நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சூரியன்
இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பார்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள்
பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை, எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா,
சர்க்கரைப் பொங்கல்
சந்திரன்
பாற்கடலில் இருந்து தோன்றியவர் இவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்கும் தன்மை கொண்டவர். இவர் கடக ராசிக்கு அதிபதியாவார்.
திக்கு - தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கவுரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்
அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரரின் அம்சமாக தோன்றியவர். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியானவர்.
திக்கு - தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ,
சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
புதன்
இவர் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனின் குமாரர் ஆவார். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.
திக்கு - வடகிழக்கு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்
குரு
தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைத்து தேவர்களுக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம்,
சுண்டல்
சுக்ரன்
இவர் அசுரர்களுக்கு
குருவாக விளங்குபவர். இவரை ‘மழைக்கோள்’ என்றும் அழைப்பர். குரு கிரகத்தைப் போல இவருக்கு சுப கிரகமாக விளங்குபவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார்.
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்