தஞ்சாவூர்
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் ... சோழர் காலத்து .. 1000 ஆண்டு பழமை கோட்டை சுவர் திருவள்ளுவர் தியேட்டர் இருந்த இடத்தில் கண்டு பிடிப்பு ... என்ற செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில் ... சில வரலாற்று உண்மைகள் ..சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் கட்ட பட்ட தஞ்சாவூர் கோட்டை சுவர்கள் ..
பெரியகோயிலை சுற்றியுள்ள
சிறிய கோட்டை ... நான்கு வீதிகளையும் உள்ளடக்கி உள்ளது பெரிய கோட்டை சுவர்... இதோ அதன் வரலாறு .. நாயக்க மன்னர்கள் தான் இப்போது உள்ள அரண்மனை, கோட்டை, மற்றும் அகழி, அமைப்புகளை 1535 முதல் 1560 வரை ஏற்படுத்தினார்கள் .
பழைய சோழர் கால அரண்மனை வடவாற்றின் தென் கரையில், சீனிவாசபுரம்
மற்றும் மேலவெளி பகுதிகளில் இருந்தது. அது 1279 ஆம் ஆண்டில் பாண்டிய மன்னரால் எரித்து அழிக்கப்பட்டது
. சோழர் கால சிறு அரண்மனை, "பொன்னியின் செல்வன்" நூலில் கல்கியின் கற்பனையில் வரும் அரண்மனை போன்று இருந்திருக்க
கூடும். தற்போதுள்ள தஞ்சாவூர் கோட்டை நகர கோட்டை சுவர்கள் ... கோட்டையில் உள்ள அரண்மனை நாயக்கர்களால்
கட்டப்பட்டது. இரண்டு வகையான கோட்டைசுற்று சுவர்கள் தஞ்சையில் கட்டப்பட்டன .. ஒன்று.. நான்கு வீதிகளையும் உள்ளடக்கிய பெரிய கோட்டை ... இரண்டாவது ... பெரியகோவிலையும், சிவகங்கை தோட்டத்தையும்,
குளத்தையும் உள்ளடக்கிய சிறிய கோட்டை. இவை இரண்டும் நாயக்க மன்னர்களால்
கட்டப்பட்டது. சிறிய கோட்டை தஞ்சையின் பெரிய கோட்டையை விட பழமையானது. சீனிவாசபுரத்திற்கு அருகே இடிந்து விழுந்து கிடந்த, அழிக்கப்பட்ட சோழர் அரண்மனையின்
கற்களை கொண்டு, கோட்டை கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
கோட்டைகளின் வெளிப்புறம் உள்ள அகழி நாயக்க மன்னர்களால் தோண்டப்பட்டபோது, பெரிய கோயிலின் கிழக்குப் பகுதியில் இருந்த “அழகி குளம் ” அல்லது “அழகிய குளம்” என்ற ஒரு ஏரிக்கு மேற்கிலிருந்து கிழக்கே வந்துகொண்டிருந்த ஒரு பெரிய மழை வடிகால் நீரோட்டம் பாதிப்பு அடைந்தது. அது தான் மேற்கே தேக்கப்பட்ட நீர்நிலை ... "சேவப்பநாயக்கன் எரி" ஆனது. இந்த "சேவப்பநாயக்கன் எரி" உபரி நீர் அகழியை நிரப்புவதற்கான நீர் ஆதாரமாகவும் அமைந்து இருந்தது. பிற்காலத்தில் இந்த குறிப்பிட்ட அகழி பகுதி, "நல்ல தண்ணீ " அகழி என்று அழைக்கப்பட்டது. ஒரு சிலர் ... தஞ்சை அகழிக்கு ... வடவாற்றில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டது என்று கூறுவது சாத்தியமாகாது ... ஏனென்றால் தஞ்சை கோட்டை நகரம் மற்றும் அகழி இருப்பது மேட்டு பகுதி ... வடவாறு ஓடுவது தாழ்வான பகுதி . சேவப்ப நாயக்கர் அமைத்த "சேவப்பநாயக்கன் ஏரி" / சேவப்பநாயக்கன் வாரியிலிருந்து சிறுகோட்டையில் உள்ள "சிவகங்கா" குளத்துக்கு குழாய் வழியாக அகழியைக் கடந்து செல்ல ஒரு குழாய் வழி பாதையை சேவப்ப நாயக்கர் அமைத்தார். இந்த குழாய் வழி அமைப்பை இன்றும் காணலாம். சிவகங்கை குளத்தில் இருந்து மண் குழாய்கள் மூலம் கோட்டை பகுதி நீர்நிலைகளுக்கு நீர் வழங்கல் திட்டம், "ஜலசுத்ரா" அமைப்பு என்று அழைக்கப்பட்டது. இந்த குடிநீர் திட்டத்தை ஏற்படுத்தியவர் சேவப்ப நாயக்கர்.
இந்த “ஜலா சுத்ரா” முறையால் நாயக்கர் மற்றும் மராத்தா காலத்தில் தஞ்சாவூர் நகரத்திற்கு நீர் வழங்கப்பட்டது. 1980 களுக்குப் பிறகு கட்டிட அடித்தளங்கள் பிறகு பாதாள சாக்கடை தோண்டப்பட்ட
போது இந்த பழங்கால குழாய் நீர் வழி இறுதியில் அழிக்கப்பட்டது.
முதலில் வல்லம் அருகே செல்லும் “முதலமுட்டி வாரி” என்பது சேவப்பநாயக்கன்
வாரி (சேப்பனாவாரி)
மற்றும் அகழிக்கான அசல் நீர்நிலை கால்வாயாக இருந்திருக்க கூடும் . அந்த நாட்களில் அகழியில் முதலைகள் இருந்தன. அகழி நிரப்பப்பட்ட
மழைக்காலங்களில், முதலைகள், நீர் நுழைவாயிலுக்கு எதிராக மோதுமாம் . எனவே இந்த நீர் நீர்நிலை நீரோடை, “முதலை முட்டி வாரி” என்று அழைக்கப்பட்டதாம். 1862ல் ரயில்வே லைன் மற்றும்1935 ஆம் ஆண்டில் கல்லணை கால்வாய் அல்லது "புதாறு" தோண்டப்பட்டதன் மூலம் பெரிய நீர்வழி திடமான "சேப்பனாவாரி வாரி" க்கான நீர்நிலை கால்வாய் மேலும் பாதிக்கப்பட்டது. "முதலைமுட்டி வாரி" ன் நீர்தடம் ஆலகுடிக்கு அருகிலுள்ள அக்வா-டக்ட் மூலம் வடக்குப்புறம் திசை திருப்பி, ஆங்கிலேயர்கள், விவசாயத்திற்காக
பயன்படும் வகையில், வெண்ணாற்றில். தஞ்சாவூர் குடிநீர் நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோமீட்டர் பக்கத்தில்... கலக்கும்படியாக செய்தனர். களிமேடு மற்றும் இந்த வாரி வெண்ணாற்றில் கலக்கும் பகுதியில் இதனை "பேய் வாரி" என்று குறிப்பிடுவர்.
1900 களில் திலகர் திடலில் தொடங்கி தெற்குப் பகுதியில் உள்ள அகழி மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டது. பின்னர் 1950 களில் இப்போது உள்ள பஸ் ஸ்டாண்டுகள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, காவேரி சூப்பர்மார்க்கெட் போன்ற நில பகுதிகள் மண் நிரப்பப்பட்டு தூர்க்கப்பட்டன. இப்போது மீதி உள்ள அகழி கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கில் இன்றும் காணப்படுகிறது. 1950களில் (in the 1950’s) நங்கள் சிறுபிள்ளைகளாக இருந்த போது ... RMH ஆஸ்பத்திரி தாமஸ் ஹால் எதிரே இருந்த அகழி பள்ளம் மற்றும் இடிந்த கோட்டை சுவர்களின் பாகத்தை பார்த்துள்ளோம் ... அதன் அடித்தளம் தான் இப்போது திருவள்ளுவர் தியேட்டர் பகுதியில் மீண்டும் "கண்டு பிடிக்கப் பட்டுள்ளது!
தகவல்/நன்றி: இங்கு சொல்லப்படும் கருத்துக்கள்
வரலாறுகள் எல்லாமே வரலாற்றூ நூல்களில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தயவு: Diwan Bahadur
T.Venkasvamy Rao, the government Epigraphist during the late 1900's, திருவாளர்கள் வி . கனகசபை , குடவாயில் பாலசுப்ரமணியம் , டீ.ன்.இராமச்சந்திரன் , ஹெம்மிங்வெ கஸிட் ஆவணங்கள்,பிரிட்டிஷ் லைப்ரரி பதிப்புகள்]
பின் குறிப்பு::
தஞ்சாவூர் கோட்டைகள் .. பிரிட்டிஷ் அரசாங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ... முறையான... விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது .... நன்கு ஆவணப்படுத்தப்பட்டு.... பதிவு செய்யப்பட்டுள்ளது ... பிரிட்டிஷ் காப்பகங்கள்
மற்றும் பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த ஆய்வுகள் உள்ளன . இந்த கோட்டைச் சுவர்களின் வயதை அவர்கள் ... 1900ல் சுமார் 400 ஆண்டுகள் இருக்க கூடும் என்று ஆராய்ச்சி மூலம் தெளிவாக கண்டுபிடித்துள்ளார்கள். கோட்டைச் சுவர்களில்.. பெரிய கோயிலைச் சுற்றியுள்ள சிறிய கோட்டை ... நான்கு வீதிகள் அடங்கிய பெரிய கோட்டை சுவரைவிட சில வருடங்கள் பழமையானது. நாயக்க மன்னர் காலத்தில் இந்த கோட்டை சுவர்கள் கட்டப்பட்டது. இந்த உண்மைகள் யாவும் 1900களில் புகழ்பெற்ற அரசாங்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்
(EPIGRAPHIST/ எபிகிராபிஸ்ட்) திவான் பகதூர் டி.வெங்கசுவாமி ராவின் கண்டுபிடிப்புகள்
... அவரின் ஆராய்ச்சியின்
அடிப்படையில் பெரும்பாலான
பதிவுகள் செய்யப்பட்டன.
1785ல் திருவள்ளுவர் தியேட்டர் இருந்த இடம் .எலிஷா ட்ராபாட், 1785 ஆல் . தஞ்சை பிரகதீஸ்வர்
கோயிலின் ... ஒரு உண்மையான தோற்றத்தை சித்தரிக்கக்கூடிய ஒரு ஓவித்தை வரைந்தார். அந்த காலத்தில், தெற்கு பகுதியில் அகழி இருந்தது ..அந்த நாட்களில் திலகர் தி டல் பகுதியிலிருந்து
வரைந்த உண்மை காட்சியாக இது இருந்திருக்க
வேண்டும் ... அந்த காலகட்டத்தில் இது தண்ணீர் நிரம்பிய அகழி. இப்போது உள்ள திருவள்ளுவர்
அரங்கம், திலகர் திடல் மைதானம், காவிரி சூப்பர் மார்க்கெட், மாவட்ட நூலகம், இந்திய வங்கி மற்றும் பஸ் ஸ்டாண்டுகள்
போன்றவற்றை உருவாக்க பிற்காலத்தில் அகழியின் இந்த பகுதியில் மண் நிரப்பப்பட்டது
...
இந்த ஓவியம் தலைப்பிடப்பட்டு... பின்வருமாறு 1785ல் விளக்கப்பட்டுள்ளது: .... "இது உண்மையான தோற்றமுடைய ஓவியம் ... தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலின் ஒரு தொலைதூரக் காட்சி .... இரண்டு கோபுரங்கள் மற்றும் பெரிய கோயில் விமானம் ... ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன (ஆதாரம்: தி பிரிட்டிஷ் நூலகம்). " ஓவியர் எலிஷா ட்ராபாட் (பிரிட்டிஷ்; ஆண்.1750 - 1828) .... கேப்டன் டிராபாட் என்றும் அழைக்கப்படுகிறார் ... இவர் ஒரு ராணுவ கேப்டன் ... 1776 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியில்
சேர்ந்தார். தென்னிந்தியா வின் பல்வேறு கட்டிடங்களைப்
படித்த ஒரு ஓவியர்.... அவர் 1788ல் தென்னிந்தியாவின் பல்வேறு கட்டிடங்களைப்
வரைந்து 'இருபது அசல் காட்சிகள், இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டது' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்; இவரது பெரும்பாலான
படைப்புகள் இந்தியா அலுவலக நூலகம், பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளன.
மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்திலிருந்து தரவிரக்கம் செய்யப்பட்டது