Thursday, June 10, 2021

வீரையா வாண்டையார். 1899 - 1970

 வீரையா வாண்டையார். 1899 - 1970

புகழ்மிக்க பூண்டி புஷ்பம் கல்லூரியை நிறுவியவர்!

கல்வி காவலர் என்று அழைக்கப்பட்ட மாமனிதர்

கல்வி வியாபாரம் ஆகிய காலகட்டம் வரை கல்வி சேவையாக ஒரு நிறுவனம் இன்று வரை தொடர்ந்து தனது சேவையை நமக்கு தெரிந்தவரை இந்தியாவிளேயே இந்த ஒரு நிறுவனம் மட்டமே. தஞ்சை பகுதியில் கல்வி சேவையால் பல நூறு ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கிய நம் சமுதாய இளங்ஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி சாதனை படைத்து வரும் வாண்டையார் குடும்பத்தை பற்றி அறிவோம்

1928 ல் திருக்காட்டுப்பள்ளியில் கள்ளர் மாநாட்டை நடத்தியவர்.

தஞ்சை மாவட்ட பூண்டியில் 1899 இல் பாரம்பரிய மிக்கச் சான்றோர்கள் தோன்றிய மிகவும் பிரபலமான கள்ளர் குடியில் பிறந்தவர் திரு வீரையாவாண்டையார். வேளான்மையில் மேம்பாடு எய்தியமைக்காக பேராசி விக்டோரியா மகாராணியடம் விருது பெற்ற பேராளர்.

சமுதாய,நாட்டு நலப்பணிகளில் பங்கேற்று நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு உழைத்துப் புகழ் பெற்றவர். ஆங்கில அரசின் நட்பையும் பாராட்டுகளையும் பெற்று இராவ்பகதூர் பட்டமும் பெற்று சிறப்பிக்கப்பட்டவர். குடந்தையும், பாபநாசமும் ஒரே தாலுகாவாக இருந்தபோது தலைவராக 10 ஆண்டுகள் கடமையாற்றி தனது பயணப்படி ஊதியமான ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று 10 ஆண்டுகளும் வாங்காதவர் இவர் ஒருவரே.

6000 ஏக்கருக்கதிபதியாய் ஆளுவோரின் ஆரவணைப்பில் ஆட்சி மன்ற தலைவராய் இருந்தது தான் பிறந்த சமுதாயத்தை மறக்காது அதன் எழுச்சிக்காக பாடுபட்ட சமுதாய காவலர் இவரே. 1928ல் திருக்காட்டுபள்ளியிலும், 1933ல் தஞ்சையிலும் கள்ளர் இன இளைஞர் மாநாடு நடத்தியும், 1933 வரை கள்ளர் மகா சங்கச்செயலாளாரகப் பணியாற்றிய பெருமையயும் மிக்கவர்.

1945ல் கள்ளர் இனமாணவர்களின் வசதிக்காக விடுதிகள் அமைக்க திட்டமிட்டு இரகுநாத இராசாளியார், .மு.வேங்ககட சாமிநாட்டாரின் தம்பி கோவிந்தராயநாட்டார், தஞ்சை வழக்குறைஞர் சுயம்பிரகாசம் ஆகிய பெருமக்களையும் இணைத்து நன்கொடைகள் வசூலித்து துறையூர் ஜமீந்தாருக்கு சொந்தமான தஞ்சை வடக்கு வீதி கட்டிடத்தையும், மேலவீதியில் அமைந்த கட்டிடங்களையும் கள்ளர் சங்கத்துக்காக வாங்கி முறையே பெண்கள் விடுதியும், ஆண்கள் விடுதியும் நடத்த ஏற்பாடுகள் செய்தார்.

இவரது மணைவியார் திருமதி சேதுக்கண்ணம்மாள் 1950 மறைந்தார். துணைவியர் பிரிந்த துயரத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள விரும்பியும் அறிவுலகம் கான விரும்பியும் 1954ல் தனது ஐரேப்பிய பயனத்தை கப்பல் மூலம் மேற்கொண்டார். 6 மாத கடல்பயணத்தில் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ஒல்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து முதலிய நாடுகளின் வளர்ச்சிகளையும், கலைச்செல்வங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

இக்கால கட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தையும் பார்வையிடும் வாய்ப்பினையும் பெற்றார். இதன் பிரதிபலிப்பாக தான் பிறந்த மண்ணில் தன் உறவும் சமுதாயமும் வளர்ச்சியுற்று வளம் பெற விரும்பி 1956ல் பூண்டி புஸ்பம் கல்லூரியை ஒரு முன் மாதிரி கல்விக் கழகமாகநிறுவி தஞ்சை வாழ் ஏழை எளிய மற்றும் பிற்பட்ட வகுபினரை சார்ந்த ஆயிரகனக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க உதவியவர் வாண்டைய்யர் அவர்கள். தங்கள் குலதெய்வமான புஸ்ப வாணேஸ்வரனை நினைவில் கொண்டு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி எனவும் பெயருமிட்டார்.

இக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் கள்ளர் குல மாணவர்கள் பல் ஆயிரம் பேர் இலவச உயர்கல்வி பெரும் வாய்ப்பினைப் பெற்று இன்று பொருளாதர நிலையில் மேன்மை அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களிலும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி போன்ற பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய இளைஞர்கள் இன்று பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், உயர்நிலை அலுவலர்களாகவும் விளங்க காரணம் இக்கல்வித் திருக்கோயில் தான். கள்ளர் மகாசங்கத்தில் தன்னை இனைத்துக்கொண்டு கள்ளர் குல மக்கள் உயர்வடைய வேண்டும் என்ற பெரு நோக்கில் அயராது உழைத்தவர் திரு வீரையா வாண்டையார் அவர்கள்.

தான் வெகுநாட்களாக தலைமை ஏற்று நடத்திவந்த கள்ளர் மகாசங்கத்தை முக்குலத்தோர் நலத்தை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சங்கத்துடன் இனைத்து திரு மாணிக்கம் ஏற்றாண்டார் தலமையில் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தனது சமூகம் சார்ந்த மற்றும் வறுமையில் வாடிய மாணவ மக்களுக்கு தனது கல்லூரியில் இலவச படிப்பும் உணவும் அளித்து அவர்களின் வாழ்கையில் மறுமளர்ச்சி ஏற்படுத்தியது என்றும் மறக்கமுடியாத ஒரு வரமாகும்.

தங்கள் குடும்ப சொத்தான நெற்களஞ்சிய நிலங்களை நாட்டின் அறிவுக் களஞ்சியமாக்கிய வீரையா வாண்டையார் 1970ம் ஆண்டில் மறைந்தும் மாணவர்கள் மத்தியில் வாழும் ஒரு அற்புதமான வரலாற்றுச்சிற்பி. இன்றும் தமிழக ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைத்திட வழிவகுத்த இப்பெருமானாரின் முயற்சியினால் கல்விப்பணியில் உயர்ந்து ஓங்கி நிற்கிறது இக் கல்லூரி..

மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார்கள்

'உச்சி வெயிலுல செல்லாத்தா... நம்ம உச்சந்தல கருகல.

கொட்டுற மழையில செல்லாத்தா... நம்ம குடுசைங்க ஒழுகல.

ஆண்டவனை வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல.

வாண்டையாரு வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!'

நாற்று நடவு செய்யும் பெண்கள், அலுப்புத் தெரியாமல் இருக்க பெருங் குரலெடுத்துப் பாடுகிறார்கள் இன்றும் பூண்டியிலே.

சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. “அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வளநாடு - கேரளாந்தகன் வளநாடுஎன்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடுஎன்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம்.

இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னியின் செல்வன் கட்டிய ஆலயம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற, இந்தத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில், 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இன்றைக்கும் இருக்கிறது. அந்தக் கோவில் கல்வெட்டில், ‘நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்என்று கல்வெட்டு இருக்கிறது.

ஆயிரக்கணக்கான கழனிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூமி, மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் குடும்பம், இன்றைக்கு அந்தப் பெயரிலேயே கல்லூரி அமைத்து, வசதியற்ற ஏழைப்பிள்ளைகளுக்கும் கல்வியைத் தருகிறார்கள். அந்தப் பூண்டி மண்டலத்தைத்தான்நித்தவிநோத வளநாட்டு வெண்ணி கூற்றத்துக் கீழ்ப்பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேரித மங்கலம்என்று ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுக் கூறுகிறது.

பூக்கள் மண்டி கிடந்ததாலே பூ மண்டி - ‘பூண்டிஆயிற்று. எத்தனைப் பூக்கள் குறிஞ்சிப் பாட்டிலே கபிலன் தருகின்ற பூக்கள்! அப்படிப் பூக்கள் மண்டிய பூமியாம் பூண்டியின் மன்னர்கள் பூண்டி வாண்டையார்கள்

வாண்டையார் பிரபந்தத் திரட்டு (1889 )

திரு. கி.வீரையா வாண்டையார் என்பவர் இராவ்பகதூர் திரு. A. வீரையா வாண்டையாரின் (1899 - 1970 ) தாத்தா ஆவார். திரு. கி.வீரையா வாண்டையார் பலநூல்கள் எழுதியுள்ளார். இதனை "தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்" என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர், முனைவர் சுந்தர சண்முகனார் (தமிழ்-அகராதித் துறைப் பேராசிரியர்) பதிவு செய்துள்ளார்.

கி.வீரைய வாண்டையார் இயற்றிய நூல்களின் தொகுப்பு. இவர் தஞ்சையைச் சார்ந்த பூண்டி மாநகரம் இந்திர குல திலகர் என வழங்கப்பெறுகிறார். இவரது இந்நூலின் முதல் பதிப்பு - 1889. பார்வை: சுப்பிரமணிய ஐயர், தஞ்சை எஸ்.வி. இராம சுவாமி ஐயங்கர்ர் அச்சிட்டது. அச்சகம்: Tanjore “The Patriot Press”. மற்றும் ஒரு பதிப்பு 1926.

நூல்கள்:

புஷ்ப வன நாதர் சதகம்,

புஷ்ப வன நாதர் போற்றிப் பதிகம்,

புஷ்பவன நாதர் இரட்டை மணிமாலை

புஷ்ப வன நாதர் பதிற்றுப்பத் தந்தாதி,

புஷ்ப வன நாதர் நவ மணி மாலை,

புஷ்ப வன நாயகி மாலை,

புஷ்ப வன அகவல். ஆகியவை.

ஆண்டவனை வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல.

வாண்டையாரு வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!'

கடலைச் செடிக்கு களை கொத்தும் பெண்கள் பாடுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக தன்னுடைய விவசாய நிலங்களில் பாடுபடும் பெண்களின் விசுவாசம் சங்கீதமாக ஒலிக்க... அதை ஆழக் கேட்டபடி வரப்பில் நடக்கும் துளசி அய்யா வாண்டையார், ''ஆண்டவன்தான் அத்தனைக்கும் காரணம்.. மண்ணைக் கடவுளா நெனச்சுப் பாடுங்க புள்ளைங்களா.. என்னயப் பத்திப் பாடாதீங்க...'' என்று உத்தரவாகவே சொல்கிறார்.

அப்படியே நம் பக்கம் திரும்பி, ''மண்ணை நேசிக்காட்டி அது நம்மளை நேசிக்காது. நம்ம மனைவி மாதிரிதான் மண்ணும். நல்லா கவனிச்சு ஆசாபாசமா நடந்தோம்னா நாமளே தெய்வம்னு நெனச்சு நமக்கு நல்லது செய்யும். நாம கண்டுக் காம விட்டுட்டோம்னு வையுங்க.. பாசத்துக்கு ஏங்குற பொண்டாட்டி பாதை மாறிப் போயிடுற மாதிரி மண்ணும் மாறிப் போயிடும்'' என்று வாழ்வியல் தத்துவத்தை மண்ணோடு சேர்த்து பிசைந்து, கொடுக்கிறார் எழுபத்தி எட்டு வயது பெரியவரான வாண்டையார்!

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக் கப்படும் தஞ்சை பகுதியில் விவசாயம் என்று சொன்னாலே... முக்கியமான ஒரு சில குடும்பங்ளை வரிசைப்படுத்துவார்கள்.... அதில் துளசி அய்யா வாண்டையார் குடும்பம் மிகவும் முக்கியமானது. தஞ்சாவூர் அருகே இருக்கும் பூண்டி கிராமம் கிட்டத்தட்ட இவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கிறது. மொத்தமாக நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கட்டி ஆண்ட பாரம்பரியம்.. இன்றைக்கும் பதினோரு கிராமங்களில் கிடக்கும் அறுநூறுக்கும் அதிகமான ஏக்கர் நிலத்தில் இவர் சொன்னால்தான் நடவு, அறுப்பு என நடக்கிறது விவசாயம். சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம்.... தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் என்று டெல்டா பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானோரை பட்டதாரிகளாக உருவெடுக்கச் செய்த பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியை நிர்வகிக்கும் குடும்பம்... என அத்தனை புகழாரங்கள் இருந்தாலும், ''நான் ஒரு விவசாயிப்பா..'' என்பதில்தான் பெருமை அடைகிறார் வாண்டையார்.

தஞ்சை மாவட்ட பூண்டியில் 1899 இல் பாரம்பரிய மிக்கச் சான்றோர்கள் தோன்றிய மிகவும் பிரபலமான கள்ளர் குடியில் பூண்டி மகா---ஸ்ரீ அப்பாசாமி வாண்டையார் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் திரு. வீரையா வாண்டையார்.

திரு. வீரையா வாண்டையாரின் சகோதரர் கிருட்டிணசாமி வாண்டையார் ஆவார் ( K. துளசி வாண்டையாரின் தந்தை).

வேளான்மையில் மேம்பாடு எய்தியமைக்காக பேராசி விக்டோரியா மகாராணியடம் விருது பெற்ற பேராளர். சமுதாய, நாட்டு நலப்பணிகளில் பங்கேற்று நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு உழைத்துப் புகழ் பெற்றவர். ஆங்கில அரசின் நட்பையும் பாராட்டுகளையும் பெற்று இராவ்பகதூர் பட்டமும் பெற்று சிறப்பிக்கப்பட்டவர். குடந்தையும், பாபநாசமும் ஒரே தாலுகாவாக இருந்தபோது தலைவராக 10 ஆண்டுகள் கடமையாற்றி தனது பயணப்படி ஊதியமான ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று 10 ஆண்டுகளும் வாங்காதவர் இவர் ஒருவரே.

6000 ஏக்கருக்கதிபதியாய் ஆளுவோரின் ஆரவணைப்பில் ஆட்சி மன்ற தலைவராய் இருந்தது தான் பிறந்த சமுதாயத்தை மறக்காது அதன் எழுச்சிக்காக பாடுபட்ட சமுதாய காவலர் இவரே. 1928ல் திருக்காட்டுபள்ளியிலும், 1933ல் தஞ்சையிலும் கள்ளர் இன இளைஞர் மாநாடு நடத்தியும், 1933 வரை கள்ளர் மகா சங்கச்செயலாளாரகப் பணியாற்றிய பெருமையயும் மிக்கவர். 1945ல் கள்ளர் இனமாணவர்களின் வசதிக்காக விடுதிகள் அமைக்க திட்டமிட்டு இரகுநாத இராசாளியார், .மு.வேங்ககட சாமிநாட்டாரின் தம்பி கோவிந்தராயநாட்டார், தஞ்சை வழக்குறைஞர் சுயம்பிரகாசம் ஆகிய பெருமக்களையும் இணைத்து நன்கொடைகள் வசூலித்து துறையூர் ஜமீந்தாருக்கு சொந்தமான தஞ்சை வடக்கு வீதி கட்டிடத்தையும், மேலவீதியில் அமைந்த கட்டிடங்களையும் கள்ளர் சங்கத்துக்காக வாங்கி முறையே பெண்கள் விடுதியும், ஆண்கள் விடுதியும் நடத்த ஏற்பாடுகள் செய்தார்.

இவரது மணைவியார் திருமதி சேதுக்கண்ணம்மாள் 1950 மறைந்தார். துணைவியர் பிரிந்த துயரத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள விரும்பியும் அறிவுலகம் கான விரும்பியும் 1954ல் தனது ஐரேப்பிய பயனத்தை கப்பல் மூலம் மேற்கொண்டார். 6 மாத கடல்பயணத்தில் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ஒல்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து முதலிய நாடுகளின் வளர்ச்சிகளையும், கலைச்செல்வங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். இக்கால கட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தையும் பார்வையிடும் வாய்ப்பினையும் பெற்றார். இதன் பிரதிபலிப்பாக தான் பிறந்த மண்ணில் தன் உறவும் சமுதாயமும் வளர்ச்சியுற்று வளம் பெற விரும்பி 1956ல் பூண்டி புஸ்பம் கல்லூரியை ஒரு முன் மாதிரி கல்விக் கழகமாகநிறுவி தஞ்சை வாழ் ஏழை எளிய மற்றும் பிற்பட்ட வகுபினரை சார்ந்த ஆயிரகனக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க உதவியவர் வாண்டைய்யர் அவர்கள். தங்கள் குலதெய்வமான புஸ்ப வாணேஸ்வரனை நினைவில் கொண்டு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி எனவும் பெயருமிட்டார்.

இக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் மாணவர்கள் பல ஆயிரம் பேர் இலவச உயர்கல்வி பெரும் வாய்ப்பினைப் பெற்று இன்று பொருளாதர நிலையில் மேன்மை அடைந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களிலும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி போன்ற பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய இளைஞர்கள் இன்று பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், உயர்நிலை அலுவலர்களாகவும் விளங்க காரணம் இக்கல்வித் திருக்கோயில் தான். கள்ளர் மகாசங்கத்தில் தன்னை இனைத்துக்கொண்டு மக்கள் உயர்வடைய வேண்டும் என்ற பெரு நோக்கில் அயராது உழைத்தவர் திரு. வீரையா வாண்டையார் அவர்கள்.

தான் வெகுநாட்களாக தலைமை ஏற்று நடத்திவந்த கள்ளர் மகாசங்கத்தை முக்குலத்தோர் நலத்தை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சங்கத்துடன் இனைத்து திரு மாணிக்கம் ஏற்றாண்டார் தலமையில் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தனது சமூகம் சார்ந்த மற்றும் வறுமையில் வாடிய மாணவ மக்களுக்கு தனது கல்லூரியில் இலவச படிப்பும் உணவும் அளித்து அவர்களின் வாழ்கையில் மறுமளர்ச்சி ஏற்படுத்தியது என்றும் மறக்கமுடியாத ஒரு வரமாகும்.

தங்கள் குடும்ப சொத்தான நெற்களஞ்சிய நிலங்களை நாட்டின் அறிவுக் களஞ்சியமாக்கிய வீரையா வாண்டையார் 1970ம் ஆண்டில் மறைந்தும் மாணவர்கள் மத்தியில் வாழும் ஒரு அற்புதமான வரலாற்றுச்சிற்பி. இன்றும் தமிழக ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைத்திட வழிவகுத்த இப்பெருமானாரின் முயற்சியினால் கல்விப்பணியில் உயர்ந்து ஓங்கி நிற்கிறது இக் கல்லூரி