சுகமான நினைவுகள்
சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.
80'ள்... 90'ள் ... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!!
ஐஸ் வண்டியின் பின் ஓடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.
பைண்டிங் செய்த புத்தகத்தை பள்ளிக்கு எடுத்துச் சென்ற கடைசி தலைமுறையும்
நாம் தான்.
சிறுவர் மலருக்கு ஏங்கி வெள்ளிக்கிழமை எப்போது வரும் என காத்திருந்த
கடைசி தலைமுறையும்
நாம் தான்.
கோவில் திருவிழாவில்
டிராக்டர் பெட்டியை மேடையாக்கி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை
ரசித்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
கஞ்சி போட்டுத் தேய்த்து... நீலத்தில் ஊற விட்டு... சிரட்டைக்கரி நிரப்பிய அயன் பாக்சால் துணியை அயன் செய்து போட்ட கடைசி தலைமுறையும் நாம் தான்.
பாட்டி, தாத்தாவிடம்
கதை கேட்ட கடைசி தலைமுறையும் நாம் தான்.
கிணற்றில் தண்ணீர் இறைத்த கடைசி தலைமுறையும்
நாம் தான்.
தட்டான், பொன்வண்டுகளை
பிடித்து தெருவில் விளையாடிய கடைசி தலைமுறையும்
நாம் தான்.
அம்மி, செக்குகளை மட்டும் உபயோகித்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
இரவைக் கழித்த கடைசி தலைமுறையும் நாம்தான்...
கேட்டில் ஏறி நின்றுகொண்டு அதை ஒற்றைக் காலால் திறந்தும், மூடியும் விளையாடிய கடைசி தலைமுறையும்
நாம் தான்.
கொய்யா மரத்தில் ஏறி அணில், கிளி கடித்த பழங்களை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாம் தான்.
தமிழ் சினிமா பாடல் வரிகள் சிறு சிறு புத்தகங்களாய் கிடைக்கும். அதை வாங்கி போட்டி போட்டு படித்த சூப்பர் சிங்கர்கள் அல்லவா? நாம்.
பூவரச இலையில் பீப்பி செய்து இசை வாசித்த கடைசி தலைமுறையும்
நாம் தான்.
தட்டான், முயல் பிடிக்க காடுகளில் அலைந்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச்
சேர்த்து வைத்திருந்ததும்
நம் தலைமுறை தான்.
சிம்னி விளக்கு பயன்படுத்திய கடைசி தலைமுறையும்
நாம் தான்.
ஊருக்குள் வரும் கரடி, குரங்குகளை பார்த்து முதலில் பயந்தாலும், பிறகு அதனை பின்தொடர்ந்து போக்கு காட்டிய கடைசி தலைமுறையும்
நாம் தான்.
வைக்கோல் போர்களில் துள்ளிக்குதித்து பிறகு எரிச்சல் தாங்க முடியாமல் தள்ளாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.