020ம் ஆண்டு துவக்கம் முதலே பல பிரச்சனைகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. கொரோனாவில் துவங்கி, பல்வேறு துறைகளை சார்ந்த பல ஜாம்பவான்கள் இந்த ஆண்டில் இயற்கை எய்தியது உலக மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.  துன்பம், துயரங்கள் அனைத்தும் நீங்கி, உங்க மக்கள் இடையே மீண்டும் இயல்பு வாழ்க்கையும், பேரின்பமும் இந்த கிறித்துமஸ் நாளில் இருந்து பொங்கட்டும்.

            சாதி, மத, இன வேறுபாடு இன்றி, மனிதம் மட்டும் உலக மக்களின் உள்ளத்தில் மேலோங்கட்டும். இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமின்றி, கொரோனா போன்ற உலக வைரஸ் தொற்று பரவலின் போதிலும் பணம், புகழ், சாதி, மதம், இனம் எல்லாம் வெறும் தூசு, மனிதனை, மனிதன் காக்க மனிதம் மட்டுமே உதவும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது 2020ம் ஆண்டு.  இயற்கையும், உலகமும் நமக்கு மீண்டும், மீண்டும் உரைப்பதும், உணர்த்துவதும் ஒன்று தான். அது அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால், எத்தகைய சவால்களையும், துயரங்களையும் எளிதாக தாண்டி வரலாம் என்பதே. இந்த கிறிஸ்துமஸ் தினம், உலகம் முழுவதும், உலக மக்கள் அனைவர் இடையேயும், சமத்துவம் பொங்க செய்யும் பெருவிழாவாக அமையட்டும்...

வாழ்த்துக்கள்

                  
இந்த கிறிஸ்துமஸ் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அளிக்கும் நினைவுகளை நமக்கு தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்