Thursday, January 14, 2021

நடராஜர் இடது காலை ஊன்றி வலது கால் தூக்கி நடன கோலம்

 

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ....

             நடராஜர் நடன கோலத்தில் காட்சி தரும் எல்லா இடங்களிலும் வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனம் ஆடும் கோலத்தில் தான் காட்சி தருகிறார்  மதுரை வெள்ளி சபையில் மட்டுமே இடது காலை ஊன்றி வலது கால் தூக்கி நடன கோலத்தில் காட்சி தருகிறார்

 



                இதற்கு காரணம் ராஜசேகர பாண்டிய மன்னன். பாண்டிய மன்னன் 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து ஆடலரசனிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தவர் நடராஜர் நிற்கும் கோலத்தை பார்த்து திகைத்து நடனம் ஆடும் போது உடல் சோர்வு அடைவதை உணர்ந்தால் காலம் காலமாக ஒரு காலில் நின்று கொண்டு இருந்தால் எவ்வளவு துன்பம் தரும் என்று வருந்தினார்

           யாரிடம் சென்று முறையிடுவது என்று தவித்து சரி ஈசனிடமே கேட்டு விடலாம் என்று சிவராத்திரி அன்று நான்காவது கால பூஜை முடிந்து ஈசனிடம் இறைவா உனக்கு கால் வலிக்குதோ இல்லையோ எனக்கு உன்னை கானும் போது எனக்கு வலிக்கிறது கால் மாற்றி ஆடலாமே என்று வேண்டினார் சிவன் வழக்கம் போல சிலையாகவே பார்த்து கொண்டு இருந்தார் வேடிக்கையை !  பக்தியை பறைசாற்றும் வழக்கம் பக்தனுக்கு இல்லை ஆனாலும் பரமனின் மீது கொண்ட பக்தியால் பாதம் மாறாவிட்டால் உன் முன்பு கத்தியை நட்டு அதன் மீது விழுந்து உயிர் துறப்பேன் என்று கண் மூடி வணங்கி கண் திறந்த போது ஆடலரசன் அசைந்து கொடுத்து பாதம் மாறி நடனம் காட்சி கொடுத்தார்.  நடராஜர் பாதம் மாற்றிய பதம் பற்றி பத்தாம் நூற்றாண்டில் வல்லாளசேன மன்னனின் நைக்தி செப்பு பட்டயங்கள் பறைசாற்றுகின்றது.

 

தில்லையில் கனகசபை ஆனந்த தாண்டவம்!

மதுரையில் வெள்ளிசபை சந்தியா தாண்டவம்!

திருநெல்வேலியில் தாமிரசபை முனி தாண்டவம்!

குற்றாலத்தில் சித்திரசபை திருபுர தாண்டவம்!

திருவாலங்காடு ரத்தின சபை காளி தாண்டவம்!

ஸ்ரீ சைலத்தில் உள்ள கோவிலில் ஆனந்த தாண்டவம் போன்றே சந்தியா தாண்டவம் சிற்பம் உள்ளது மதுரையில் மட்டுமே பாதம் மாறி காட்சி தருகிறார்

 

       நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகம் அதில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பானது வானத்தில் ஆதிரை நட்சத்திரம் சிகப்பு நிறத்தில் காட்சி தரும் பெளர்ணமி அன்று ஆதிரை நட்சத்திரம் சந்திரனுக்கு மிக அருகில் தெரியும் விடியல் காலை நான்கு மணிக்கு இரண்டும் அழகாக நம் கண்களால் காண முடியும் நடராஜருக்கு ஆதிரை, பெருமாளுக்கு உள்ள ஓணம் நட்சத்திரம் இரண்டும் இறைவன் ஜெயந்தி என்பதால் திருஆதிரை திருவாதிரை நட்சத்திரம் என்றும் ஓணம் திருவோணம் என்றும் இரு நட்சத்திரம் மட்டுமே திரு பட்டம் பெற்றது!  மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் காலை பொழுது அந்த நேரத்தில் நாம் பூஜைகள் செய்ய வேண்டும் என்று தான் மற்ற எந்த விஷேசங்களும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் சைவம் வைணவம் இரண்டிற்கும் மிகவும் முக்கியமான மாதம் வைகுண்ட ஏகாதசி அனுமன் ஜெயந்தி திருவாதிரை விழா பாவை நோன்பு இப்படி விழாக்கள் வரிசையில் இருப்பது . கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பு இதே மார்கழியில் தான் .

 

             இதில் இஸ்லாமிய மதம் இணைய முடியாது காரணம் இஸ்லாமிய மாதம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டது 354 நாட்கள் கொண்டது அவர்களின் திருநாள் , மாத பிறப்பு சந்திரனை சார்ந்து தான் உள்ளது ஆங்கில வருடத்தில் 11 நாட்கள் குறைவதாலும் முதல் பிறை வரும் நாட்களில் என்பதால் மார்கழி மாதம் அவர்களை சராசரி மாதமாக உள்ளது அவர்கள் புனித ஸ்தலம் காபா மேற்கு திக்கில் இருப்பதால் மேற்கு நோக்கி அமர்ந்து வழிபாடு செய்கின்றனர் நாம் இறைவன் கிழக்கு நோக்கி இருப்பதால் மேற்கு முகமாக வழிபாடு செய்கிறோம் கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பை கிழக்கு திக்கில் நட்சத்திரம் உதித்து சொன்னதால் அவர்களும் கிழக்கு திசை நோக்கி இறைவன் இருப்பதால் அவர்களுக்கு கிழக்கு திசை புனிதமானது மார்கழி மாதத்தில் பெளர்ணமி ஆதிரை தரிசனம் செய்ய விடியல் காலை மேற்கு பகுதியில் சந்திரன் இருக்கும் போது ஆதிரை நட்சத்திரம் அருகில் இருக்கும்....ஆதிரை அழகனே போற்றி போற்றி.....