கேஸ் சிலின்டர் மானியம் உங்களுக்கு எவ்வளவு வந்துள்ளது? வீட்டில் இருந்தபடியே எப்படி தெரிந்து கொள்வது?
LPG
கனெக்சன் சப்சிடி பணம் சரியான முறையில உங்களது வங்கி கணக்கில் வருகிறதா என்று வீட்டில் இருந்தே எப்படி தெரிந்துகொள்வது?
· முதலில் http://mylpg.in/index.aspx என்கிற வலைத்தளத்திற்குச் செல்லவும்.
· வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் மூன்று எல்பிஜி நிறுவனங்களின் சிலிண்டர்கள் படத்துடன் இருக்கும்.
· உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.
· எடுத்துகாட்டாக, இண்டேன் நிறுவனத்திடம் இருந்து சமையல் எரிவாயு உருளையை வாங்கிக் கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தின் சிலிண்டர்-படத்தை கிளிக் செய்யவும்.
· பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும்.
· இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும்.
· இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானியத்துக்கான முழுவிவரங்களும் கிடைக்கும். உங்களது கணக்கின் மீத தொகை, எவ்வளவு மானியம் வந்துள்ளது போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
· உங்களுக்கு மானியதொகை எதுவும் அதில் தெரியவில்லை எனில் அந்த இணையத்தில் Feedback பட்டனை அமுக்கி புகாரினை பதிவு செய்யலாம்.
· அது மட்டும் இல்லாமல் இலவச அழைப்பான 18002333555 என்ற எண்ணில் அழைத்து சரியான தகவல்களை கொடுத்து புகாரினை பதிவு செய்யலாம்.