Thursday, June 10, 2021

தமிழ்சினிமா வரலாறு

 தமிழ்சினிமா வரலாறு

1*1885ம்ஆண்டு பாரீஸில் கிராண்ட் கபே என்ற இடத்தில் டிசம்பர் 28ம்தேதி "புகை வண்டியின் வருகை', "தொழிற்சாலையை விட்டு' என்கி இரண்டு துண்டுப்படங்கள்(குறும்படங்களின் வகை) லுõமியர் சகோதரர்களால் காட்டப்பட்டது.

2* இந்த இரண்டு படங்களும் சென்னையில் 1897ல் சென்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கிற விக்டோரியா ஹாலில் முதன்முதலில் காட்டப்பட்டபோது மக்கள் பயந்து தான் போனார்கள்.காரணம், புகைவண்டியின் வருகை படம்பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு சென்ரல் ஸ்டேசனிலிருந்த ரயில் தான் சுவரை பொத்துக்கொண்டு வந்துவிட்டதோ என்கிற பயம். அலறியடித்துக்கொண்டு தான் ஓடினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

3* தமிழகத்தின் முதல் திரையரங்கத்தை 1900ல்மேஜர் வார்விக் " எலக்ட்ரிக்' என்கிற திரையரங்கை சென்னை அண்ணாசாலையிலுள்ள (தற்போது தலைமை தபால் அலுவலகம் )மவுண்டு ரோடில் நிறுவினார்.

4*1916ல் ஆர்.நடராஜ முதலியார், எஸ்.எம். தர்மலிங்கத்துடன் இணைந்து இண்டிநா பிலிம் கம்பெனியை துவங்கினார்.கீழ்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் ஒரு ஸ்டுடியோவை நிறுவினார் இதுவே முதல் திரைப்பட கூடமாகும்படப்பதனீட்டை நாராயண சாமி மேற்கொள்ள, நடிகர்களுக்கு ரங்கவேலு என்கிற நாடக நடிகர் நடிப்பை சொல்லித்தர முதல் திரைப்படமான "கீசகவதம்' மெனப்படத்தை எடுக்கப்பட்டது.35 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. தொடர்ந்து 1917ல் "திரௌபதி வஸ்திராபரணம்' படத்தை திரையிட்ட முதலியார் வேலுõர் சென்று "மயில்ராவணா', "மார்கண்டேயா' மௌனப்படங்களை தயாரித்தார்.

5*நிழல் புகைப்படக்கலைஞரான ஆர். வெங்கையா சென்னை விக்டோரியா ஹாலில் மௌனப்படங்களுடன் ஒலியை சேர்த்துக்காட்டிவந்தார். டூரிங்டாக்கி மூலம் தென்னிந்தியா, பர்மா, இலங்கை யில் காட்டியவர் சென்னையில் கெயிட்டி(1913) கிரௌன்(1914) குளோப் இது தற்போது ராக்ஸி இவரது திரையரங்குகளாகும்.

6*1913ல் ரகுபதிபிரகாசா(வெங்கையாவின் மகன்) கெயிட்டி திரையரங்கை நிர்மானித்து லண்டனில் 1919ல் 500பவுன்ட் செலவழித்து சினிமா கற்று எக்ஸிபிட்டர் பிலிம் சர்வீஸ் நிறுவனத்தை பார்க்டவுன் ஸ்டிரிங்கர் தெருவில் நிறுவி ஜார்ஜ் கோட்டை கோஷன் பிரபு 1926ல் அவரது மகளின் திருமணத்தை படம்பிடித்தார்.

7*புதுக்கோட்டையில் பிறந்து வீர வளையாட்டுகளில் சிறந்து விளங்கிய ராஜா சாண்டோ பம்பாய் சென்று 1923ல் நடிக்கத்தொடங்க "வீரவீஷ்மா' பெரும் புகழை சம்பாதித்து தந்தது. தமிழ்நாட்டிற்கு வந்து படங்கள் எடுத்த இவர் புராணக்தைகளின் மூலம் சமூக நீதியை சொன்னவர்1930ல் நந்தனார் தீண்டசாமையை வலியுறுத்தியும், 1931ல் அனாதைப்பெண்

பெண் கள் விரும்பிய கணவணை மணக்கலாம் என்ற கருøத்தை வலியுறுத்தி படைம் எடுத்தார்.நடிகர்களின் பெயரை டைட்டிலில் முதன் முதலில் போட வைத்தவர்.

8* மௌனப்பட கால நடிகர்களாக பேட்டலிங் மணி, ஸ்டண்ட் ராஜீ இருந்தனர். தமிழ்நாட்டில் 108 படங்கள் தயாராயின. அதே போல் பேசும் பட துவக்க காலத்தில் எம்.ஆர். கிருஷணமீர்த்தி, வி..செல்லப்பா இருந்தனர்.

9*1955ல் தமிழ்சினிமா வின் வெள்ளித்திரை ரங்கோலி விழாக்கொண்டாடியது.அதாவது முதல் வண்ண திரைப்படம் அலிபாபாவும் நாற்பத திருடர்கள் என்கிற எம்ஜிஆர் நடித்து அண்டா கா கசும்அபுல்கா குசும் திறந்திடு சீசேம் என்கிற மந்திர வார்த்தைகள் தாங்கி வண்ணமயமாக வெளிவந்து அடுத்தகட்டத்திற்கு தாவியது.1937ல் சினிமாவுக்கு வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் முதல்வண்ண படத்தை தந்தார்.

10* ஆங்கில படத்திற்கு இணையாக தமிழிலும் படமெடுக்கு முடியும் என்று நிரூபித்தவர் எஸ் எஸ் வாசன்1940 ல் மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ மூலம் சந்திரலேகா என்ற திரைப்படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகம் முழுவதும் வெளியிட்டது.

11 *9. 1958 .“ ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ். வாசன் நந்தனார் திரைப்படம் மூலம் கேபி சுந்தரம்பாளை லட்ச ரூபாய் நடிகையாக்குகிறார்.

1953ல் ஒளவையார் படத்தில் யானைகளை உழவுக்கு பயன்படுத்தி பார்ப்பவ்ர்களை பிரமிக்க வைத்தார். தொடர்ந்து நந்தனார், சம்சாரம், அபூர்வ சகோதரர்கள் ,மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளிவிளக்கு படங்களை எடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெமினி எஸ்எஸ்வாசனின் பத்திரிகையான விகடன் குழுமம் தற்போது திரைப்படங்களையும், டிவி சீரியல்களையும் தயாரித்து வருகிறது.

12*பி.என்.ரெட்டி, கேமரா கலைஞர் கே.ராம்நாத், ஆர்ட்டைரக்டர் .கே.சேகருடன் , டைரக்டர் முருகதாஸா இணைந்து அடையாறில் 1937ல் கார்த்திகேயா ஸ்டுடியோவை நிறுவி சுந்தரமூர்த்திநாயனார் படத்தை எடுத்து÷ தோல்வியடைய பிரிந்து அவ்வப்போ து சந்தித்து கொண்ட அவர்கள் பின்னர் வடபழ;‘யில் வாகினி ஸ்டுடியோவை நிறுவினர்.

13*பவளக்கொடி யில் அறிமுக மானவர் தியாகராஜ பாகவதர் அவரது சம்பளம் 1000ரூபாய்.

14*பவளக்கொடி திரைப்படம் எம்.எஸ் சுப்புலட்சுமி நடித்தது. ஐம்பது பாடல்கள் நிறைந்த திரைப்படம்.அந்த நாள் பாடல்களே இல்லாத திரைப்படம்.

15* பாலு மகேந்திராவின் சந்தியாராகம், வீடு திரைப்படங்களும் பாடல்கள் இல்லாதவைதான்.

16*கிராம போன் ரிக்கார்டிங் தொழிலில் ஈடுபட்டிருந்த .வி. மெய்யப்பசெட்டியார் கல்கத்தாவில் "இரத்தினாவளி' என்ற திரைப்டத்தை 1935ல் எடுத்து சென்னையில் மந்தைவெளியில் கபாலி திரையரங்கம் அருகே பிரகதி ஸ்டுடியோவை நிறுவினார். ஸ்ரீவள்ளி, சபாபதி, வேதாளஉலகம், நாம் இருவர், பெண், அந்தநாள் இவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்.

17*அபிமன்யு படத்தின் மூலம் வசனம் எழுதப்புகுந்த கலைஞர் மு.கருணாநிதி இராஜகுமாரி,பராசக்தி படங்கள் மூலம் கூர்தீட்டப்பட்ட வசனங்களால் பேசப்பட்டு 1969ல் தமிழகத்தின் இரண்டாவது முதல்வரானார்.

18* தியாராஜ பாகவதரைப்போல் பாடுவதில் மட்டுமல்ல சிறந்த கத்திசண்டை வீரராகவும் சிறந்து விளங்கியவர் பியூ சின்னப்பா.

19* இயல் பான நடிப்புக்கு சொந்தக்காரரான எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் மூலம் ஒரு அதிதரவலையை உருவாக்கினார்.

20*1936ல் சதிலீலாவதி திரைப்படம் மூலம் எம்.ஜி. ஆர் அறிமுகமாகி, இராஜகுமாரி படம் மூலம் கதாநாயகனாகிறார். 1976 ல் நமக்கு முதல்வரானார்.ரிக்ஷாகாரன் திரைப்படத்தில் அவருக்கு தேசி விருது கிடைத்தது.

21*ஆசியாக்கண்டத்திலேயே மிகப்பெரிய ஸ்டுடியோவான விஜயாவாகினியில் பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எங்கள் வீட்டுபிள்ளை, நாம் போன்ற திரைப்படங்களை எடுத்தது.

22*.1913ல் தென்னிந்தியாவில் கெயிட்டி தியேட்டர் கட்டப்பட்டது.

23*1943ல் ஏவி மெய்யப்பச்செட்டியார் அரிச்சந்திரா திரைப்படத்தை தமிழுக்கு முதன்முதலில் டப்பிங் செய்தார். இன்று வருடத்திற்கு குறைந்தது ஐம்பது÷ படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது.2008 முடிய டப்பிங் செய்யப்பட்ட மொத்த திரைப்படங்கள் 1646 .

24*நான்கு முதல்வர்களை இயக்கியவர் .எஸ்..சாமி ராஜகுமாரிஎம்ஜிஆர் , கலைஞர். வேலைக்காரி விஎன். ஜானகி.

25*மருத்துவமனை செட் போட்டு படம் முழுக்க எடுக்கப்பட்ட திரைப்படம் நெஞ்சில்ங ஓர் ஆலயம் 27 நாளில் படமானது.

26*இரட்டை இயக்குனர்களாக கிருஷ்ணன்பஞ்சு இயக்கிய திரைப்படம் பூம்பாவை.

27* தென் இந்தியாவின் முதல் 70 எம்.எம் தியேட்டர் என்கிற பெருமையை ஆனந்த் தியேட்டர் பெறுகிறது.அண்ணாசாலையிலிருக்கும் ஆனந்த் தியேட்டர் தற்போது வணிகவளாகமாக்கப்பட்டு மினி தியேட்டராக மாற்றப்பட்டு வருகிறது.இதன் நிறுவனர் ஜி. உமாபதி முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜ சோழவன தயாரித்தார்.

28*. அண்ணாசாலையில் மேம்பாலம் அருகே சபையர் தியேட்டர் எந்த நேரமும் திரைப்படம் ஓடிக்கொண்டேயிருக்கும் இப்போது அதன் சுவடுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

29*. 1931ல் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளிவருகிறது. திரையில் பலரும் பல மொழிகளில் தமிழில் நாயகியும், தெலுங்கில் நாயகனும், இந்தியில் மற்றவர்களும் பேசினார்கள். அந்த வகையில் திரையில் தமிழை பேசிய பெருமை பெண்களையே சாரும்.இதன் தயாரிப்பாளர் பம்பாயில் இம்பீரியல் மூவிடோன் நிறுவனஅதிபர் ஆர்தேசிர் இரானி.இவர் 12 பாடல்கள் கொண்ட இந்தியாவின் முதல் திரைப்பட மான "ஆலம்ஆரா'வைத் தயாரித்தவர். 1929ல் கொட்டகையில் படங்களை திரையிடும் கலையை அறிமுகப்படுத்தியவர்.

30*. கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக முதல் படம் "களத்துõர் கண்ணம்மா', 1960ல் நாயகனாக அவதாரம் "பட்டாம்பூச்சி', முதல் இருவேடப்படம்"சட்டம் என் கையில் ',மூன்று வேடம் " அபூர்வ சகோதரர்கள் ', நான்கு வேடங்கள்" மைக்கேல் மதன காமராஜன் ', எட்டு வேடங்கள்" எல்லாம் இன்ப மயம்', பத்து வேடங்கள்" தசாவதாரம்'.

31*. 1952ல் நடிகர் திலகம் சிவானிகணேசன் பராசக்தி திரைப்பட்ம் மூலம் அறிமுகம்.

32*. டி.பி.ராஜலட்சுமி தஞ்சை திருவையாறில் பஞ்சாப கேச அய்யருக்கும் மீனாட்சிக்கும் மகளாக பிறந்தவர்.1931ல் டி.பி.ராஜலட்சுமி காளிதாஸ் திரைப்படத்தில் நாயகி ஆனார்.சினிமா ராணி எனப்புகழப்பட்டார்.1929ல் கோபாலன், உஷாசுந்தரி ஊமைப்படங்களில் அறிமுகமானார். இவர் திருமணமாகி வரதட்சணை தன் தந்தையால் தர முடியாத சூழ்நிலையில் தாய்வீட்டோடு தங்கி பின்னர் நாடகங்கள் மூலம் நடிகையாகி சினிமாவில் கால்பதித்தவர். 1936ல் மிஸ்,கமலா திரைப்படத்தை இயக்குகிறார்.அதன் மூலம் முதல் பெண் இயக்குன்ர் ஆகிறார்.

33*.1936 முதல் 2008வரை 62 பெண்கள் மட்டுமே சினிமாவை இயக்கியுள்ளனர்.

34*. 2008 ம் ஆண்டு வரை ரிலீசான மொத்தப்படங்கள் 4700.

35*. முதல் "' சான்றிதழ் பெற்ற திரைப்படம் மர்ம யோகி.

36*.ராஜாஜி, அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம்,ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜானகி, ஜெ.ஜெயலலிதா. இப்படி ஏழு முதல்வர்களை தந்திருக்கிறது சினிமாத்துறை.

37*.முழுமையாக முழுக்க தமிழ்பேசிய திரைப்படம் காலவா 1932.

38*. முதல் சமூகப்படம் டி.கே.எஸ். சகோதரர்களின் மேனகா மேடை நாடகம்.

39*. மௌனப்பட தயாரிப்பாளரான .நாராயணன் "சீனிவாச சினிடோன்' ஸ்டுடியோவை பூந்த மல்லியில் 1934 ஏப்ரல் முதல் நாள் திறந்தார். நேரடி ஒலிப்பதிவு செய்யத்க்க வகையில் "சீனிவாச கல்யாணம் ' என்ற நடத்தை எடுத்தார்.மீனா நாராயணன் ஒலிப்பதிவாளரானார். .நராயணன், மீனாட்சி கலையுலக தம்பதியினர் ஆவர்.

40*. 1896ல் பம்பாய் நகரில் "ஏசுவின் வாழ்க்கை' சினிமாகாட்டப்பட்டது. டூரிங் டாக்கீஸ்கள், டெண்ட் திரையரங்குகள் தென்னிந்தியாவில் பரவலாக ஏற்பட முதல் காரணம் வின்சென்ட் சாமிக்கண்ணு இவர் திருச்சி இரயில்வேயில் பணிபுரிந்தவர். ஏசுவின் வாழ்க்கை, டூபாண்டின் சினிமா க்களின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் "எடிசன் மோட்டோகிராப்' என்று தனது திடைரயீட்டிற்கு பெயர் தந்து ஒவ்வொரு ஊரிலும் சென்று டெண்ட் அமைத்து திரைப்படங்களை காட்டலானார். அதனால் சினிமா கொட்டகை என்று பெயர் அமைந்தது.

41* நடிகை மனோரமா முதலும் கடைசியுமாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி'.

42*.தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் ஒரு பகுதியாக விளங்கிய "திரைப்பட பிரிவு' 1948 ஏப்ரலில் "பிலிம் டிவிஷன் ' என்று பெயர் மாற்றம் பெற்றது.

43*.திரைப்படங்கள் திரைப்பட தணிக்கை குழு வின் அனுமதி பெற்ற பின்னரே திரையிட முடியும் 1952 ம் ஆண்டு இயற்றப்பட்ட சினிமாடோ கிராப் சட்டப்படி இந்தக்குழு அமைக்கப்பட்டது.

44*1931 ல் தொடங்குகிற சினிமாவின் அறிமுகம் திரைப்படங்களின் வகைகளை பொருத்து மாறுகிறது.1931 1950 வரை புராண ,இதிகாச ,மாயா ஜாலக்காட்சிகளின் காலம் எனலாம்.

45*இந்தக்காலத்தில் ஏறத்தால 450 படங்கள் வெளியாயின அதில் 50க்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே சமூகக்ப்படங்கள் வெளிவந்தன.

46*இந்த காலத்தின் முக்கிய இயக்குனர்கள் சுந்தர்ராவ், நட்கர்னி, எம்.எல் . டாண்டன், பி.எஸ்.வி. அய்யர், பொம்மன் டி. ராணி, டி.பி.கைலாஷ், வி.சம்பத்குமார், கே.சுப்பிரமணியம், எல்லிஸ்.ஆர் . டங்கன், .நாராயணன், ஆர். பத்மநாபன், ஆர். பிரகாஷ், முருகதாஸா, பிரேம் சேத்னா, ராஜா சாண்டோ, ஒய்.வி.ராவ், ராஜா சந்திரசேகர், நொடானி, எச்.எம்.ரெட்டி, டி.ஜி. ஆச்சார்யா, டி.ஆர்.ரகுநாத், ஆர்.எஸ்.மணி இன்னும் பலர்.

47*புராண கால த்திலேயே சமூக படங்கள் என்கிற போக்குக்கு விதைகள் துõவப்பட்டன. அதில் குறிப்பாக கே.சுப்பிரமணியம் பாலயோகிணி, சேவாசதனம், தியாகபூமி.....

48*1937ல்வந்த பாலயோகிணி முதல் குழந்தைகளுக்கான திரைப்படம்.

49*19511975 வரை நாடகப்பாணி சமூக கதைகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தன. இவை உணர்ச்சி பொங்க அடுக்கு மொழி வசனங்கள் பேசின.

50*இந்தக்காலத்தில் கிட்டதட்ட 1100 படங்கள் தயாரிக்கப்பட்டன.

51*1951ல் சம்சாரம் என்கிற குடும்ப படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.திகம்பர சாமியார், சம்சாரம், பராசக்தி, இன்ஸ்பெக்டர், எதிர்பாராதது, மங்கையர் திலகம், குலதெய்வம், யார் பையன், பதிபக்தி, கல்யாணபரிசு, களத்துõர் கண்ணம்மா, பாசமலர், சாரதா, கற்பகம், சர்வர்சுந்தரம், பழநி, மோட்டார் சுந்தரம்பிள்ளை, கற்பூரம், தில்லானாமோகனாம்பாள், சுபதினம், நம்மவீட்டு தெய்வம், குலமா குணமா, ஞான ஒளி, கௌரவம், நான்ங அவனில்லை, டாக்டர் சிவா, கூர்த்தீட்டப்பட்ட அடுக்கு மொழிவசனங்கள் மற்றும் இன்றைக்கு டிவி தொடர்கள் பேசுகி உணர்ச்சி மிகு வசனங்கள் அதிகம் இடம்பெற்றன.

52*எல்.வி. பிரசாத், கே.ராம்நாத், .எஸஸ்.. சாமி, எம்.வி.ராமன், .நீலகண்டன், பி.ஆர்.பந்துலு, .பீம்சிங், டி.ஆர்.ராமண்ணா, .பி.நாகராஜன், கர்ணன், கே,எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன், .சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர், கிருஷ்ணன் பஞ்சு,கே.சங்கர், சி.வி.ஸ்ரீதர், சிவிராஜேந்திரன், மல்லியம் ராஜகோபால், தாதாமிராஸி, எம், திருமுகம், சங்கீதம் சீனிவாசராவ், கே.எஸ். சேது மாதவன், ஜி.ராமகிருஷ்ணன், பி.மாதவன் கூர்த்தீட்டப்பட்ட அடுக்கு மொழிவசனங்கள் மற்றும் இன்றைக்கு டிவி தொடர்கள் பேசுகி உணர்ச்சி மிகு வசனங்கள் அதிகம் இடம்பெற்றன.

53*மூன்றாவது காலகட்டம் 1976 1985 வரையான காலங்கள் தமிழ்திரைப்படம் ஒரு புதிய பரிணாமத்தை எடுத்தது.யதார்த்தமான மரபு மீறிய காலம்.

54*அன்னக்கிளி, 16 வயதினிலே படங்களின் காலம் எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி.சக்தி, பாலுமகேந்திரா, பாரதிராஜா,மகேந்திரன், பாக்யராஜ், ருத்ரைய்யா, மௌலி, விசு,ராஜசேகர், ஜெயபாரதி, துரை, பாரதிவாசு, .ஜெகந்நாதன், டி.ராஜேந்திரன் மணிவண்ணன், பிரதாப்போத்தன், மணிரத்னம்

55*தமிழ்திரைப்படத்தில் முதல் தொப்புள் நடனம் நிறை குடம் படத்தில் இடம்பெற்றது. அதன் பிறகே பம்பரம், ஆம்லெட், ஆப்ஆயில் , கூல்டிரிங்க்ஸ் ஸ்ட்ரா இப்படி ...

56*எம்.ஜி.ஆர் மக்கள் திலகம்,சிவாஜி நடிகர் திலகம், ஜெமினி காதல் மன்னன்,ஜெய்றசங்கர் தமிழ்நாட்டு சிஐடி ஜேம்ஸ்பாண்டு.

57*அதிகமான படங்களை இயக்கியவர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், இராம நாராயணன்....

58*நான்காவது காலகட்டம் 1986 இந்த காலகட்டத்தில் ஆபாசம், வன்முறையும் அதிகமாக இருந்தன

59* முதல் கலர் லேபரேட்டரியை சென்னையில் தோற்றுவித்தது எஸ்.எஸ்.வாசன் அவர்கள் காதலிக்க நேரமில்லை தான் டெவலப்செய்யப்பட்ட முதல் படம்.

60* சினிடெக்னீசியன் கில்டு ஆப் சவுத்இந்தியா சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கான முதல் சங்கம் இதன் தலைவராக நிமாய்கோஷ் இருந்தார். இவர் ஒரு வங்காள ஒளிப்பதிவாளர்.

61*1939 ல் சென்னை திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளனம் அதாவது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டது.இதன் முதல் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீரர் சத்திய மூர்த்தி இருந்தார். இதை தொடங்கியவர்கள் கே.சுப்ரமணியம், தமிழ்நாடு டாக்கீஸ் சௌந்தரராஜன், பி.எஸ்.வி. அய்யர், எம்.டி.ராஜன், பிரதாப் சரஸ்வதி டாக்கீஸ் முதலாளி சி.பி.சாரதி, ராமராவ், வெங்கட்ரமண நாயுடு.

62*சினிமா பத்திரிகைகளின் தந்தை பி.எஸ்.செட்டியார் 1935 ல் "சினிமா உலகம் ' தான் சினிமாவுக்கான முதல் பத்திரிகை.இதற்கு முன்பு எஸ்.வி. சர்மா என்பவரால் "நாடகாபிமானி', "சினிமா டாக்கீஸ்', "ஆடல்பாடல்' என சில சினிமா பத்திரிகைகள் தொடங்கப்பட்டாலும் அவை எல்லாம் மிகக்குறுகிய காலத்தில் நின்று விட்டன.

63* சினிமாத்துõது என்கிற பத்திரிகையை நடத்தியவர் லட்சுமி காந்தன் அவர் அந்தகால த்தில் பாகவதரையும் , என்.எஸ். கிருஷ்ணனையும் இன்னும் பல சினிமா நடிகர் களையும் பற்றிய அந்தரங்க செய்திகளை எழுதியதற்காக கொலை செய்யப்பட்டார். அதன் காரணமாக தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் சிறை சென்றனர்.

64*தேசிய விருது பெற்ற படப்பட்டியல் 1954ல்தொடங்குகிறது சான்றிதழ் , முதல்,இரண்டாவது, மூன்றாவது பெற்ற படங்களாக 78படங்கள் .(2002)

65*நடிகைகள் லட்சுமி(1976) சிலநேரங்களில் சில மனிதர்கள், 1979ஷோபா(பசி), 1985 சுகாசினி(சிந்து பைரவி), 1987 அர்ச்சனா(வீடு), 2008பிரியாமணி(பருத்திவீரன்).

66*நடிகர்கள் 1971 எம்.ஜி.ஆர்(ரிக்ஷாகாரன்), 1982கமலஹாசன்(மூன்றாம் பிறை,1987நாயகன், 1996இந்தியன்),விக்ரம்( பிதாமகன்)

67*துருவன் குழந்தை நட்சத்திரமாக சி.எஸ்.ஜெயராமன், பக்த துருவன்மாஸ்டர் ராஜம், மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி,பாலயோகினி குழந்தைகளுக்கான படம் நடிப்பு பேபி சரோஜா,, பாலசரஸ்வதி.தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் 1968பேபிராணி(குழந்தைக்காக), 1990பேபி சுருதி,ஷாமிலி, மாஸ்டர் தருண்(அஞ்சலி), 1998சுவேதா(மல்லி,2001குட்டி),2000உதயராஜ்நிலாக்காலம், 2002 கீர்த்தனாகன்னத்தில் முத்தமிட்டால்.

68*முழுமையான தமிழ்பேசும் முதல் 1932ல் காலவா இயக்கம் பி.பி.ரங்காச்சாரி.

69* தியாக பூமி படம் தான் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம்.இதை கே.சுப்பிரமணி படத்தை இலவசமாக மக்களுக்கு காட்டினார்.

70* முதல் இரட்டை வேடப்படம் 1940 ல் பியூசின்னப்பா நடித்த உத்தமபுத்திரன்.

71*தமிழர் தயாரித்த முதல் இந்திப்படம் மீரா எம்.எஸ் ,சுப்புலட்சுமி நடித்தது.

72*ரியலிச படங்களைத்தந்தவர்களாக ஜெயகாந்தன்சிலநேரங்களில் சில மனிதர்கள், ஜான் ஆப்பிரகாம்அக்கிரகாரத்தில் கழுதை, நிமாய்கோஷ்பாதை தெரியுது பார், பீ.லெனின் ஊருக்கு நுõறு பேர்(கதை ஜெயகாந்தன்).அம்சன்குமார் ஓருத்தி(கதை கி.ராஜநாராயணன் கிடைநாவல்), ஜெயபாரதி(நண்பாநண்பாகதை ரவீந்திரன்)

73*சிரிக்காதே நான்கு கதைகளை கொண்ட முதல் குறும்படம்,சௌசௌ.இரண்டும் என்.எஸ். கிருஷ்ணனின் படங்கள்.

74*1931ல் முதல் இலக்கிய நாவலை படமாக்கியவர் ராஜா சாண்டோ அனாதைப்பெண் வை.மு.கோதை நாயகி அம்மாள்.

75*.கருப்பன் செட்டியார் என்கிற .கே.செட்டியார் கோட்டையூரை சேர்ந்த இவர் புகைப்பட கலையை ஜப்பானில் கற்று, சினிமாவை அமெரிக்காவில் கற்றவர் 1911.“ உண்மையான காந்திதிரைப்படத்தை எடுத்தார்.1947.“ தில்லி ரீகல் தியேட்டரில் காந்தி திரைப்படத்தை திரையிட்டார். பிரதமர் இந்திரா காந்தி, குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத் வந்திருந்தனர். .கே.செட்டியாரிடம் அமெரிக்க நிறுவனம் காந்தி திரைப்படத்தை 20 லட்சத்திற்கு கேட்டனர். தர மறுத்த அவர்இந்தியஅரசாங்கத்திற்கு தந்தார்.

76*1907ல் டி.எச்.ஹட்டன்சில ஆவணப்படம் செய்து எலக்ட்டரிக் தியேட்டரில் போட்டுக்காட்டினார்.

77*தஞ்சை மருதப்பமூப்பனார் ஒரு புகைப்பட கலைஞர் சென்னையில் விமானம் இறங்குவதை படம் பிடித்தார்.1911ல் லண்டனில் ஓளிப்பதிவு கற்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவை படமாக்கினார்.

78* வேப்பேரி ஜோசப்டேவிட் மகாபலிபுரம் சிற்பங்கள், நெற்பயிர், புல், பறவைகள் இப்படி சி வற்றை குறும்படங்களாக இயக்கினார்.

79* 19312008 வரை தயாரித்த படங்கள் 4911.தயாரித்து வெளியாகாத படங்கள் 185.

80*எம்.எஸ்.விஸ்வநாதன் பாவமன்னிப்பு,இளையராஜாஅன்னக்கிளி,.ஆர்.ரஹ்மான்ரோஜா(2002 வரை மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார்)(* இதில் உள்ளமுக்கிய தகவல்கள் தவிர, இதில் இடம்பெறாத தகவல்கள் நிறைய உண்டு. இவை தமிழ் சினிமா வரலாற்றின் முக்கிய தகவல்கள்