எனக்கொரு சந்தேகம்
தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்....
ஆனால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்....
அப்படியென்றால் யானை ஏன் இன்னும் எடை குறையவில்லை?
தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும் அப்படியென்றால்....
திமிங்கலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவார்கள்
என்றால்,
புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்பில் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து
வந்தது?
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடி வரும் - அப்படியென்றால்....
நியு ஸ்பேப்பர் போடுபவர் ஆடி காரில் அல்லவா சுற்றவேண்டும்?