உலகில் உள்ள மக்களை வதைத்து கொண்டு இருக்கும் கோவிட்-19 (கொரோனா என்ற) கொடிய நோய் என்னையும் பாதித்தது. இந்நோயினால் நான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கபட்டு விட்டேன். பொருளாதாரத்தில் மிகவும் அதிக செலவு செய்து உயிர் பிழைத்து தற்போது நலமாக இருக்கிறேன். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிட்டேன். மகளின் திருமண செலவுக்காக வைத்திருந்த தொகையில் 50 சதவீதம் செலவு செய்துவிட்டேன் இது என்னுடைய அஜாக்கிரையா அல்லது அலட்சியமா என்று தெரியவில்லை. எனதருமை வாசகர்களே அரசு கூறியுள்ள சமூக இடைவெளி விட்டு முக கவசம் அனிந்து அனைவரும் நலமாக இருங்கள். என் வாசகர்கள் அனைவரும் நலமாக இருப்பதற்கு ஆண்டவனை வணங்கிகொள்கிறேன்