Monday, June 28, 2021

தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சிடர் வினிகரை எப்போது குடிக்க வேண்டும்..?

 தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சிடர் வினிகரை எப்போது குடிக்க வேண்டும்..?


குறைந்து வரும் உடல் உழைப்பின் பிரதிபளிப்புதான் தொப்பை. ஆண் , பெண் பாரபட்சமின்றி பலரும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த தொப்பை பிரச்னையை பலரும் குறைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக எதையெல்லாம் சாப்பிட்டால் குறைக்கலாம் , எதை குடித்தால் குறைக்கலாம் என தேடி தேடி சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீப நாட்களாக டிரெண்டில் இருப்பதுதான் ஆப்பிள் சிடர் வினிகர். ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பது தொப்பையைக் குறைக்க உதவும் என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி குடிக்க வேண்டும்.? எப்போது குடிக்க வேண்டும் என்பது தெரியுமா..?

 

ஆப்பிள் சிடர் வினிகரானது உடலின் நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இதை தண்ணீரில் கலந்து காலை அல்லது இரவு எந்த வேலையிலும் குடிக்கலாம். இருப்பினும் காலை வெதுவெதுப்பான மூன்று பங்கு நீரில் ஒரு பங்கு ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்தால் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். அவ்வாறு குடிப்பதால் இரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து தேவையில்லாத கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

அதோடு இது பசி உணர்வையும் கட்டுப்படுத்துவதால் அதிக உணவு உட்கொள்வதை தவிர்க்கலாம். இதனால் உடல் எடைக்கு காரணமாக இருக்கும் விஷயங்களை தவிர்க்க முடியும்.நீங்கள் டயட்டில் இருக்கும்போதும் உடலின் ஸ்டாமினாவை நிர்வகிக்க ஆப்பிள் சிடர் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்பிள் சிடர் வினிகரை நேரடியாக உட்கொள்ளக் கூடாது. அதேபோல் நேரடியாக நுகரவும் கூடாது. இது பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் நொதிக்கப்பட்டது என்பதால் இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதேபோல் இது பற்களில் பட்டால் அதன் எனாமல் வீக்கமடையும். பற்கள் விரைவில் உடையும் அல்லது அரித்துவிடும். எனவே தண்ணீரில் கலந்துதான் குடிக்க வேண்டும். அப்படி தண்ணீரில் கலந்து குடித்தாலும் ஸ்ட்ரா பயன்படுத்தி குடிப்பது நல்லது. சருமத்திற்கும் சிலர் பயன்படுத்துவார்கள். அப்படி சருமத்தில் அப்ளை செய்யும் போதும் நேரடியாக பயன்படுத்தக் கூடாது.

ஆப்பிள் சிடர் நன்மைகள் : ஆப்பிள் சிடர் வினிகர் உயர் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமம் மற்றும் முடி பிரச்னைகளுக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் உதவுகிறது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை நினைவில் கொண்டு அடுத்த முறை ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்.