Monday, November 8, 2021

இன்சுலின் என்பது என்ன?

 இன்சுலின் என்பது என்னஇன்சுலின் குறைபாடு என்றால் என்ன? இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?**

                            உடலில் அமைந்துள்ள பல்வேறு சுரப்பிகள் மூலம் சுரக்கப்படும் ரசாயன திரவங்களே ஹோர்மோன்கள் ஆகும். அதாவது குறிப்பிட்ட உறுப்புக்களும், களங்களும்  பிற உறுப்புக்களோடும், களங்களோடும் தொடர்பு கொண்டே இயங்குகிறது. அவற்றிக்கு இடையே ஒரு ஊடகமாக செயல்படும் ஒரு  கெமிக்கல் சிக்னல் தான் ஹோர்மோன் ஆகும். அவை ரத்தத்தில் கலந்து, ரத்தம் ஊடாக உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் முக்கியப் பணி, உடல்நிலை மற்றும் மனநிலை ஆகியவற்றை சீராக வைத்திருப்பதாகும்

 

                            இதில் கணையத்தில் இருந்து சுரக்கப்படும் ஒரு ஹோர்மோன் தான் இன்சுலின் ஆகும்பொதுவாக நாம் அரிசி, மாவு போன்ற மாச்சத்துக்கள் (Carbohydrates) நிறைந்த உணவுகளை உண்ணும் பொழுது அது சர்க்கரையாக அதாவது குளுக்கோஸாக  மாறி ரத்தத்தில் கலக்கிறது. அந்த குளுக்கோஸை  களங்களுக்கு கொண்டு செல்லும் தொழில்பாட்டை இன்சுலின் ஹோர்மோன் செய்கிறது

 

     அளவான மாவு சத்துக்களை உட்கொண்டு, நல்ல உடல் உழைப்போடு இருக்கும் ஒரு சராசரி மனிதருக்கு அவர் உடலில் சேரும் குளுக்கோசுக்கு இணையான அளவில் இன்சுலின் ஹோர்மோன் சுரந்து  இரண்டும் சேர்ந்து களங்களுக்கு சென்று சக்தியாக விரயமாகிறது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சீராக இருக்கும்.

 

        ஆனால் உடல் உழைப்பும் இல்லாமல், அதிகமாக மாவு சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளும் போது அதனை சக்தியாக மாற்ற கணையமானது இயல்புக்கு மாறாக அதிகமாக இன்சுலினை சுரக்கும் நிலைக்கு உந்தப்படுகிறது. இப்படி அதீதமான பணிச்சுமையால் கணையம் சோர்வுற்று ஒரு கட்டத்தில் போதுமான அளவுக்கு இன்சுலினை சுரக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. இதுவே இன்சுலின் குறைபாடு (insulin deficiency) என அறியப்படுகிறது. இந்நிலையில் தான் இரத்தத்தில் சேரும் குளுக்கோஸ் அதாவது சர்க்கரையானது  களங்களுக்கு கடத்தப்படாமல் இரத்தத்தில் அப்படியே தங்கி விடுகிறது. இதுவே நாளைடைவில் சர்க்கரை வியாதிக்கு வித்திடுகிறது

 

       அதே போன்று  உடலில் படியும் கொழுப்பானது நமது உடலில் சேரும் குளுக்கோஸை களங்களுக்கு கொண்டு செல்ல தடையாகி விடும் பொழுது அங்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை (insulin resistance) ஏற்படுகிறது

 

       அதே போன்று போதுமான அளவு இன்சுலின் இருந்தாலும், உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள் இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. அவை இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன. இதுவே இன்சுலின் எதிர்ப்புநிலை (Insulin resistance) என்று அறியப்படுகிறது. இதுவும் சர்க்கரை நோய்க்கு வித்திடும். இந்நிலையில் சர்க்கரையின் அளவும் அதிகரிப்பதோடு, இன்சுலின் அளவும் இரத்தத்தில் அதிகரிக்கும் இதனை Hyperinsulinemia என்று அழைப்பார்கள்இதனால் உடல் பருமன் உட்பட பல நோய்கள் வந்து சேரும்

 

      இந்நிலையில் ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டாலும் சர்க்கரையின் அளவு குறையாமலே இருக்கும். மேலும் மேலும் இன்சுலின் அளவை கூட்டும் பொழுது இரத்தத்தில் இன்சுலின் அளவும் சர்க்கரையை போன்று கூடிக் கொண்டே போகும்.   

 

      ஆகவே தான் நீரிழிவு நோயை ஒரு நோய் என்று கூறாமல் அது ஒரு இன்சுலின் குறைபாடு என்று அடையாளப்படுத்தப்படுகிறது

 

     இன்சுலின் குறைப்பாட்டை மட்டுமல்ல ஏனைய ஹோர்மோன் சம்பந்தமான நோய்கள் அனைத்துக்கும் ஒரே தீர்வு தான்.

 

                         மாவு சத்துக்கள் நிறைந்த வெள்ளை அரிசிகள், வெள்ளை மா, மற்றும் கொழுப்பு உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றீடாக கேழ்வரகு போன்ற தானியங்கள், தவிடு நீக்காத அரிசிகள், மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணல் வேண்டும்

 

                            உண்ணும் அளவுக்கு உழைப்பை அதிகரிக்கும் பொழுது களங்களுக்கு வேலை அதிகரிப்பதால், உடலில் சேரும் சர்க்கரையானது இரத்தத்தில் தங்காமல் எரிபொருளாக மாற்றப்பட்டு விரையமாக்கப்படும்.  உடல் உழைப்பு இல்லாதவர்கள் அரிசி, மாவு, கொழுப்பு உணவை தவிர்த்து தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், மீன் போன்றவற்றை உண்ணல் வேண்டும்போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்கு உறங்கி அதிகாலை விழிக்க வேண்டும்.  

 

                   முக்கியமாக உண்ணும் உணவுகள் மூலம் உடலில் சேரும் கலோரிகள்  சக்தியாக எரிக்கப்பட்ட வேண்டும். உடலில் தேங்கி விட்டால் நோய்களின் கூடாரமாக மாறி விடும். அதற்கு உடல் உழைப்பு, உடற்பயிற்சி, சுறுசுறுப்பான வாழ்வியல் மிக அவசியம்.