இருமல் என்பது என்ன? ஏன் ஏற்படுகிறது?...
நுரையீரலின் இயக்கக் குறைவு காரணமாக அவற்றில் தேங்கியிருக்கும் சளிக் கழிவை வெளியேற்றும் முயற்சிதான் இருமல்!
சளி எப்படி நுரையீரலில் தேங்கியது?
• நுரையீரலுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் புகைப் பழக்கம் அதன் இயக்கக் குறைவிற்கு காரணமாகலாம்.
• உடல் ஏற்றுக் கொள்ள முடியாத குளிர் தன்மையில் சாப்பிட்ட உணவால் நுரையீரல் பலவீனமடையலாம்.
• நம்மால் செரிக்கவே முடியாத கடினப் பொருளான பாலை அதிக அளவில் பயன் படுத்துவதால் நுரையீரலின்
சக்தி குறையலாம்.
• அன்றாடம் வெளியேற்றப்
படாத மலக்குடல் கழிவுகள் நுரையீரலின் பணியை பாதிக்கலாம்.
• பசியற்றிருக்கும் போது உண்ணும் உணவு காற்றுக் கழிவாக மாற்றப்பட்டு, நுரையீரலை வந்தடையலாம்.
…இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அடிப்படை ஒன்று தான்.
நம் இயற்கை விதி மீறிய செயல்களால் நுரையீரல் பாதிப்படைந்து தன் தலையாய கடமையான கழிவுகளை வெளியேற்ற முடியாமல் திணறுகிறது.
இந்நிலையில் போதிய எதிர்ப்பு சக்தி உடலிற்கு கிடைக்கும்போது அது தன் வேலைக்குத் திரும்புகிறது. காய்ச்சப் படாத தூய தண்ணிரை அருந்தும் போது, நல்ல பழங்களை உண்ணும் போது, துய்மையான நீரான மழையில் முழுவதுமாக நனையும் போது உடல் பூரண எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறது.
எங்கெல்லாம் கழிவுத் தேக்கம் உள்ளதோ அதை நீக்க முயல்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி வலுவடையும் போது, நுரையீரல் தன் சளிக் கழிவை வெளியேற்ற முயலும்.
எப்படி வெளியேற்றும்?
சிறு குழந்தைகளாக
இருந்தால் நுரையீரலின்
சளி வாந்தி மூலமாகவும், மலம் மூலமாகவும் சிறிது சிறிதாக வெளியேறும். சளியின் அளவு அதிகமென்றால்,
இருமலைத் தோற்றுவித்து
அதன் மூலம் வெளியேறும்.
பெரியவர்களுக்கு வாந்தி மூலமும், மலம் மூலமும் சளி வெளியேறுவது குறைவு. எனவே தான் இருமல் மூலம் வெளியேற்றுகிறது உடல்.
நுரையீரலில் தேங்கிய சளி உள்ளேயே இருப்பது நல்லதா? அல்லது வெளியேற்றப்படுவது நல்லதா?
கழிவுகள் வெளியேற்றப்பட
வேண்டியவை. அவை உடலிலேயே தங்க நேரிட்டால் ஒவ்வொரு உறுப்பையும், அதன் இயக்கத்தையும் பாதிக்கும்.
நாம் இருமலைத் தான் நோயாக கற்பனை செய்கிறோம். இன்னும், வெளியேற வேண்டிய சளியை, இருமலை அடக்குவதன் மூலம் பாதுகாக்க முயற்சிக்கிறோம்.
நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால், சளி தானாகவே இருமல் மூலம் வெளியேறி விடும். பின்பு இருமல் குறைந்து நுரையீரல் தன்னிலைக்குத் திரும்பும்.
ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை!
ரசாயன மருந்துகளைக்
கொண்டு இருமலை அடக்குகிறோம்.
என்ன செய்கின்றன இந்த மருந்துகள்?
நுரையீரலில் திரவ வடிவில் வெளியேறத் தயாராக இருக்கும் சளியை இந்த ரசாயன மருந்துகள் வெப்பத்தை ஏற்படுத்தி உலரச் செய்கிறது. திரவ வடிவச் சளி இப்போது காய்ந்து விடுவதால் இருமல் வறட்டு இருமலாக மாறுகிறது.
"சளி நின்றுவிட்டது"
என்று நாம் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து வெப்பத்தை ஏற்படுத்தும் மருந்துகளால்
காய்ந்த சளி துகள்களாக (Powder) பொடியாக்கப்பட்டு நுரையீரலின்
நுண் துளைகளில் படிய வைக்கப்படுகிறது.
சளி தற்காலிகமாக
உருவ மாற்றம் அடைந்து விடுவதால் ஒன்றிரண்டு நாட்களில் இருமல் முற்றிலும் நின்று போய் விடுகிறது.
இது தான் நாம் மேற்கொள்ளும் சிகிச்சையின்
விளைவு.
அப்படியானால், காய்ந்து, உறைந்து போன சளி என்னவாகும்?.
பத்திரமாக உடலிலியே தங்கியிருக்கும். எப்போது வரை?
எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வரை.
நாம் சளிக்காகச் சாப்பிட்ட ரசாயன மருந்துகளை உடல் முதலில் வெளியேற்றி எஞ்சிய நச்சுக்களை கல்லீரலின் துணை கொண்டு சேமிக்கிறது.
படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் உடல், நல்ல உணவு, நல்ல நீர், சக்தியுள்ள பழங்கள் போன்றவற்றிலிருந்து ஆற்றலை உள்வாங்கி மீண்டும் எதிர்ப்பு சக்தியைத் தயார் செய்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி தயாராவதற்கு ஒரு வாரம் முதல் பல ஆண்டுகள் வரை கூட ஆகலாம். மீண்டும் கழிவு வெளியேற்றப் பணி துவங்குகிறது.
முன்பாவது, சளியை வெளியேற்றும் வேலை மட்டும் தான் இருந்தது. இப்போதோ நுரையீரலின் நுண்துளைகளில்
அடைத்துக் கொண்டுள்ள உலர்ந்த துகள்களை ஈரப்படுத்தி
பின்பு சளியாக மாற்றி வெளியேற்ற வேண்டியிருக்கிறது.
இப்போதுதான் இருமலோடு நெஞ்சு எரிச்சல், சளியோடு ரத்தத்துகள் வருதல் போன்றவை ஏற்படும். ரசாயனத்திற்கு
பின்பான இந்தக் கழிவு வெளியேற்றம் முன்பை விட கடுமையானதாகவும் பலமானதாகவும்
இருக்கும்.
இப்போது நாம் புதிதாக சளிப் பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறோம். மழையில் நனைவதாலோ பழங்கள் சாப்பிடுவதாலோ
அல்லது காய்ச்சாத நல்ல நீர் குடிப்பதாலோ
சளி பிடிப்பதில்லை.
ஏற்கனவே நம் முயற்சியால் உடலில் அடைத்து வைக்கப்பட்ட அதே சளி மீண்டும் வெளியேறுகிறது என்பதை நாம் உணர்வதே இல்லை.
இப்போதும் இருமலை நிறுத்த எல்லா வழி முறைகளையும் பின்பற்றுகிறோம். மருந்துகளால்
சளியை காய்ந்த துகள்களாக்கி நுரையீரலில் மீண்டும் சேமித்து வைக்கிறோம்.
இதே நிலை தொடரும் போது குழந்தைகளுக்கு
பிரைமரி காம்ப்ளக்ஸ்
(முதல்நிலை சளி?) ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு காச நோய் (Tuberculosis), ஆஸ்துமா (Asthma), ஈசினோபிலியா (Eosinophilia), போன்ற இரண்டாம் கட்ட முற்றிய நோய்களாக மாறிவிடுகிறது.
தும்மலை அடக்குவோமானால்
சைனஸ் உருவாகிறது. நிரந்தரத் தலைவலி, காரணமற்ற மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலி
... என அனைத்தும் ஒவ்வொன்றாய் ஏற்படுகிறது.
இன்னும் அடுத்தடுத்த
நிலைகளில் தோல் வழியாக செதில்படை நோய் (Eczema), செதில் உதிர்தல் (Psoriasis), படர்தாமரை (Ringworm) போன்ற வெளிப்பாடுகளும் நிகழ ஆரம்பிக்கும்.
இவை அனைத்துமே எதிலிருந்து தோன்றியது?
1. இயற்கை விதி மீறல்
2. உறுப்புக்களின் இயக்க குறைவு
3. கழிவுகளின் தேக்கம்
4. மருந்துகளால் கழிவுகளை அடைத்து வைத்தல்
5. ரசாயனங்களால் கழிவுகளை உருமாற்றுதல்
... போன்ற தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கு நாமே நோய்களை சம்பாதித்துக்
கொள்கிறோம்!
இயற்கை விதி மீறலை சரி செய்ய முயற்சி செய்யும் உடலை நாம் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்குகிறோம். நாம் என்ன செய்தாலும் உடல் ஒன்றை மட்டுமே செய்து வருகிறது.
அது தான் கழிவு வெளியேற்றச் செயல்!
உடல் எப்போதுமே கடமை தவறுவதில்லை.
மனித வாழ்க்கையில்
ஏற்படும் துன்பங்களுக்கும்,
நோய்களுக்கும் காரணம் அவனது உயிரில் உள்ள புரோகிராம் செய்யப்பட்ட நல்ல / பாவ பதிவுகளே காரணம் என நமது சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர்.
ஒரு கம்ப்யூட்டர்
செயல்பட நம்மால் செய்யப்பட்ட புரோகிராம் செய்த சாப்ட்வேர்கள் அதில் பதியப்பட்டு
அது எப்படி இயங்குகின்றதோ அதுபோல நமது வாழ்க்கை செயல்பட நம்மால் செய்யப்பட்ட வினைப்பதிவுகளே (புரோகிராம்களே)
நம்முள் பதியப்பட்டு
நாம் இயங்க காரணம் ஆகின்றது.
அதுபோல வியாதி என்பது செல்களில் உள்ள டி.என்.ஏ வில் உள்ளது.
அது கண்ணுக்கும்,
புறக்கருவிக்கும் எப்போதும் தெரியாது.
அதில் ஒன்று எழுந்தாலும், உயிரில் காட்டும்.
அது கண்ணுக்கும்,
கருவிக்கும், தெரியாது,
அந்த ஒன்றை வைத்து குறி மூலம் ஆன்மா பாதிப்பை உணர்ந்துக் கொள்ள முடியும், அந்த குறியை வைத்து தான் வியாதியை கண்டுபிடிக்கணும். ஏனென்றால் ஆன்மாவிற்கு வேறு வழியில்லை.
ஆகவே தான் அந்த குறிக்கு தக்க மருந்துகளை மருத்துவர்களின் அனுபவத்தில்
நோய்க்கு ஏற்றவாறு கொடுக்க வந்த நோய் தற்காலிகமாக போய் விடும்.
இயற்கையான,மரபணு மாற்றம் இல்லா உணவுகளை உண்டு நிம்மதியாக வாழ்வோம்.